இறப்பு அல்லது இடப்பெயர்வு மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச உரிமையென்றால் உங்களால் என்ன செய்ய முடியும். சிரியாவில் வாழும் 50 லட்ச குழந்தைகளின் வாழ்க்கை இப்படியாகத்தான் இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா. குழந்தைகள் அமைப்பு (யுனிசெஃப்) வெளியிட்ட அறிக்கையில் சிரியாவில் ஒவ்வொரு 10 மணிநேரத்திற்கும் ஒரு குழந்தைகள் கொல்லப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 2014 முதல் 2019வரை கிட்டத்தட்ட 5427 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிரியா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 9 வயதுடைய குழந்தைகளுக்கு போர்களைதவிர வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தந்துள்ளது.

இது குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பு (யுனிசெஃப்) தலைவர் கிறிஸ்டியன் ஷ்னைடர் கூறுகையில், “மனிதாபிமானம் போர்களை ஒருபோதும் முடிவுக்கு கொண்டுவருவதில்லை, வேண்டுமானால் அது போர்களின் தன்மையைக் குறைக்கலாம்” என்றார். மேலும் வருகிற வருடங்களில் இதுபோன்ற எண்ணிக்கையில் குழந்தைகளின் இறப்பு விகிதம் இருக்காது என்றும் நிறைய நிதிஉதவிகள் மூலம் இக்குழந்தைகளை நாங்கள் காப்பாற்றி வருகிறோம் என்றும் கூறினார்.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய ஜனாதிபதி பஷர் அசாத் எதிரான பனிப்போர் காரணமாக சிரியா, ஈராக் நாடுகளின் மீது அமெரிக்க அரசு கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. பஷர் அசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் அரசுகள் போர்களத்தில் நின்றன. இதனால் அமெரிக்க படைகள் குறிப்பாக இஸ்லாமிக் ஸ்டேட்டை குறிவைத்து தாக்குதல்களைத் தொடர்ந்து நடந்திவந்தது. இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவை ஈராக் மற்றும் சிரியா சுற்றுவட்டாப்பகுதிகளே ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிரியா தங்களது போர் நடவடிக்கைகளை துருக்கியை நோக்கி மேற்கொண்டுவந்தது. இதனால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் மட்டும் மொத்தமாக 9 லட்சம் குழந்தைகள் தங்கள் வாழும் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது. சுமார் 4 மில்லியன் அகதிகளை துருக்கி அரசு, ஐரோப்பா நோக்கி பயணிக்க அனுமதித்தது, இதனால் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பா நாடுகளின் எல்லையில் குவிந்தனர். சுமார் 1,500 குழந்தை அகதிகளை அழைத்துச் செல்லுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை ஜெர்மனியும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

யுனிசெப்பின் கணக்கின்படி 2014 முதல் 2019 வரை சிரியாவில் உள்ள குழந்தைகள், சுமார் 2.6 மில்லியன் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 2.5 மில்லியன் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 2.8 மில்லியன் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி கேள்விகுறியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் யுனிசெப்பின் அறிக்கையில் குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைவு விவரங்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

நன்றி: https://indianexpress.com/article/world/5-million-syrian-children-in-need-due-to-war-says-un-6313700/