கன்னிகா இதோடு பத்துமுறை இவன் அலைபேசிக்கு அழைப்பு கொடுத்து விட்டாள். இவன் அவளை அழைத்து பதில் ஒன்றும் சொல்லாமல் பல்லை வெறுவிக்கொண்டு வெள்ளரித்துண்டை மென்றான். எல்லாமே பேசி முடித்தாயிற்று. எல்லாமும் மாதத்தில் ஒருமுறையேனும் நடைபெறுவது தான். இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு நிம்மதியாய் இருக்கலாமென பல சமயங்களில் நினைத்துக்கொள்கிறான் தான். இருந்தும் இந்தப் பைத்தியக்கார உணர்ச்சி மனதில் தோன்றிவிட்டது என்றால் நேரம் காலம் பார்ப்பதில்லை.

இன்னமும் கோட்டரில் கால்வாசி அளவு மீதமிருந்தது. அதை டம்ளரில் உடனேயே அடுத்த சிகரெட் பற்ற வைக்காமல் ஊற்றி தண்ணீர் கலந்தான். கலந்ததும் உடனே எடுத்து ஒரே கல்ப்பில் ஊற்றிக் கொண்டு கடைசி வெள்ளரித்துண்டை எடுத்து வாயில் போட்டான். ஒரு முட்டை சாப்பிடத் தோன்றியது. கடையில் அமர்ந்திருந்த ராசுவிடம் முட்டை ஒன்னு என்று ஒருவிரல் நீட்டி சைகை செய்தான். ’பெப்பர் போடவா வேணாமா?’ என்றொரு கேள்வி இவனை நோக்கி வந்தது. இது என்ன சல்லித்தனமான கேள்வி? சரக்கு வீச வந்தவன் பெப்பர் போடாமல் முட்டை சாப்பிடுவானா? தொட்டதற்கெல்லாம் இவனுக்கு எரிச்சல் வந்தது இன்று. அப்போது மீண்டும் இவன் அலைபேசி கத்தியது. மேல்பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தான். கன்னிகாதான்! அடக்கருமம் புடிச்சவளே! நான்தான் வர்றேன்னு சொல்லிட்டன்ல.. என்ன மசுத்துக்கு கூப்புட்டே இருக்கா இவொ?

நான்காய் கீறி பெப்பரோடு வந்த முட்டையை கபக்கென வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டான். கன்னம் வீங்க தின்று விழுங்கியவன் கேனில் மீதமிருந்த தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்து கொப்பளித்து துப்பினான். இதையேண்டா கடைசியா வாயில் போட்டோம்? என்றிருந்தது அவனுக்கு. மீண்டும் கொப்பளித்து துப்பி விட்டு ராசுவிடம் பில்லுக்கான தொகையைக் கொடுத்து முடித்தவன் டப்பாவிலிருந்து கொய்யா மிட்டாய் இரண்டை எடுத்து வாயில் போட்டு மென்றான். இப்போ கொஞ்சம் வாய் துர்நாற்றமில்லாமல் இருப்பதாய் உணர்ந்தான்.

“நாளைக்கி மத்தியானம் வர்றப்ப எனக்கு ரெண்டு ரெண்டரைக் கிலோ வர்றாப்டி ஒரு சேவலோ வெடையோ கொண்டாந்துடுங்க!” என்றான் ராசு. இவன் ‘சரி’யென அவனுக்குத் தலையை ஆட்டினான். வெயிலுக்கு கிர்ரென போதை மண்டையில் ஏறிவிட்டதை உணர்ந்தான். வேப்பை மரத்தடியில் நின்றிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்தவன் விர்ரென மண்பாதையில் செலுத்தினான். தார்ரோட்டிற்கு வருகையில் இருபுறமும் கவனித்து நிதானமாய் கடந்தவன் மிகப்பொறுப்பான வாகனஓட்டியாகத் தன்னை உணர்ந்து பெருமிதப்பட்டான்.

குறுநகரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் டாஸ்மார்க் கடையிது. குறுநகரை விட்டு மூன்று கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்தது. இங்கு தனியாக யாரும் பார் எடுத்து தீம்பண்டங்களை விற்பதில்லை. ரெண்டு பெட்டிக்கடைகளும் நிழலுக்கு இருபது வேப்பை மரங்களும் ஆங்காங்கு நின்றிருக்க பல நிதானக் குடிகாரர்களுக்கு வசதியாய் போயிற்று. குறுநகரை நெருங்கும் பிரதான சாலை அருகே மூன்று பாதைகள் பிரியுமிடம் உள்ளது. அங்கே அவ்வப்போது குடித்து விட்டு வரும் குடிவிரும்பிகளின் வாகனங்களை நிறுத்தி வாயை ஊதச் சொல்லி கேஸ் எழுத இரண்டு மூன்று காக்கி உடுப்புக்காரர்கள் நின்றிருப்பார்கள். மதியநேரத்தில் அவர்கள் அங்கே இருப்பதில்லை என்பதால் சுற்றுப்பாதையில் வராமல் நேராகவே வந்திருந்தான்.

இவனுக்கு சமீப காலங்களில் ஏழரை உச்சத்தில் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. பெருமாள் கோவிலுக்கு சனிக்
கிழமை போய் விளக்கு பற்றவைத்துக் கும்பிட்டால் ஓரளவு பிரச்சனைகள் தீருமென ஒரு மளிகைக் கடைக்காரன் இவனுக்கு சொல்லியிருந்தான்.

இவன் மண்டையில் அது ஏறாமல் அவன் துணைவியாரைப்பற்றி அவனிடம் விசாரித்துக்கொண்டிருந்தான். ‘எங்க இன்னிக்கி வீட்டுல.. ஊருக்கு கீது போயிட்டாங்களா?’ என்று! அவன் மனைவி தான் எப்போதும் இவனுக்கு சாமான்கள் கொடுப்பவள். இவன் இல்லாத சமயங்களில் ‘ஊட்டுக்
காரரு சாமத்துல காரியமெல்லாம் பண்டறாருங்களா?’ என்றே பேசிவிடுவான்.

அவள் முடிக்கற்றைகள் கறுகறுவென டோப்பா கவிழ்த்தது போன்றே இருக்கும். போக இடுப்பின் கீழ்வரை அது தொங்கும். நல்ல ஒல்லிப்பிச்சான் கண்மணி அவள். புன்னகைத்தபடியே உருளைக்கிழங்கை எடை போட்டபடி ‘நீங்க எப்பயும் இப்பிடியே தான் பேசுவீங்களாண்ணா? அக்கா வீட்டுல ஒன்னுஞ் சொல்ல மாட்டாங்களா?’ என்று இவனிடம் எதிர்க்கேள்வி கேட்பாள் கண்மணி. கண்மணிக்கு ஏழாப்பிலும் எட்டாப்பிலும் படிக்கப்போகும் இரு பையன்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் இவனுக்கென்ன?

“அன்னைக்கி ஒரு நாளு ஒரு புள்ளையோட கடைக்கி வந்து சாமான் வாங்கீட்டு போனீங்க தான அண்ணா? அந்தப்புள்ளை யாரு? அக்கா ஊட்டுல ஒன்னுஞ் சொல்ல மாட்டாங்களா?” என்பாள் கண்மணி. “நீங்க எப்போ நம்ம வண்டீல ஏறுவீங்கன்னு கெனா கண்டுட்டே இருக்கேணுங்கொ! நானும் நாலு வருசமா உங்க கடையிலயே ஜாமான் வாங்க வந்து போயிட்டிருக்கேன்! ஆனா உங்க அழகு இந்த ஊர்ல எந்த மளிகைக் கடைக்காரிக்கும் கிடையாது தெரியுங்ளா! உங்களைப் பாத்தாவே எனக்குப் பத்திக்கும்!” என்பான் இவன். கண்மணி ஈறு தெரிய கடைக்குள் நின்றிருந்தபடியே சிரிப்பாள். எப்போ கடைக்குள் திடீரென முட்டிப்போய் ‘பிசைவு!’ நிகழ்த்தி விடுவோமோ என்று இவனுக்கே பயமாய் இருக்கும். இருதயம் அதை நினைத்தாலே படக் படக்கென துடிக்க ஆரம்பித்துவிடும்.

இவன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கடை தாண்டி மெயின் ரோட்டில் ஏறியது. சந்தைக்கடை சாலையில் ஸ்கூட்டரை நிதானமாக குண்டு குழியில் ஓட்டி வந்திருந்தான். போதையில் வேகமாக வந்தால் பெட்டியினுள் கிடக்கும் ஆப் பாட்டிலும் கோட்டர் பாட்டிலும் டங்கென மோதி உள்ளேயே பொங்கல் வைத்துவிடும்! ஏற்கனவே பலமுறை மறந்து வண்டியை வேகமாக முறுக்கி முட்டைகள் எல்லாம் உடைந்திருக்கின்றன. வீட்டில் சம்சாரம் என்கிற மின்சாரம் ‘பொரியல் செய்யுறதுக்கு தானுங்க ஆவுமிது!’ என்று வடைச்சட்டியில் அப்படியே எடுத்து ஊற்றும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றது. அது முட்டை! இது பாட்டில்!

கன்னிகா வீடு வீதியின் கடைசியில் இருக்கிறது. ஜட்டி பாக்கெட்டில் கிடந்த இவன் அலைபேசி மீண்டும் கதறியது. கன்னிகாவாகத்தான் இருக்கும்! வீதியில் நின்றிருந்த மரத்தடியில் சில பெண்களும் ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். இவன் அவர்களை கடக்கையில் ‘இவன் தான் கன்னிகா ஊட்டுக்கு அடிக்கடி வந்து சொருவீட்டு போறவன்!’ என்றே இவனைப் பார்ப்பதாய் நினைத்தான். கூடவே ‘இதெல்லாம் தேவையா?’ என்றும் நல்லபடியாக நினைத்துக் கொண்டான்.

காங்க்ரீட் சாலையில் திருப்பியவன் மூன்றாவது வீட்டின் சந்தில் வண்டியைக் கொண்டி நிப்பாட்டினான். சாலைக்குள் ஏற்றி நிப்பாட்டி விடலாம். கன்னிகாவின் பையன் இருந்தால் அந்தக் காரியத்தை செய்யட்டுமென நினைத்தவன் வாசலில் வண்டியை நிப்பாட்டி விட்டு திறந்திருந்த படலின் வழியே சென்றான். இரும்புக்கதவு ஒந்திரித்து சாத்தப்பட்டிருந்தது. டிவி சப்தம் வெளியே கேட்டது. கதவை ‘டொர்ர்’ என்ற ஒலியெழும்ப சற்று நீக்கினான்.

கன்னிகா ஒருகட்டிலிலும், அவள் பையன் ஒரு கட்டிலிலும் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிவியில் எம்ஜிஆர் நடித்த படம் ஓடிக்கொண்டிருந்தது. தலையுயர்த்திப் பார்த்த கன்னிகா ‘‘போன் அடிச்சா எடுக்க மாட்டீங்களா? நானும் கூப்டுட்டே இருக்கேன்.. எடுக்கறக்கு என்ன வந்துச்சு?” என்றாள். பையன் கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்து ‘வாங்க!’ என்றான் இவனைப்பார்த்து. வீட்டின் நடு மையத்தில் கிடந்த சேரில் அவன் அமர்ந்தான். பையனிடம் ‘வண்டியை எடுத்து வடபக்க சாலையில நிறுத்தீட்டு பொட்டீல சரக்கிருக்கும் எடுத்துட்டு வா!’ என்றான். பையன் எழுந்து கிளம்பினான்.

பையன் வெளியில் சென்றதும் கன்னிகா இவனைப்பார்த்தாள். ‘ஏன் இங்க வந்து உக்கார மாட்டீங்களா?’ என்று கட்டிலில் தள்ளி ஓரக்காலில் படுத்தாள். இவன் டிவியில் எம்ஜிஆர் கத்திச் சண்டைப் போடுவதை பார்த்தான். டீவி ஸ்டேண்டின் கீழ் ஆப் பாட்டில் ஒன்று பாதி குடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். ஆக, மொதல்லயே இருவரும் குடித்திருக்கிறார்கள் என்று நினைத்தான்.

கன்னிகா நைட்டியில்தான் படுத்திருந்தாள். உள்பாவாடை அணிந்திருக்கிறாளா? என்று நோட்டமிட்டான். அது இவனுக்கு பிடிக்காது. உள்பாவாடை உடலின் நெகு நெகுப்பை உணரச் செய்யாது இவன் கைகளுக்கு. கொடுமை! டைட்டான ஜாக்கெட்டும் நைட்டிக்குள் இருந்தது. இது அதைவிடக் கொடுமை.

“இன்னிக்கி என்ன எல்லாருமே லீவு போட்டுட்டு ஊட்டுல படுத்திருக்கீங்க? வேலைக்கிப் போகலையா?” என்றான்.

“கம்பெனி வேனு ஏழு மணிக்கே வந்துருது. நேத்து முட்ட முட்ட குடிச்சதால காத்தால எந்திரிச்சி சோறே ஆக்குல! ‘‘இப்பத்தான் ஆக்கி வச்சிருக்கேன். காத்தால சோறும் திங்கல! நாளைக்கி போனாப்போவுதுன்னு படுத்துட்டோம்!”

“மொதல்லயே ஏத்தியாச்சாட்ட இருக்குதே!” என்று இவன் கேட்க, பையன் பாட்டில்களோடு வீட்டினுள் வந்தவன்.. ‘இப்பத்தானுங்க நடந்து போயி ஒரு ஆப் பாட்டிலு வாங்கீட்டு வந்தேன்! திங்கறதுக்கு மாட்டுச் சில்லியும் கொடலும் வாங்கியாந்தேன்!” என்றான்.

“சரிப்போயி சொம்புல தண்ணி எடுத்துட்டு வா! ஆமா வூட்டுல எங்கே? வேலைக்கிப் போயிடுச்சா?”

“அதெங்க வேலைக்கி போச்சுங்க? அந்தப்பக்கம் கோயல் திண்டுல கீது உக்கோந்துட்டு இருக்கும்.. டேய்! அப்பனை பிலிசிறா!” என்றாள் கன்னிகா. தண்ணீர் சொம்பைக் கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தவன் அப்பனை கூப்பிடச் சென்றான்.

“அதும் இன்னும் சோறு காத்தால புடிச்சு திங்கல!” என்றவள் கட்டிலில் இருந்து எழுந்து அவிழ்ந்து கிடந்த தலைமுடியை கொத்தாய்ப் பிடித்து சுருட்டி முடிச்சிட்டு வந்து அமர்ந்தாள். அமர்ந்தவள் கதவை ஒருமுறை பார்த்துவிட்டு இவன் தொடையில் கைவைத்து நீவினாள். கையை மேலே ஏற்றிக் கொண்டு போனாள்.

“குடிச்சுட்டுதான் வந்தீங்களா?”

“குடிக்காம வருவனா நானு? அப்பத்தான் தைரியமா இங்க வரமுடியும். வர்றப்ப பக்கத்து ஊட்டுக்காரி வாசல்ல நின்னுட்டு என்னையே வெறிக்கப் பாக்குறா!”

“அவ பார்த்தா உங்களுக்கென்ன வந்துச்சு? யாராச்சிம் எம்பட வாசலுக்கு வந்து கேட்டுருவாளுங்களா? என்னோட ஊட்டுக்காரனே கேக்காத கேள்விய இவளுங்க யாரு என்னை கேக்க?” பையன் வரும் சப்தம் கேட்டு கையை எடுத்துக் கொண்டு பாட்டிலை எடுத்து திருகினாள் கன்னிகா.

பின்பாக இரண்டு டம்ளரில் வழிசூர சரக்கை ஊற்றினாள். ஒன்றை எடுத்து அண்ணாந்து வாயில் ஊற்றிக்கொண்டவள் பாவாடையை உயர்த்தி வாயை துடைத்துக் கொண்டாள். பின்பாக எழுந்து இன்னொரு டம்ளரை எடுத்துப் போய் கதவருகில் நின்றிருந்த தன் வீட்டுக்காரனுக்கு கொடுத்தாள். இது எப்போதும் நிகழ்வதால் இவன் இவனுக்கான சரக்கை ஊற்றி தண்ணீர்கலந்தான். பையன் கொடல் வறுவலையும், சில்லியையும் எடுத்து வந்து முன்னால் பரப்பி அமர்ந்தான் சம்மணமிட்டு.

வட்டலில் சாப்பாடு போட்டுக் குழம்பு ஊற்றி வீட்டுக்காரனுக்குக் கொடுத்தாள் கன்னிகா. இனி அந்த மனிதன் சாப்பிட்டு முடித்ததும் அவத்திக்கே படுத்து தூங்க ஆரம்பித்துவிடுவான். இவனுக்குத்தான் சிரமமாய் இருக்கும். வெளியே வீட்டுக்காரன் கிடக்கவே கதவை சாத்துவாள். பையனும் நனைத்து முடித்ததும் வடபக்கம் கிடக்கும் கட்டிலுக்கு சென்றுவிடுவான். அப்படித்தான் அன்றும் நடந்தது. கதவை சாத்தியவள் அணிந்திருந்த நைட்டியை உருவி சேர் மீது போட்டாள். பின்பாக ஜாக்கெட்டை கழற்றினாள். இவன் எழுந்து செல்போனை ஆன் செய்து டிவிக்கு அருகில் வைத்தான்.

“இதை எதுக்கு எப்ப வந்தாலும் படம் புடிக்கிறீங்க? அன்னைக்கி எடுத்ததெல்லாம் என்னாச்சு?” என்றாள் கட்டிலில் படுத்தபடி.

“அதை வச்சிட்டே இருப்பாங்களாடி? பெரிய பொண்ணு எதாச்சிக்கிம் போனை எடுத்து பார்த்துட்டா என்னாவுறது?”

“பின்ன எடுக்காம உடறது!”

“அதெப்படி? போன்ல எவன் எவனோ செய்யுறதையெல்லாம் பார்த்து ரசிக்கவா நான் பொறந்தேன்? நானே எம்படத்தை பாத்துக்கறேன்! அப்புறம் அழிச்சிடறேன்!” என்றவன் கட்டிலில் அவள் முழுசாக கிடக்கிறளா? வியூவில் அவள் முழுதாக தெரிகிறாளா? என்று சரிபார்த்து வீடியோவை ஆன் செய்து விட்டு வந்து அவள் அருகில் படுத்து தன் மீது தூக்கி போட்டுக் கொண்டான். அவளாகவே இவன்மேல் படுத்திருந்தபடியே இவன் லுங்கியைக் கையால் உயர்த்தினாள்.

“என்ன இருந்தாலும் உம்பட ஊட்டுக்காரனை வாசல்ல படுக்க வச்சுட்டு இப்பிடி நாம கெடக்குறது நல்லா இல்லடி.. எனக்கு ஏனோ சங்கடமா இருக்குது!”

“அது அதுபாட்டுக்குத் தூங்குது! உங்களை எதாச்சிம் வந்து இப்ப கேக்குதா! இதேன் இன்னிக்கி இப்பிடி படுத்துருச்சு? எச்சா குடிச்சாவே உனக்கு ஆகாதில்லய்யா.. செஞ்சு முடிச்சுட்டு ஏத்திக்க வேண்டியதுதானே!”

“ஆமா.. இன்னிக்கி எனக்கு மூடே இல்லடி!”

“அப்படின்னா உனக்கு வேற எவளோ கெடச்சிட்டாய்யா! எவ கிட்டய்யா போறே?” என்று அவள் கேட்கவும் சுத்தமாய் வெறுத்துப்போய் எழுந்தான்! அவளோ இவனை இழுத்துப் போடும் முயற்சியிலேயே இருந்தாள். ஒரு கட்டத்தில் உதறிவிட்டு எழுந்தவன் தன் லுங்கியை சரியாய் அணிந்து கொண்டு போய் சேரில் அமர்ந்தான்.

இந்த மாதிரி இவனுக்கு எப்போதேனும் நடந்துவிடுகிறது. போதை அதிகமானால் சில சமயம் அற்புதமாகவும் சில சமயம் தொய்ந்து போயும் ஆகிவிடுகிறது. இனி என்ன முயற்சித்தாலும் தோல்வி உறுதி தானென நம்ப ஆரம்பித்தான். கட்டிலில் அம்மணமாய் கிடந்த கன்னிகா.. இவனைத் திரும்பிப் பார்த்துக் குரலை உயர்த்தினாள். இவனுக்கு அவளை மிதிக்கலாமென தோன்றியது. ஆனால் அதற்கான இடமல்ல இது. தலைமேல் சுற்றும் ஃபேன் இன்னமும் கொஞ்சம் வேகமாய் சுற்றினால் நன்றாயிருக்குமென நினைத்தான். வெளியே அவள் வீட்டுக்காரன் இருமும் சப்தம் கேட்டது.

“எங்கியோ எவகிட்டயோ நீ போறய்யா! அதான் காரியம் பண்ண முடியல உன்னால!”

“நான் எங்கடி போறேன்.. இவ பேசிட்டாலும்!”

“பின்ன ஏன் இப்படி ஆச்சு? மொத என் கிட்ட வந்து உக்காந்து இதை பிடிச்சிட்டே பேசுய்யா.. மளார்னு போயி லுங்கியக் கட்டீட்டு உக்கோந்துட்டே? எனக்கு என்ன இருக்குது இந்தூட்டுல? அன்னைக்கி அப்படித்தான் சரோஜா கூட போறேன்னு அப்பிடிக்கேட்டே ஒரு கேள்வி.. அவ கூட போனா நான் இன்னொருத்தன் கூட போயிருவனா?”

“இப்பெதுக்கு முடிஞ்சு போன நாயத்தைப் பேசுறே இப்போ? உனக்கு போதை ஏறிப்போச்சுடி! சித்த நேரம் கம்முன்னு இரு!”

“இது ஒன்னுதான் எம்பட ஆசை. வேற என்ன இருக்குது எனக்கு ஆசை?”

“சித்த கம்முன்னு இரேண்டி!”

“கிட்ட வந்து உக்கோர மாட்டீங்கறே பாரு இன்னும்!” என்றதும் இவன் எழுந்தான். கதவை நீக்கிக் கொண்டு வெளிவந்தான். வாசலில் சுவற்றை ஒட்டி அவள் வீட்டுக்காரன் தூங்கிக்கொண்டிருந்தான். படல் சாத்தப்பட்டிருக்கவே அதை இழுத்து வெளிவந்தான். பின்பாக வடபக்கம் வந்தவன் சாலையில் கட்டிலில் இருந்து விழுந்து தரையில் குப்புறடித்துக் கிடக்கும் அவள் பையனைப் பார்த்தான். ஸ்கூட்டர் சாலையை ஒட்டி நின்றிருக்கவே சாவியைப் போட்டு வண்டியைக் கீழே இறக்கினான். அவசரமாய் நைட்டியை அணிந்தபடி இவனது செல்போனை எடுத்துக் கொண்டு ஓடி வந்த கன்னிகா வண்டிச்சாவியை உறுவி எடுக்க முயற்சித்தாள். சாவியிலிருந்த பொம்மை அவள் கைக்குத் தனியே போயிற்று!

“நான் சாயந்திரமா வர்றேன்..” என்றான்.

“இங்கியே தூங்குய்யா!”என்றாள். அவளைப்பார்க்கவே இவனுக்கு அப்போது பயமாய் இருந்தது. இப்படி நடந்ததற்கெல்லாம் என்ன காரணமென இவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் நடக்கிறது. ஏழரை இவனை எல்லா இடங்களிலும் சுற்றி வளைத்து அடிக்கிறது. சீக்கிரமாய் பெருமாள் கோவில் போய்த்தான் ஆகவேண்டும்! அப்போது கொஞ்சம் மட்டுப்படலாம். இன்று வியாழன். நாளை மறுநாள் சனிக்கிழமை சுத்தமாய்க் குளித்து முடித்து மிகப்பொறுப்பாய் கோவிலுக்குப் போக வேண்டும்.

“வர்றேன்னு சொன்னா வருவேன்!” என்றவன் செல்போனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கிளம்பினான். வீடு வந்து சேர எட்டு கிலோமீட்டர் பிரயாணிக்க வேண்டும். எட்டுக்கிலோ மீட்டர் வரும் வரையிலும், ‘இதெல்லாம் உனக்குத் தேவையாடா நாயே!’ என்று திடீர் திடீரென சப்தமிட்டுக்கொண்டே வந்தான். ஒருவழியாய் வீடு வந்து வண்டியை நிறுத்திவிட்டு குளித்தே ஆகவேண்டுமென நினைத்தவன் பாத்ரூம் சென்றான். சின்னப்பாப்பா ஓடி வந்தது.

“எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்தே திங்கறதுக்கு?”

“வண்டீல பொட்டீல இருக்கு சாமி ஆப்பிள்! அப்பா குளிச்சுட்டு வந்து எடுத்து தர்றேன். இந்த செல்போனைக் கொண்டு போயி டேபிள்ல வையி பாப்பா!” என்று அலைபேசியைக் கொடுத்து அனுப்பினான் பாப்பாவிடம். பின்பாக இவன் குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி வீட்டினுள் வருகையில் பகீர் என்றிருந்தது இவனுக்கு! பாப்பா பெட்டில் படுத்திருந்தபடி இவனது செல்போனில் கன்னிகாவுடன் கிடக்கும் வீடியோவைப் பார்த்தபடி படுத்திருந்தாள். இவனுக்குப் பதறிக்கையாகி விட்டது. என்ன செய்வதென ஒருகனம் புரியாமல் பித்துப்பிடித்தவன் போல நின்றவன் சுதாரித்துக் கொண்டு அவசரமாய் பாப்பா அருகில் சென்று செல்போனைப் பிடுங்கிக் கொண்டான். உடனடியாக அதை டிலைட் செய்து விட்டு பாப்பாவைப் பார்த்தான்.

“அந்த அக்கா யாருப்பா? ஏன் துணியில்லாம உம்மேல கிடக்குது?”

“அது சும்மா பொம்மை சாமி.. “

“அதோட கழுத்தைப் பிடிச்சுக் கொன்னு போட்டியாப்பா?”

“ஆமாஞ்சாமி.. எம்மேல வந்து அமுத்துனது ஒரு பேயி.. அந்தப்பேய கொன்னுப் போட்டு அப்பா இப்பத்தான் வந்து தண்ணி வாத்துட்டு வீட்டுக்குள்ளார வர்றேன்!”

“சேரீப்பா.. பேயி செத்துட்டாச்செரி!” என்ற பாப்பா “ஆத்தா.. ஆத்தா.. அப்பா பூச்சாண்டிப்பேயைக் கொன்னுப் போட்டு வந்திருச்சாமா ஆத்தா!’ சொல்லிக்கொண்டே ஓடினாள் வீட்டினுள்.

இவன் திரும்பி சாமி படங்களை ஒரு பார்வை பார்த்தான். ‘எனக்கு நல்லபுத்தி குடு சாமி!’ என்று வேண்டிக்கொண்டான்.

vaamukomu@gmail.com