2019 ஜனவரி வரை வருடத்தில் மூன்று மாதம் 24 மணி நேர சூரியனையும் , மூன்று மாதம் 24 மணி நேர இரவையும் கொண்ட ஒரு இடத்தில் இருப்பீர்களா என்று கேட்டால் முடியாது என்று சொல்லி இருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் எனக்கு ஆராய்ச்சியாளனாக வேலை கிடைத்தது. அந்த ஊரை பற்றிப் படிக்க ஆரம்பித்தேன் நெறய.அடுத்த 6 மாதத்தில் என் வாழ்வின் ஒரு பகுதியை அந்த நகரத்தில் துவங்கினேன்.

அனைவரும் பூகோளப் பாடத்தில் படித்து இருப்போம் , நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே என்று. ஆனால் சூரியனே 2 மாதம் உதிக்காத நாடும் நார்வே என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. முதலில் எனக்கு அதிர்ச்சி அளித்த தகவலே அதுதான். நவம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை 60 நாள் ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள ஊர்களில் சூரியன் உதிக்காது.

அதிலும் வடக்கு நார்வே மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பிரதேசம்.உலகின் வட ஆர்க்டிக் பிரதேச எல்லைக்குட்டப்பட்ட பெரு நகரம் ட்ரொம்சோ. இந்த நகரத்தின் அட்சரேகை அளவிற்கு உலகில் வேறு எங்கும் பெரு நகரங்கள் இல்லை. இங்கு உள்ள பல்கலைக்கழகம்தான் உலகின் வடகோடியில் உள்ள பல்கலைக்கழகம் ஆகும். இங்குதான் உலகின் அதிகமான சால்மன் மீன் உற்பத்தி நடைபெறுகிறது.

Troms என்பது மலைகள், தீவுகள் மற்றும் மலைகளுக்கு இடையே உள்ள ஒரு அழகான நகரமாகும், ஒரு கண்கவர் வரலாறு, ஒரு கலகலப்பான, வண்ணமயமான நகர மையம், உள்ளடக்கிய இரவு வாழ்க்கை கொண்ட நகரம்.. நள்ளிரவு சூரியனையும் வடக்கு ஒளியையும் துரத்திக்கொண்டு ஆர்க்டிக் வனப்பகுதிக்குள் நுழைவதற்கு இந்நகரத்தை ஒரு வாசலாகப் பயன்படுத்தலாம்.

சூரியனிலிருந்து, சூரியத் துணிக்கைகள் அதி கூடிய எண்ணிக்கையில் பிரபஞ்ச வெளியில் வீசப்படும்போது, அவை வேகமாக நகரும். இவை பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியிலிருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் இந்தச் சூரியத் துணிக்கைகள் மோதும்போது உருவாகும் ஆற்றலே, இத்தகைய ஒளிச் சிதறல்களாய் உருவாகி, வானத்தில் அழகான ஒளிக்கற்றைகள் அசைவது போன்ற தோற்றத்தைத் தரும் அரோரா ஒளியைக் காணலாம்.

Tromsøக்கு ஆரம்பகால பயணிகள் Tromsø மக்களின் அதிநவீன நிலையில் திகைத்தனர். அவர்கள் அதிக உச்சரிப்பு இல்லாத பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் வரவேற்கப்பட்டனர், அது அவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. உலகின் வடகோடியில் உள்ள ஒரு நகரத்தில் இத்தனை நவீன கலாச்சாரமா என்று. அதனால் தான் 1904 ஆம் ஆண்டில், ஜெர்மன் வருகையாளரான ஜி. ஹார்டுங் நகரத்திற்கு “வடக்கின் பாரிஸ்” என்று பெயரிட்டார்.

ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 350 கிமீ தொலைவில், 68 நாட்களுக்கு ட்ராம்சோவில் நள்ளிரவு சூரியனின் கதிர்களைக் காணலாம்.இதன் பொருள் இரண்டு மாதங்கள் முற்றிலும் இருள் இல்லாதது. ட்ராம்சோ நகர மக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக அந்த மூன்று மாதம் மட்டுமே கிடைக்கும் இயற்கையான வைட்டமின் Dக் காக அதிக உடல் வேலைகளை, மாரத்தான், நள்ளிரவு கச்சேரி போன்ற நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் பெறுகிறார்கள்.

இந்த ஆர்க்டிக் வட்டமும், அண்டார்டிக் வட்டமும் எதிர் எதிர் துருவங்கள். எனவே மே முதல் ஜூன் வரை இங்கே 24 மணி நேர சூரியன் இருக்கும்போது அண்டார்டிகாவில் 24 மணி நேர இரவாக இருக்கும். இதன் தாக்கம் காரணமாகத் தான் உலகில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் மட்டுமே மே- ஆகஸ்ட் வரை குளிர்காலமாக இருக்கும்.

இங்கே தான் பூமி என்பது நீள்வட்ட வடிவம் என்பதை மீண்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டி இருக்கிறது. இதனால்தான் உலகம் முழுதும் கால நிலைகள் மாறுகின்றன என்பதை சிறுவயதில் படித்த ஞாபகம் வரும். துருவ இரவு என்பது பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக இரவு நேரம் நீடிக்கும் ஒரு நிகழ்வாகும். இது துருவ வட்டங்களுக்குள் மட்டுமே நிகழ்கிறது.

நவம்பர் மாதத்தில் சூரியன் இங்கே இருக்காது, அங்கே அண்டார்டிகாவில் 24 மணி நேர சூரியன் இருக்கும். அப்போதுதான் ஆஸ்திரேலியா மக்கள் கோடைகாலத்தை அனுபவிப்பார்கள்.

போலார் நைட் சீசன் ஒவ்வொரு ஆண்டும் டிராம்சோவில் நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை நீடிக்கும். இருப்பினும், நகரைச் சுற்றியுள்ள உயரமான மலைத்தொடர்கள் காரணமாக, உண்மையில் நவம்பர் 21 முதல் ஜனவரி 21 வரை இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் சூரியன் உதிக்கவே உதிக்காது . காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு நுட்பமான அந்தி வெளிச்சம் மட்டுமே இருக்கும் . இதன்காரணமாக ஏற்படும் மனச்சோர்வைப் போக்க மக்கள் சில நிகழ்வுகளை நடத்துவர் அல்லது கிழக்கு நோக்கிப் பயணம் செய்வர். வருடத்தின் 9 மாதங்கள் குறைந்தபட்சம் வைட்டமின் டி எடுக்காமல் உங்களால் இங்கே இருக்க இயலாது. மேலும் சால்மன் மீன் மற்றும் சிகப்பு இறைச்சி சாப்பிடுதல் முக்கியம் இங்கே, இல்லை என்றால் மல்டி வைட்டமின் டேப்லேட்ஸ் எடுத்து கொள்ள வேண்டும்.

ட்ரோம்ஸ்டேலன் தேவாலயம் அல்லது ஆர்க்டிக் கதீட்ரல் என்பது நார்வேயின் Tromsø நகராட்சியில் உள்ள நார்வே தேவாலயத்தின் ஒரு பாரிஷ் தேவாலயம் ஆகும். இது Tromsø நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள Tromsdalen பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது நார்ட்-ஹலோகாலாண்ட் மறைமாவட்டத்தில் உள்ள ட்ரொம்சோ டோம்ப்ரோஸ்டியின் (ஆர்ச்-டீனரி) ஒரு பகுதியாக இருக்கும் டிராம்சோய்சுண்ட் பாரிஷிற்கான தேவாலயம் ஆகும். நவீன கான்கிரீட் மற்றும் உலோக தேவாலயம் 1965 ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர் ஜான் இங்கே ஹோவிக் என்பவரால் வரையப்பட்ட திட்டங்களைப் பயன்படுத்தி நீண்ட தேவாலயப் பாணியில் கட்டப்பட்டது. தேவாலயத்தில் சுமார் 600 பேர் அமரலாம். வருடத்தின் 7-8 மாதங்கள் snow இருக்கும். அதுவும் 2அடி முதல் 15 அடி வரைகூட இருக்கும். சுத்தப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் கடல் எப்போதும் உறையாது. அதனால் கப்பல் போக்குவரத்து வருடம் முழுதும் நடக்கும். ரஷ்யா போல உறைபனி கடல்கள் இங்கே இல்லை.

நவம்பர் முதல் ஜனவரி வரை சூரியன் இல்லாத காரணத்தால் இங்கே வசிக்கும் மக்கள்கூட தெற்கு நோக்கிப் பயணம் செல்வார்கள். அந்த 24 மணி நேர இரவு அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கும். இதனால் இவர்கள் அதிகம் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள்.

 

seshathiri.d@gmail.com