இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவில் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 50-வது ஆண்டாக கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடக்க உள்ளது. இதனை ஒட்டி, இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற சிறப்பு விருதை வழங்குவதாக அறிவித்தார்.

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை அறிந்த ரஜினிகாந்த் மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.