2016 ஜியோவின் வருகைக்கு முன்னர் YouTubeஇல் சினிமா விமர்சனம் மற்றும் குறும்படங்கள்தான் அதிகமாகக் காண கிடைத்தன. மேலும் பட ட்ரைலர்கள் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்க்க youtubeஐ அதிகமாகப் பயன்படுத்த துவங்கினர்.
முதன்முதலில் தமிழக youtubeல அரசியல் சார்ந்து நையாண்டி என்பதைக் கொண்டு வந்தவர்கள் அன்றைய ஸ்மைல் சேட்டை மற்றும் புட் சட்னி நிறுவனங்கள். குறிப்பாக, அதிமுக நிலை சார்ந்தும் விஜயகாந்த் அவர்களை மிகவும் கேலிக்குள்ளாக்கியதும் இந்த மாதிரி சேனல்கள்தான். youtube இந்திய மக்களை வெகு சீக்கிரம் சென்றடைய காரணம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் அது default அப்ளிகேஷன் ஆக வருவதுதான். 1ஜிபி RAM இருந்தாலும் நிச்சயம் அதில் youtube இருக்கும். youtube இல்லாமல் நீங்கள் இன்று android போன் வாங்க இயலாது.
ஜியோ செப்டம்பர் 2016இல் பொது பயன்பாட்டுக்கு வந்தபின்னர், தினம் 4ஜிபி இலவசமாக கொடுத்தார்கள். வாட்சப் செய்தி பார்க்க, போக மீதி நேரத்தில் என்ன தான் இருக்கிறது என்று youtube தளத்தை அனைவரும் உபயோகிக்கத் துவங்கினர். இதே நேரத்தில்தான் youtube விளம்பரங்களுக்கு காசு தரும் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தினர்.
இந்த நேரத்தில் தான் புற்றீசல் போல youtube சேனல்கள் முளைக்கத் துவங்கின. இன்று தமிழ் youtube சேனல்களில் அரசியல் நேர்காணல்களை அதிகம் நடத்தும் ஆதன் தமிழ் கூட 2018இல் தோற்றுவிக்கப்பட்டது தான். 2019 மற்றும் 2021தேர்தல்களில் ஒப்பீனியன் மேக்கர்களாக இவர்கள் பல்வேறு தளங்களில் செயல் பட்டனர். குறிப்பாக, சில சேனல்கள் ஊர் ஊராக சென்று சர்வே எல்லாம் நடத்தின. அரசியல் தெரிந்து அரசியல் சேனல்கள் நடத்துவது வேறு, அரசியல் தெரியாமல் யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வந்து இன்டர்வியூ எடுத்து கல்லா கட்டுவது வேறு.
ஊடக உரிமையாளர்கள் அல்லது அரசியல் பத்திரிகையாளர்கள் ஊழல் செய்வது ஒன்றும் புதிதல்ல. மீடியா குறித்த ஸ்டிங் ஆபரேஷன்கள் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன – ஜீ, ராடியா டேப்கள் போன்றவை. ஆனால் முக்கிய ஊடகங்களில், தனிநபர்கள் ஊழலில் ஈடுபடுவதற்காக முயற்சி செய்தால் பல்வேறு அமைப்புகள் மற்றும் தடைகளைக் கடந்து தான் செய்ய முடியும். ஆனால் இந்த யூடியூப் படைப்பாளிகளின் விஷயத்தில், எந்த தடைகளும் இல்லை, யாரிடம் வேண்டுமானாலும் பணம் வாங்கலாம்.
2020 covid காரணமாக youtube viewership மிக அதிகமான நம்பர்களை கண்டது 2020 மார்ச் முதல். ஒரு முறை பழகிவிட்டால் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவது மிகவும் கடினம், அது போல மக்களும் youtube அரசியல் காணொளிகளைப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.
கடந்த 6 மாதங்களில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து மட்டும் சில youtube சேனல்கள் பேசி 15 லட்சம் வரை ஒரே மாதத்தில் சம்பாதித்து உள்ளனர். அதில் குறைந்தபட்ச பணமாவாது அந்த பெண்ணுக்கு சென்றதா இல்லை. தமிழர்களின் ஊடகம் என்ற பெயரில் வட இந்தியர்கள் மீது வன்மத்தையும் கக்கி வீடியோ போடுகிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு இவர்கள் தொடர்ச்சியாக செய்தது,
1. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது – இதைப் பலர் செய்கிறார்கள் (தாமரை டிவி, சாட்டை துரைமுருகன்)
2. எல்லா கட்சிகளிடமும் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவது -ஆதன் தமிழ், பேசு தமிழைப் பேசு போன்ற சேனல்கள்
3. காசு வாங்கிக்கொண்டு ஆட்களைக் கண்டமேனிக்கு ப்ரொமோட் செய்வது.
அதிலும் தமிழா தமிழா பாண்டியன் என்பவர் சொல்கிறார் : சரவணபவன் அண்ணாச்சியிடம் எதுவும் கிடைக்காத வருமான வரித் துறை அதிகாரிகள் முருகர் படத்தின் மேல் சத்தியமாக என்று கேள்வி கேட்டவுடன் இருந்த கருப்பு பணத்தை எடுத்துக் கொடுத்தாராம். இவை எல்லாவற்றையும் வடபழனி பாபாவிற்கு யாரோ கண்ணாடியை தூளாக்கி ஜூஸ் கொடுத்து விட்டார்கள், அதனால் அவர் திட உணவு சாப்பிட முடியாது என்று. கண்ணாடி துகள் குடலில் சென்றால் குடல் கிழிந்து இறக்க மாட்டார்களா என்று எதிர்கேள்வி கேட்கக் கூட ஆள் இல்லை இங்கே. 1 வருடத்திற்கு முன்னர் நம்மில் பலருக்கு அமர் பிரசாத் ரெட்டி யார் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. அனால் இன்று பலருக்குத் தெரியும். அவரைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறு பரப்பி பில்ட் அப் கொடுத்து அவரை பேட்டி எடுத்து லான்ச் செய்தது ஆதன் தமிழ்.
இப்படி பல்வேறு ஆட்களை நம் தலையில் காட்டியது தான் YouTube ஆட்களின் சாதனை.இப்போது புதிதாக ஒரு டிவி ஆரம்பித்தால் கூட அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முயல்வோம். ஆனால் YouTube சேனல்களில் இவை எதுவுமே இல்லை.
பார்வையாளர்களாகிய நாம், யார் நம்பகத்தன்மை உடையவர், யார் நம்பத்தகுந்தவர், யார் நம்பத்தகுந்தவர் இல்லை என்பதை அனுமானங்கள் அல்லது அரசியல் சார்பு அடிப்படையில் அல்ல, மாறாக செய்திகளை வழங்கும் நிறுவனங்களால் பின்பற்றப்படும் பத்திரிகைச் செயல்முறையின் (policy and ethics of the organization) அடிப்படையில் நாம் அதிகமாகக் கண்டறியத் தொடங்க வேண்டும். மொபைல் ஸ்கிரீனில் பேசும் நபர், அதிகாரம் என்ற போலிக் காற்றில் பொருட்களைப் பரப்புகிறாரா அல்லது கவனமாகக் கற்பிதம், ஆதாரம் மற்றும் ஆதாரத்துடன் அவ்வாறு செய்கிறாரா? அவர்கள் அதன் தலையங்க செயல்முறைகளில்(எடிட்டோரியல் பாலிசி) வெளிப்படையான, வலுவான மற்றும் எளிதில் கடந்து செல்ல முடியாத ஒரு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா? ஒரு பத்திரிகையாளரின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக அவரை நான் சந்தேகிக்க வேண்டுமா? நாம் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது பார்வையாளர்களாக இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.
ஆனால் யாரும் கேட்காத மிக முக்கியமான கேள்விகள்:
1. YouTube சேனலின் உரிமையாளர் யார்?
2. அந்த சேனலின் எடிட்டர் யார்?
3. அதன் வணிக மாதிரி என்ன?
4. அதன் “வாடிக்கையாளர்களுக்கு” பணம் செலுத்தும் சேவைகள் என்ன?
5. அந்த “வாடிக்கையாளர்களிடமிருந்து” வசூலிக்கும் கட்டணங்கள் என்ன?
6. எப்படி சேகரிக்கிறது? இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது?
இவை ஒவ்வொரு யூடியூபருக்கும் முக்கியமாகக் கேட்கப்பட வேண்டிய அடிப்படைக் கேள்விகள்; “ஸ்டிங் ஆபரேஷன்” (சிக்) எனப்படும் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஊடகவியலாளர் மற்றும் ஊடகம்/அரசியல் ஆட்கள் அந்தந்த நிறுவனங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் அதை
‘ஸ்டிங்’ மற்றும் அவற்றின் அடுத்தடுத்த தெளிவு
படுத்தல்களில் தெளிவாகக் கூறுகிறார்கள். ‘வணிக ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க நாங்கள் அங்கு சென்றோம்’
என்பது அவர்களின் பல்லவி.
அது என்ன தொழில்? உரிமையாளர்கள் யார்? அவர்கள் கடந்த காலத்தில் என்ன சேவைகளை வழங்கியுள்ளனர், அதற்காக அவர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்தியுள்ளனர்? தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியிலும் புதிய ஜென் டிஜிட்டல் ஜர்னலிசம் என்றழைக்கப்படும் ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது, எந்த அளவுக்கு நிறுவனமயப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இதுவே இந்த முழுப் பிரச்சினையின் முக்கியமான பகுதியாகும்.
ஒரு முழு டிஜிட்டல்/சமூக ஊடகத் துறையானது தனிநபர்களை அம்பலப்படுத்துவதோ அல்லது அவர்களை துஷ்பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களை விடுவிப்பதோ பிழைப்பதற்கு அதன் முக்கிய ஆதாரமாக ஊழல் பணத்தை நம்பியிருக்கும் போது, உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதில்லை. நிறுவனங்களின் உரிமையாளர்கள் அம்பலப்படுத்தப்பட்ட/பிடிபட்டவர்களை எளிதாக மாற்றுவார்கள், அவர்கள் பிடிபடாமல் தங்கள் “சேவைகளை” எவ்வாறு மேற்கொள்வது என்பதில் நன்கு பயிற்சி பெற்ற புதிய விண்ணப்பதாரர்களைக் கொண்டு வருவார்கள்.
PS: இது Aadhan சேனலுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகள் மற்றும் பெரிய வணிகங்களுக்கு இந்த ‘சேவைகளை’ வழங்கும் ஒவ்வொரு ஊடக நிறுவனத்திற்கும் பொருந்தும்.

seshathiri.d@gmail.com