ஆளும் மத்திய அரசை எதிர்த்தும் கண்டித்தும் நாளுக்கு நாள் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பல திட்டங்களில் மாநில அரசுகளுக்கு முரண்பட்டதாகவே உள்ளது. இந்நிலையில் மத்திய அரசுடன் சமரசமாக இயங்கும் மாநில அரசுகள் தங்கள் மாநில சுய ஆட்சியை விட்டுக்கொடுத்து சில முடிவுகளுக்கு ஒத்துப்போகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைபாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசு தனது மூன்றாண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரபேட்டையில் நடந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் போலிஸாரால் தாக்கப்பட்டனர்.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் போராட்டத்தைக் கண்காணிக்க மத்திய அரசு ஒரு புது டெக்னிகை கொண்டுவரவுள்ளது. அதாவது முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போராட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறை நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான மத்திய அரசு தேசிய தானியங்கி முக அடையாள கண்டுபிடிப்பு முறை என்ற தரவுத் திரட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து கோரியுள்ளது.

போராட்டங்களின் போது காவல்துறையினர் எடுக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எளிதில் அடையாளம் காணப்படுவர்.

முக அடையாள தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் காவல் துறையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதுவும் சரிதான்… இனி தேசவிரோதிகள் ஊடுறுவதை சரியாக முக அடையாளங்கொண்டு கண்டிபிடித்துவிடலாம்.