ஒரு நாள் இரவு நார்மலா தூங்க போறீங்க. ஆனா காலையில் நீங்க கண் விழிக்க வில்லை. எல்லோரும் அரண்டு போய் பார்க்கிறாங்க, உங்க இதயதுடிப்பும் மூச்சும் சீராக இருக்கிறது. ஆனால் உங்களை விழிக்க வைக்க முடியவில்லை….! உங்கள் மூளை லிட்டரல்லி ஷட் டவுன் ஆகி கிடக்கு… !!! எப்படி இருக்கும்… ??
2017’ல் உடலியலுக்கான நோபல் பரிசு, நம் உடலினை முழுதுமாக கன்ட்ரோல் செய்யும் உடலின் Bio Rhythm குறித்த ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நாம எத்தனை மணிக்கு சாப்பிடனும், எப்போ தூங்கனும், எப்போ எழுந்திரிக்கனும்ன்னு முடிவு செய்யும் உடலின் Circadian Rhythm குறித்த ஆராய்ச்சிக்கு தான் இந்த பரிசு…!!
நீங்க ஆரோக்கியமா இருப்பது இந்த ரிதம் கையில் தான் இருக்கு. தூக்கம், பசி, நீர் பிரிதல், மலம் பிரிதல், வியர்த்தல், உணவை செரித்தல், மூச்சு விடுதல், இதயம் துடித்தல், வேலை நேரத்தில் கவனமாக /ஆக்டிவாக இருத்தல், ஓய்வு நேரத்தில் ரிலாக்சாக இருத்தல்ன்னு எப்போ எங்க என்ன செய்யனும்ன்னு மொத்தமா முடிவெடுத்து உங்களை கேட்காமல் செய்துட்டே இருக்கும் ஒரு அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். மேலே சொன்னதுல ஒன்னு நடக்கலைன்னாலும் மனிதன் நோயாளி ஆகிறான்…!!
நீங்க காதலி கூட கொஞ்சிகிட்டோ, அக்குளை சொறிஞ்சுட்டோ, மோட்டுவளையை பாத்துட்டோ, பஸ்டாண்டுல ஜொள்ளு விட்டுட்டோ உங்க சமூக கடமையை ஆத்திட்டிருக்கும் போது, நம்ம செல்லில் இருக்கும் குட்டியூண்டு ஜீன், சூரிய வெளிச்சத்தை வைத்து பூமி சுற்றுவதை முடிவு செய்து, ‘இந்த நேரத்தில் இவன் இதை செய்தால் சரியாக இருக்கும்ன்னு’ முடிவெடுத்து மண்டையில் அடிக்க, நாம உடனே தாகம் எடுப்பதை உணர்ந்து தண்ணீர் குடிக்கிறோம். அல்லது டக்குன்னு கண் முழிச்சு, முதல் பாராவில் வந்த குழப்பங்கள் நேராமல் பார்த்துக்கிறோம். அந்த குட்டியூண்டு ஜீனை கண்டு பிடிச்சதுக்கு தான் நோபல்…!
18’ம் நூற்றாண்டில் மைமோசா என்கிற தாவரம் காலையில் சூரியனை பார்த்ததும் இலையை விரிக்கிறது, மாலையில் மூடிக் கொள்கிறது என்பதை பார்த்த ஒருவர் (Jean Jacques d’Ortous de Mairan (எனக்கும் பெயர் வாயில் நுழையவில்லை). அதை கொண்டு போய் இருட்டில் வைக்க, அது சரியாக மணி அடித்தார் போல் இருட்டிலும் காலையில் விரிந்து மாலையில் மூடிக் கொள்ள… Circadian Rhythm மனிதனுக்கு புரிய ஆரம்பித்திருந்தது….!!
அப்போதிலிருந்து இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னால் 1984’ல், மேலே சொன்ன நோபல்காரர்கள், முதல்ல ஒரு ‘ஈ’யை வைத்து பரிசோதித்து, ‘இரவில் அதன் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றம், ஒரு ப்ரொட்டீனை சேமித்து வைத்து அதன் மூலமாக பகல் முழுதும் நம் உடலை கட்டுப்பாடு செய்கிறதுன்னு’ கண்டு பிடிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்க, மேலும் பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் 1994’ல் இன்னொரு ஜீனையும் கண்டு பிடித்தார்கள். அதன் மூலம் 24 மணி நேரமும் உடலின் அனைத்து செயல்பாட்டுக்கும் மூல காரணிகளை கண்டறிந்து 1970 முதல் 2017 வரை சுமார் 47 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் நோபலை தட்டியிருக்கிறார்கள்…!
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவன் நாகரிகம் அடைய, அடைய பல்வேறு புது நோய்கள் உற்பத்தி ஆவதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் ன்னு சொல்றாங்க. உணவு செரித்தல், உடல் சூடு, மனதின் மூடு, ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடு என பல்வேறு செயல்களை விருப்பத்தின் பெயரில் இனி கூட்ட குறைக்க முடியும் என மருத்துவ உலகம் நம்ப தொடங்கி இருக்கிறது.
சின்ன உதாரணமாக…,
ஒரு நல்ல தலைவரின் circadian rhythm அவருக்கு 94 வயதாவதாக சொல்கிறது. இரண்டு புரோட்டீன் கூட குறைய வைத்து மீண்டும் 20 வயதில் அந்த தலைவரை 200 ஆண்டுகள் கழித்து மருத்துவம் கொண்டு வந்து நிறுத்தலாம் என்பது சினிமா கற்பனையை விட ஃபேண்டசி யாக இருக்கிறதல்லவா…. அதுக்கு சாத்தியம் இருக்கிறது..!
இவ்வளவு முக்கியமான இந்த ரிதத்தை உலகின் அனைத்து உயிர்களும் மிகச்சரியாக பராமரிக்க, அதை மிக மிக மோசமாக பராமரிப்பவன் மனிதன் மட்டுமே…!! தினமும் பல மணி நேரம் கண் விழித்து நம்ம ரிதத்தை கெடுப்பதால் கடந்த 50 ஆண்டுகளில் உடல் பருமன், சர்க்கரை நோய், தூக்க குறைபாடுகள், மன அழுத்தம், சில வகையான கான்சர்கள், ஆட்டிசம், டிமென்ஷியா போன்ற நரம்பு மண்டல பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதில் ஒன்றை குணப்படுத்த முடிந்தாலும் அது மனித குலத்திற்கு பெரும் சாதனை தானே…! அறிவியில் அந்த பணியில் தீவிரமாக இருக்க, நமது பாரம்பரிய மருத்துவம் “வரும்முன் காப்போம்” என்ற வாழ்வியல் கலை மூலமாக இந்த ரிதத்தை ஒழுங்காக பராமரிக்க பலகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது…! அதற்காக நீங்க அன்றாடம் அருகம் புல் ஜூஸோ, ஆவாரை சூப்போ, அல்லது வாழைதண்டு சாறோ அருந்த வேண்டிய அவசியம் இல்லை. நாம இப்படித்தான் வாழ்வியல் முறைகளை போட்டு குழப்பி வைத்திருக்கிறோம். ஆனால் சித்தர்கள் சொன்ன ஆரோக்கிய வாழ்வுக்கான சிம்பிள் டிப்ஸ்.. 1) நேரத்துக்கு சாப்பிடுங்க 2) நன்றாக உறங்குங்கள் 3) முறையாக கழிவுகளை வெளியேற்றுங்கள். அவ்ளோ தான். மிக மிக எளிதான, மிக மிக அவசியமான ஆரோக்கியத்துக்கான வழிகளை நாம எவ்ளோ அலட்சியம் செய்கிறோம், எவ்ளோ தவறான பழக்கங்கள் மூலமாக அவற்றை எவ்வளவு சிக்கலாக்குகிறோம்ன்னு கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சாலும் நமக்கு புரியும். இதை சரி செய்தாலே மேலே கூறிய பல்வேறு வாழ்வியல் நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 1) நேரத்துக்கு சாப்பிடுவது: சரிவிகித கலவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுங்க. 4 இட்லி ஆரோக்கியமான உணவு இல்லை. 1 இட்லி கூட ஒரு முட்டையும், கீரையும் இருக்கட்டும். கால்சியம். புரதம், கொழுப்பு, வைட்டமின் என அனைத்தும் உண்ணுங்கள். 2) நன்றாக உறங்குங்கள்: குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள். அன்றாடம் சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரத்தில் தினமும் விழியுங்கள். தூக்கம் இரவில் குறைந்தால் அதை பகலில் சில நிமிடங்கள் தூங்கி ஈடு கட்டுங்கள். னமது மூளைக்கு ஓய்வு கிடைக்கட்டும். 3) கழிவுகளை வெளியேற்றுங்கள்: அன்றாடம் கழிவுகள் வெளியேறுவது அவசியம். கழிவுகளை அகற்ற கிட்னிக்கு போதுமான நீர் கொடுங்கள். கல்லீரலுக்கு நார்சத்து கொடுங்கள். தோலுக்கு சிறிது வெயிலை கொடுங்கள். வெறும் வயிற்றில் 3 டம்ளர் நீரல் கிட்னி சீராகும். உணவில் போதுமான காய்கறியில் கல்லீரல் சீராகும். தோலுக்கு நிறைவான வெயிலினால் தோல் வளமாகும். அனைத்து வகையிலும் கழிவுகள் வெளியேற உடல் சீராகும். நம்ம விமான பயணத்தின் போது ஜெட்லாக் அனுபவிச்சிருப்போம். அது போன்ற ஒரு bio clock செயல்பாட்டின் நேரக் குழப்பத்தில் தான் உங்க உடல் நோய்களை உற்பத்தி செய்கிறது. உங்க bio clock பேட்டரியை சார்ஜ் செய்யுங்க. வாழ்வியல் நோய்களை தவிருங்கள். “வரும்முன் காப்போம்”