12வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி துடிப்பான பல இளம் வீரர்களை தேர்வுசெய்தது. கடைசிவரை பட்டியலிலிருந்த ரிஷப் பண்ட் மற்றும் அம்பதி ராயுடு இருவரும் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக ஷிகர் தவான் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். இவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். சில நாட்களுக்கும் முன்பு தொடரில் பங்கேற்ற விஜய் சங்கரும் காயம் காரணமாக இந்தியாவுக்குத் திரும்பினார். இந்நிலையில் அம்பதி ராயுடு அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக மாயங்க் அகர்வால் தற்போது இணைந்துள்ளார்.

ஏற்கனவே அணியில் இடம்பிடிப்பது தொடர்பான சர்ச்சையில் 3 டைமென்ஸ்னல் குவாலிட்டி அம்பதி ராயுடுவிடம் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. கடைசிவரை அணியில் இடம் கிடைக்காத அதிருப்தியில் திடீரென்று அம்பதி ராயுடுவை தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு (33). இவர் இந்திய அணிக்காக 55 ஒருநாள் (1694 ரன்கள்), 6 டி-20 (42 ரன்கள்3) போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கிடையில் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து பங்கேற்பார் என தெரிகிறது.