‘பேட்ட’ வெற்றி அளித்த உற்சாகத்தோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இன்னும் பெயரிடப்படாதா இப்படத்தை இப்போதைக்கு ரஜினி-166 என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். படம் குறித்து பெரிதாக எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தநிலையில், தற்போது சில செய்திகள் கசிந்திருக்கின்றன.

ரஜினி 166-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், ‘பேட்ட’ திரைப்படத்துக்கு பிறகு இதற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

வெளியாகியிருக்கும் இந்தத் தகவல்களில் எது உண்மை, எது புரளி என்ற குழப்பத்தோடு அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.