மோடி ஒன்பது ஆண்டுகளாக போட்டுவந்த ஊழல் எதிர்ப்பு மன்னன் வேடம் சி.ஏ.ஜி அறிக்கையில் ஒட்டுமொத்தமாக அம்பலமாகிவிட்டது. ஒரே மழையில் சாயம் போன நரி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது. சந்திராயன் வெற்றியை தனது சொந்த வெற்றியாக்கி , இந்துத்துவா தேசியத்தின் வெற்றியாக்கி வாக்குகளை அறுவடை செய்யலாம் என ஆவலோடு வெளிநாட்டு பயணத்தில் இருந்து இறங்கிவந்த மோடிக்கு இந்த சி.ஏ.ஜி அறிக்கை பெரும் அபசகுனமாகிவிட்டது. தனது கள்ள மெளனத்தால் அதைக் கடந்துவிடலாம் என அவர் நினைக்ககூடும். ஒரே தந்திரம் எல்லா நேரத்திலும் வெல்லாது என மோடி புரிந்துகொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போது அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதை திசை திருப்ப வேறு எதையாவது கொண்டுவரவேண்டும். நிச்சயம் சிலநாட்களில் கொண்டு வருவார்.
சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியிருக்கும் ஏழரை இலட்சம்கோடி ஊழல் சாதாரண ஊழல் அல்ல. இந்தியப் பொருளாதாரத்தின்மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். கிட்டத்தட்ட ஒரு தேசத்தையே சூறையாடியிருக்கிறார்கள்.
மத்திய கணக்குத் தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமண்டமான ஊழல்கள் இவைதான்: ( நன்றி: புதிய தலைமுறை இணையதளம்)
பாரத் மாலா ஊழல்
நாடு முழுவதும் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளை இணைக்கும் பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
துவாரகா நெடுஞ்சாலை ஊழல்
நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையை சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டண முறைகேடு
ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது அவை ரூ.154 கோடி அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது தெரியவந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆயுஷ்மான் பாரத் ஊழல்
2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அயோத்யா மேம்பாடு திட்ட ஊழல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாதத் தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒப்பந்ததாரர்கள் 19.73 கோடி ரூபாய் அளவிற்கு அதிக லாபம் அடைந்திருப்பதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியதால் சுமார் 8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.
விளம்பரத்திற்காக ஓய்வூதிய திட்டத்தில் முறைகேடு
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்த தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதிய திட்டநிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பு ஊழல்
ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், தவறான திட்டவடிவமைப்பு கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் 159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மோடியின் மேற்கண்ட ஊழல் கதைகள் இதோடு முடிவதல்ல.
ரபேல் விமான ஊழல்
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பா.ஜ.க. அரசு ஒப்பந்தம் போட்டது. இதன் மொத்த மதிப்பு 59 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்குத்தான் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. பா.ஜ.க. ஆட்சி ஒரு விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்கப் போவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.
டிரோன் ஊழல்
அமெரிக்காவிடம் இருந்து ரூ.25,000 கோடி மதிப்பில் இந்தியா வாங்கும் 31 பிரிடேட்டர் டிரோன்கள் பேரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மற்ற நாடுகளை விட இந்தியா 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்தம், கதக் ரக டிரோன்களை உருவாக்க டி.ஆர்.டி.ஓ.வுக்கு ரூ. 1786 கோடியை ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவிடம் ரூ.25,000 கோடி கொடுத்து டிரோன்களை வாங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது
மாற்றுத்திறனாளிகள் நிதியில் முறைகேடு
தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுதற்காக ஒதுக்கப்படும் நிதியை பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான விளம்பரப் பலகைகளை அமைப்பதற்குத் திருப்பிவிட்டுள்ளது ஒன்றிய பாஜக அரசு. சிஏஜி அறிக்கையில் இந்த அத்துமீறலும் அம்பலமாகியுள்ளது.
நன்கொடைகள் பெற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை
கடந்த ஆண்டு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க. பெற்ற நன்கொடை 614 கோடி ரூபாய் என்று சொல்கிறது இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிபரம். 2016 -17 ஆம் ஆண்டில் இருந்துதான் இந்த நன்கொடைகள் அதிகம் ஆனது. அந்த ஆண்டு பா.ஜ.க. ரூ.532 கோடி நன்கொடை பெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு பா.ஜ.க. பெற்ற நன்கொடை என்பது ரூ.76.85 கோடிதான். அதாவது ஒரே ஆண்டில் ஏழு மடங்கு அதிகமாக ஆகிவிட்டது.
அமித்ஷா மகனின் அபார வளர்ச்சி
அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தும் நிறுவனத்தின் வருமானம் 2014 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் 14,925 மடங்கு அதிகரித்தது.
அதானியின் அபார வளர்ச்சி
மோடியின் நண்பர் அதானியின் சொத்து மதிப்பு 2014ம் ஆண்டு 2.8 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் அவரது சொத்துமதிப்பு 126.4 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்தது. அதானியை உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் கொண்டு வருவதற்காக மோடி அயராது பாடுபட்டார். ஹிண்டன்பெர்க் அறிக்கை அதானியின் மாபெரும் பங்குச் சந்தை மோசடிகளை அம்பலப்படுத்தியபோது மோடி ஒளிந்துகொண்டார்
பி.எம் கேர் மர்மம்:
கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறி பிரதமர் மோடியால் பி.எம். கேர் என்கிற நன்கொடை திட்டம் அறிவிக்கப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் அதன்மூலம் திரட்டப்பட்டது. ஆனால் இந்த பி.எம். கேர் நிதி தனியார் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுவதால் ஒன்றிய அரசின் தணிக்கையின் கீழ் இது வராது, ஆர்.டி.ஐ மூலமும் கணக்கு கேட்க முடியாது என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துவிட்டது. ஒன்றிய அரசின் இலச்சினையை போட்டு அறிவிக்கப்பட்ட நிதி வசூல் திட்டத்தை தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது எனக்கூறுவது உலகில் எங்கும் நடந்திராத மோசடி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட 1,76,000 கோடி ஊழல் என்ற பொய்க்குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கியது பா.ஜ.க. . திமுக மிகப்பெரிய அரசியல் விலையைக் கொடுத்தது. அதன் தலைவர்கள் குற்றமற்றவர்கள் என தங்களை சட்டத்தின்முன் நிரூபித்தார்கள். 2ஜியில் அன்று சொல்லப்பட்டது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கட்டுக்கதை. இன்று பா.ஜ.க நிகழ்த்தியிருப்பது நேரடியான ஊழல், முறைகேடு.
2 ஜி குற்றச்சாட்டில் ஒட்டுமொத்த ஊடகங்களும் மிகப்பெரிய ஊடக விசாரணையை நடத்தி திமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கின. அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் போன்ற மோசடிப்பேர்வழிகள் பா.ஜ.கவின் அடியாட்கள் ஊழல் எதிர்ப்புப் போரில் களமிறங்கினார்கள். இன்று ஏழரை இலட்சம் கோடி ஊழல் என்ற கடப்பாறையை விழுங்கிச் செரிக்க மோடி முயல்கிறார்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த பாலியல் கொடுமையைக் காட்டி மிகப்பெரிய உணர்வலையை பா.ஜ.க ஆளும் அரசுக்கு எதிராக எழுப்பியது. இன்னொருபுறம் 2 ஜி விவகாரத்தை ஊதிப் பெருக்கியது. நிர்பயாவுக்கு நடந்தது ஒரு தனிமனிதக் குற்றம். ஆனால் மணிப்பூரில் நடந்தது ஆளும் பா.ஜ.க அரசின் உடந்தையுடன் நிகழ்ந்த இனவாதக் குற்றம். பா.ஜ.கவின் மீதான ஏழரை இலட்சம் கோடி ஊழல் புகார் மிக நேரடியான கூட்டுக்கொள்ளை சார்ந்த குற்றச்சாட்டுகள்.
எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு பாசிச அரசை வீழ்த்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை மோடியே வழங்கியிருக்கிறார். கன்யாகுமார் சொன்னதுபோல மோடி தப்பித்தவறி தன் ஷூவில் விஷத்தைக்கொட்டிவிட்டால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரும் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. மோடி ஆட்சியைவிட்டுப்போகும்வரை அவர்கள் பேசமாட்டார்கள்
எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை இந்த மாபெரும் ஊழல் தொடர்பாக உரத்த குரலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியிருக்கிறார். இந்தக் குரல் தேசிய குரலாக ஒலிக்கவேண்டும்
மோடி வீழ்வார். பா.ஜ.க வீழும். மோடி வீழ்த்தப்படமுடியாதவர் என சொல்லப்படுவது ஒரு மாய பிம்