இந்திய சினிமா உலகில், சில படங்கள் மட்டுமேதனக்கெனத்தனித்துவமான அந்தஸ்தை அடைந்து, ரசிகர்களிடையே அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன.அந்தவகையில்இந்திய நியோ-நாயர் சினிமாவில் ஒரு மைல்கல்லாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு திரைப்படம் ‘சத்யா’ (1998).இந்தியாவில்கேங்ஸ்டர் படங்களின் வடிவத்தை மறுவரையறை செய்த படம்.எப்படி‘காட்பாதர்’திரைப்படம்உலககேங்க்ஸ்டர்படங்களுக்குஒருஅடித்தளமாகஇருக்கிறதோ,அதுபோலஇந்தியாவின்கேங்க்ஸ்டர்மற்றும்க்ரைம்த்ரில்லர்படங்களின்பலமானஅடித்தளத்தைஉருவாக்கியதுசத்யா.
- பாலிவுட்டில் பெரும்பாலும் டெம்ப்ளேட்டான காதல் கதைகள் மற்றும் மசாலாஅம்சங்கள்கொண்ட பொழுதுபோக்குத்திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தகாலம்அது. இந்தி சினிமா ஒருபோதும் கேங்ஸ்டர்களை சாதாரண மனிதர்களாகச் சித்தரித்ததில்லை. இருப்பினும், ‘சத்யா’ இந்த முறையிலிருந்து விலகிமும்பையின்நிழல் உலகைவடிகட்டாமல்அப்பட்டமாகச்சித்தரித்தது. தனது தனித்துவமான இயக்கத்திற்குப் பெயர் பெற்ற ராம் கோபால் வர்மா, நகரத்தின் கடினமான மற்றும்அத்தனைஎளிதில்யாரும்உள்நுழையமுடியாதஇருண்ட பகுதிகளில் நுழைந்து தைரியமானதனதுஅடியினை எடுத்து வைத்தார். மும்பை நகரச் சேரிகளின் மோசமான சூழல், நெரிசலான தெருக்கள் மற்றும் மங்கலான வெளிச்சம் கொண்ட சந்துகளை அவர் திறமையாகப் படம்பிடித்து, கதைக்கு ஆழமான மற்றும் உண்மையான பின்னணியை உருவாக்கினார்.இறுக்கமான காட்சிகள்,கையடக்க கேமராக்களின்ஒளிப்பதிவு மற்றும் இயற்கையான விளக்குகள் நகர நிலப்பரப்பின் சாராம்சத்தையும்படத்தின் அழகியலையும்இன்னமும்அதிகரித்தன.
1997-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்களால் கொல்லப்பட்ட குல்ஷன் குமாரின் கொலையால் ஈர்க்கப்பட்ட ராம்கோபால்வர்மா ஆரம்பத்தில் ஒரு ஆக்ஷன் படம் எடுக்கவேண்டும்என்றேவிரும்பினார்.ஆனால், சில நிஜமான குற்றவாளிகளின் சந்திப்புஅவருக்குள்பெரியமாற்றத்தைஏற்படுத்தியிருக்கிறது. குற்றத்தின் கொடூரம் மற்றும் துணிச்சலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்அதன் பிறகே தனது முடிவைச்சற்றேவேறுவகையில்மாற்றியமைத்தார். வன்முறையைக் கவர்ச்சிப்படுத்தாமல், புகழாமல்,எந்த கிளாமரும், ஹீரோயிசமும் இல்லாமல்நிழல்உலகின் யதார்த்தமான படத்தை எடுக்க முடிவு செய்தார்.
அந்த சமயத்தில்வளர்ந்துவரும் எழுத்தாளர்களாக இருந்தஅனுராக் காஷ்யப் மற்றும் சௌரப் சுக்லா ஆகிய இருவரும்குற்றம் மற்றும் வன்முறை சார்ந்தகதைகளைஎழுதுவதில்ஆர்வமாக இருப்பதைஅறிந்துகொண்டராம்கோபால்வர்மாஅவர்களைத் திரைக்கதை எழுத இணைத்துக்கொண்டார். இக்கதைக்காகஅவர்கள் நிழல்உலகம் குறித்த விரிவான ஆராய்ச்சியில்இறங்கினர்.முன்னாள் ரவுடிகள், பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள்உட்படபலரை நேர்காணல் செய்தனர். மும்பையில்உள்ளநடனவிடுதிகள், இரவுநேர பார்கள், சேரிகள், சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் எனப் பல்வேறு இடங்களையும் அவர்கள் பார்வையிட்டுஅதன்அடிப்படையில் திரைக்கதையை எழுதத்துவங்கினர்.அதன்விளைவாகவேஇவர்களால்யதார்த்தமான மற்றும் சிக்கலான கதாபாத்திரங்கள், சூழ்நிலைமற்றும் துல்லியமான இருப்பிடங்களுடன்,மும்பையின் நிழல் உலகைப் பற்றிய ஒரு தெளிவான காட்சியை உருவாக்க முடிந்தது. அதுதான்சத்யாவின் திரைக்கதையை ஈடு இணையற்ற உயரத்திற்குக் கொண்டு சென்றது.அந்த வகையில் இத்திரைப்படம் மும்பையின் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான யதார்த்தங்களை அழுத்தமாகச் சித்தரித்துநம்முன்னேநிறுத்தியது.அவர்களின் உடலில் வியர்வை அழுக்கு வாசனையை நீங்கள் கிட்டத்தட்ட உணரவே முடியும்.
சத்யாஎன்ற கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. தான் சந்திக்கப் போகும் மோசமான உலகத்தை அறியாமல், நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் மும்பைக்கு வந்துகுற்றங்களுக்கிடையில்சிக்கிக்கொள்ளும் அப்பாவி இளைஞனாக ஜே.டி.சக்ரவர்த்தி, அவரது அப்பாவித்தனத்திற்கும் அவர் எதிர்கொள்ளப் போகும் கடுமையான யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறார். மற்றபடங்களிலிருந்துசத்யாவை வேறுபடுத்துவது அதன் சிக்கலான மற்றும் நுணுக்கமான பாத்திர வளர்ச்சி. கதை அடுத்தடுத்துநகரும்போதுசூழ்நிலையின்கட்டாயத்தில் அப்பாவி இளைஞனாக இருந்தசத்யாஒரு கேங்ஸ்டராகப்படிப்படியாகப்பரிமாணமடைவதைக்காண்கிறோம்.அதிலும்குறிப்பாகஜெயிலில்பிக்குவுடன்இணையும்தருணம்.
நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மெல்லிய கோடு மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது தனிநபர்கள் எடுக்கும் தேர்வுகள்எப்படியெல்லாம்அவர்களின்வாழ்க்கையைமாற்றியமைக்கின்றனஎன்பதற்குஇந்தப்படம்ஒருசிறந்தஉதாரணம்.இந்திமொழித் திரைப்படங்களில் யதார்த்தவாதத்தின் (ரியலிசம்) ஒரு புதிய அலையை இத்திரைப்படம்அறிமுகப்படுத்தியது.அதைத் தொடர்ந்து கம்பெனி (2002), பிளாக் ஃப்ரைடே (2004), கேங்ஸ் ஆஃப் வசேபூர் (2012) மற்றும் சேக்ரட் கேம்ஸ் (2018) போன்ற படைப்புகள்அதன்வரிசையில்வெளிவந்தன.
கதாப்பாத்திரங்களுக்கான தேர்வு ஒருபடத்தின் மிக முக்கியமான இடம். சிறந்த படைப்பாக ஒரு படம் மாறும் இடமும் அதுதான். கதாப்பாத்திரத்தின்இயல்பு, மற்றும்அதன்குணநலன்களுக்குஏற்றவாறு அதற்கான முகங்களைப் பொருத்தும் போதேஒருதிரைப்படத்தின் பாதி வேலை முடிந்துவிடுகிறது. உதாரணமாக,சத்யா கதாப்பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.சக்கரவர்த்தி.அவரது வன்முறை நடவடிக்கைகளுக்கு முரணாக அவரது அப்பாவியான மற்றும் பலவீனமான தோற்றத்தைமிகச்சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார். அதன் மூலமாகவே இவர் ஒரு ரவுடி என்று கணிக்க முடியாத அளவுக்கு எளிதாக சத்யாவால் மைதிலியுடன் பழக முடிந்தது.
பிக்குவாக மனோஜ் பாய்பாய். ‘பேமிலி மேன்’ வெப் சீரியஸில் முகம் முழுக்க மழித்த நாயகனை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் மூன்று பட்டன்கள் இறங்கிய கலர் சட்டையும், கறுப்பு பனியனும், கழுத்தில் செயினும், வாரக்கணக்கில் வளர்ந்ததாடியுமாக எப்போது பார்த்தாலும் கோபப்பட்டுக்கொண்டே சிகரெட் புகைத்துக்கொண்டிருக்கும் பிக்கு கதாப்பாத்திரமாக மனோஜை நீங்கள் இந்தப்படத்தில் பார்க்கலாம்.உண்மையான கேங்ஸ்டர்களையும், அவர்களின் மேனரிசங்களையும் கவனித்து இந்தக் கதாபாத்திரத்திற்குத்தன்னைத்தயார்படுத்திக்கொண்டார்.
உண்மையில்,சத்யா கதாபாத்திரத்தில்மனோஜ் பாஜ்பாய் தான் நடிப்பதாக இருந்தது.ஆனால் சத்யாவை விடபிக்கு கதாபாத்திரத்திற்குமனோஜ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர்ராம் கோபால் வர்மா நினைக்க, கதாநாயகனாகும்வாய்ப்புபறிபோனதைஎண்ணிமனமுடைந்து போனார் மனோஜ். ஆனால் இந்தப்படத்தில் சத்யாவை விடஅதிகம் பேசப்பட்டது பிக்கு கதாப்பாத்திரம்தான் என்பது அவரே எதிர்பாராதது. இந்த இடத்தில்தான்,காகிதங்களில் எழுதிய கதாப்பாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் இயக்குநரின் கற்பனைத்திறனில் விரியும் காட்சியின் தீவிரம் புரிகிறது.
இத்தனைவன்முறைக்கு மத்தியிலும், சத்யாவுக்கும் வித்யாவுக்கும் இடையில்நிகழ்கிறதுஒருமென்மையான காதல். ஒருபக்கம்காதல் மற்றும் மற்றொருபக்கம்இரத்தம்எனஇரண்டையும்இணைக்கும்பாலமாகஊர்மிளா மடோண்ட்கர்ஏற்றிருக்கும்வித்யாகதாப்பாத்திரம்மனித உறவின் தருணங்களைப் பின்னுகிறது.குடும்பச் சூழலில் தனது பிறந்தநாளுக்குச் செலவு செய்வதற்குக் கோபித்துக்கொள்வதாகட்டும்,நொடிப்பொழுதில் புன்னகையுடன்அம்மாவை தேற்றுவதாகட்டும்,ரவுடிஎன்றுதெரியாமல்சத்யாமீதுகாதலில்விழுவதாகட்டும், உண்மைதெரிந்தபின்கட்டிலின்மூலையில்பதுங்கிக்கொள்ளும்ஒருநடுத்தரக்குடும்பத்தில்வளரும்பெண்ணின்பயத்தைவெளிப்படுத்தியிருப்பார்ஊர்மிளா.பாடகியாக விரும்பும் வித்யாவின்தந்தை ஊமையாக இருப்பதுபோல பரிதாபத்தின் முரண்.
இந்தப் படத்தின் இணை எழுத்தாளரான சவுரப் சுக்லா, ‘கல்லு மாமா’ என்ற பெயரில் திருமணத்தில் கூத்தடிப்பது, நண்பர்களுடன் சேட்டை செய்வது,தொழில் என்று வந்தால் அதில் காட்டும் கடுமை,(குறிப்பாக பில்டரிடம் பேரம் பேசும் காட்சி) தன் கண் முன்னாலே பிக்கு சாகும் போது மரண பயத்தில் அமைதியாக இருப்பது, சத்யாவைக் கொல்ல முடியாமல் திணருவது,சத்யாவைக்கொல்லச்சொன்னவனையேகொன்றுதனதுவிஸ்வாசத்தைக்காட்டுவதுஎன அந்த வயதிற்கான அழுத்தம் மற்றும் பொறுப்புடன் அமைதியாக அந்தப் பாத்திரத்தைச் செய்திருப்பார்.
தனது கடமைக்கும் மாத்ரேவுடனான நட்புக்கும் இடையில் இருக்கும் சிக்கலான மற்றும் கண்ணியத்தைச் சித்தரிக்கக்கூடிய சுக்லா எனப்படும் கமிஷ்னர் கதாப்பாத்திரத்தை, தமன்னா (1997) படத்தில் அரவாணியாகநடித்து இயக்குநரை ஈர்த்ததன் மூலம்நிரப்பியிருக்கிறார் பரேஷ் ராவல். மரணத்திற்கு முன்பாக மனைவியிடம் அவர் பேசும் யதார்த்தம் ஒரு உதாரணம்.
நாயகன்படத்தில்வேலுநாயக்கரைப் பிடிப்பதையே தீவிரமாகக் கொண்டிருக்கும் நாசர் கதாப்பாத்திரம் போல,மாத்ரேவைப் பிடிப்பதில் ஆர்வமாக இருக்கும் கண்டில்கரின் கதாபாத்திரத்திற்கு,பாண்டிட் குயின் (1994) படத்தில்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதித்யா ஸ்ரீவஸ்தவாமிகச்சரியாகப் பொருந்திப்போனார்.
’சத்யா’வை ஏனைய திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அதன் புதுமையான கதை சொல்லும் உத்தி. பல்வேறு கதைசொல்லல் உத்திகளைப் பயன்படுத்திக் கதையை மேம்படுத்தும் திறனில்தான் திரைக்கதையின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. பிளாஷ்பேக்குகள், வாய்ஸ் ஓவர்கள், மான்டேஜ்கள், அதற்குஇணையான படத்தொகுப்பு என திரைக்கதை சாதுர்யமாகக் கதையை முன்னோக்கி நகர்த்துகிறது. இந்தப்புதிய அணுகுமுறைபார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் அமரவைத்திருக்கிறது. ஜக்காவை சுடும் காட்சியில் பின்னணியில் இசைக்கும் பியானோ ஒரு சிறந்த உதாரணம். இந்தக்காட்சி உங்களுக்கு காட்பாதர் திரைப்படத்தை நினைவூட்டலாம்.
டார்க் காமெடி என்று சொல்லக்கூடிய அவலநகைச்சுவை, காதல், நாடகம் மற்றும் சோகம் ஆகியவற்றின் கூறுகளைத் தடையின்றிக் கலந்து, கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் பல பரிமாணச் சித்திரத்தை வரைகிறது திரைக்கதை.குற்றவாளிகள் இயல்பாகவே சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்ற கருத்தை இத்திரைப்படம்உடைக்கிறது. நல்லது கெட்டது என்ற கோடுகளை மழுங்கடிப்பதன் மூலம், சூழலைப்பொருத்தவரை யார் வேண்டுமானாலும் எந்தஒருகொடூரமான செயலையும் செய்ய முடியும் என்பதை சத்யா நமக்கு நினைவூட்டுகிறது.
படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் அதிக திட்டமிடல் இல்லாமல் தன்னிச்சையாகப் படமாக்கப்பட்டன. நடன இயக்குநர்களே இல்லாத “கோலிமார்”பாடலில்இயற்கையாகநடிகர்களுக்குவரும்நடனத்தோடுஅதைப்படம்பிடித்திருப்பார்கள். மேலும்,இதற்காகவேஉண்மையாகக்குடித்துகாவல்துறையிடம்சிக்கியிருக்கிறார்கள்.இப்படியானகுருட்டுத்தனமானதைரியத்திற்குப்பெயர்போனவர்ராம்கோபால்வர்மா. அதன்மிகப்பெரும்உதாரணம்தாவூத்இப்ராஹிம். புகழ்பெற்ற நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹிமைத் தமதுதிரைப்படங்களின் கதாபாத்திரங்கள்மற்றும்கதையாடல்களில் அவர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.இப்படியானகுறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று,தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ராஜன் ஆகியோரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட “கம்பெனி” (2002).மேலும்”டி” (2005), சர்க்கார் (2005), சர்கார்ராஜ் (2008)என்றுஇந்தப்பட்டியல்இன்னமும்நீளும்.
பிக்குவுக்கும்சத்யாவுக்குமானநட்பு, கர்ணனுக்கும்துரியோதனுக்குமானநட்பின்நீட்சியாகவேஇப்படத்தில்தொடர்கிறது.சத்யாவின்காதலிவித்யாவைப்பற்றிகிண்டலடிக்கும்சகநண்பர்களைக்கண்டிக்கும்போதும்,வித்யாவுடன்அமைதியாகசத்யாவாழவிரும்புவதைஅறிந்துகொண்டுசத்யாவுக்காகதுபாயில்வேலைஏற்பாடுசெய்வதுமாக,சத்யாமீதானதன்அன்பைவெளிக்காட்டுகிறார்பிக்கு.சத்யாவுக்காகஇறந்தும்போகிறார்.
பிக்குவைபார்க்கஆய்தஎழுத்துமாதவன்நினைவில்வருவதைத்தவிர்க்கமுடியவில்லை. கோபத்தில்படபடவென பேசியபடி புகைத்துக்கொண்டேஇருக்கும்பிக்குவும்அவன்மனைவிக்குமானகாட்சிகள், ஆய்தஎழுத்துமாதவன்-மீராஜாஸ்மினைநினைவூட்டுக்கின்றன.’ஜெமினி’ படத்தில்வரும் ‘கை’ எனும்கதாப்பாத்திரமும்பிக்குவைநினைவுபடுத்துகிறது. மேலும்‘தலைநகரம்’படத்தில்வரும்போஸ்வெங்கட்டும்அவரதுமனைவியும்கூடஇவர்களைநினைவுபடுத்துகிறார்கள். சொல்லப்போனால்தலைநகரம்படத்தின்கதையும் கொஞ்சம் சத்யாவின் கதையோடு ஒன்றுபடத்தான் செய்கிறது. இந்தப்பக்கம் சத்யா-பிக்கு என்றால் அந்தப்பக்கம் ரைட்டு-பாலுமற்றும்ஜெமினி-கை. பாலு கதாப்பத்திரமும் கிட்டத்தட்டே அதே இறக்கிவிட்ட சட்டையும், தாடியும் கொண்ட கோவக்கார ரவுடியும்,இதெல்லாம் தெரிந்தும் அவனுடன் அன்போடு வம்பு செய்துகொண்டே உடனிருக்கும்அவன் மனைவியும் என நிறையவே ஒன்றிப்போகிறது. குறிப்பாக இங்கே பாலு. அங்கே பாய்மற்றும்தேஜா. இந்த இடத்தில்தான் மூவரின்கதையும் மாறுகிறது. நண்பனை இழக்கும் ரைட்டு திருந்துகிறார்.சோடாக்கடை வைக்கிறார். ஆனால் சத்யாவும், ஜெமினியும்தங்களதுதுப்பாக்கியில்தோட்டாக்களைமீண்டும்நிரப்புகிறார்கள்.
‘சத்யா’திரைப்படத்தின் இறுதிக்காட்சி படம் முழுவதும் நிறுவப்பட்ட த்ரில்லர் மற்றும் மோதல்களின் உச்சக்கட்டம்.யாருக்கும்தெரியாமல்துபாய்க்குத்தப்பித்துச்செல்லும்படிகல்லுமாமாசொல்லியும்,பிக்குவை இழந்த ஆத்திரத்தில்பாவுவை விநாயகர் சதுர்த்திக்கடற்கரைக்கூட்டத்தில் கொல்கிறார்.தன் நண்பனை இழந்த வெறியை,பாவு சாகும் வரை இறுகக் கட்டிப்பிடித்துக் குத்தியபடி வெறித்துப் பார்ப்பதன் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் சத்யா. அதன் பிறகு நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் குண்டடி பட்டாலும் துபாய்க்குத் தப்பிக்க நேரம்கிடைக்கிறது.ஆனால் விதி அங்கே ஒரு காயை நகர்த்துகிறது. கடைசியாக ஒரு முறை வித்யாவைப் பார்க்கவேண்டும் என கல்லு மாமாவைக் கட்டாயப்படுத்துகிறார்.
அவள் பிளாட்டுக்கு வருகிறார்கள். அவர் ஆசையெல்லாம் ஒன்றே ஒன்று. கடைசியாக ஒரு முறை வித்யாவைப் பார்க்க வேண்டும். தளர்ந்து போன குரலோடு கதவைத் தட்டுகிறான். ஆனால் பயந்து போன வித்யா மறுக்கிறாள். அறைக்குள் வித்யாவும் அறைக்கு வெளியில் சத்யாவுமாக இவர்களுக்கிடையே நிகழும் மனப்போராட்டத்தில் காவல்துறை உள்நுழைய இங்கும் தொடர்கின்றன துப்பாக்கிச்சத்தங்கள். ஒரு கட்டத்தில் கதவை உடைத்து பயத்தில் வெளிறிப்போயிருக்கும் வித்யாவைப்பார்த்து சத்யா அதிர்ந்து போய் நிற்கிறான்.ஷுக்லாவைக் கொன்ற பாவம் இப்போது கண்டில்கர் மூலம் சுடப்பட்டு அவள் முன்பாகவே சத்யா வீழ்கிறான். சத்யாவுக்காகக் காத்திருந்து கண்டில்கரின் அதிகாரிகளால்சுடப்பட்டு காரிலேயே இறந்துபோகிறார்கல்லு மாமா. இறுதியாக அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த இவர்கள் கொடுக்கும் துயரமான விலை இந்த நகரைப்பொறுத்தவரை வெறும் செய்திமட்டுமே என்பதை உணர்த்தும் விதம் செய்தித்தாளில் ஒரு பெட்டிச் செய்தியில் வரும் இவர்களின் மரணம் பற்றிய யதார்த்தத்துடன் படம் நிறைவடைகிறது.
இந்தப்படம்வெளியானநேரத்தில், ‘தில்சே’ போன்ற மற்ற பெரிய பட்ஜெட் படங்களிலிருந்தும் கடுமையான போட்டியை எதிர்கொண்டது. மேலும்,‘குச் குச் ஹோதா ஹை’திரைப்படம் பிரதான பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. ஆரம்பத்தில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு தோல்வியாக அறிவிக்கப்பட்டஇத்திரைப்படம்,படம்பார்த்தவர்களின்மூலம்பேசுபொருளாகிஅதன்பின்னர் வேகமெடுத்தது. இறுதியில் விமர்சன ரீதியான பாராட்டையும், வணிக ரீதியான வெற்றியையும் இத்திரைப்படம் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட ஆறு பிலிம்பேர் விருதுகளை வென்றது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைமனோஜ்பாஜ்பாய் வென்றார்.
‘சத்யா’ திரைப்படம் வெளியானதில் இருந்தே அதன் தாக்கம் சினிமா உலகம் முழுவதும் எதிரொலித்தது. இந்தப் படத்தின் வெற்றி ‘மும்பை நொயர்’ என்று பிரபலமாக அறியப்பட்ட இதே போன்ற திரைப்படங்களுக்கு வழிவகுத்தது. டேனி பாயில், விஷால் பரத்வாஜ், அனுபவ் சின்ஹா மற்றும் ஸ்ரீராம் ராகவன் போன்று உலகெங்கிலும் உள்ள இயக்குநர்கள் ‘சத்யா’ படத்தின்திரைக்கதையால்கவரப்பட்டனர்.சமூகத்தின் இருண்ட இடைவெளிகளை ஆராயும் அதே வேளையில் மனித ஆன்மாவை ஆழமாக ஆராயும் சினிமாவின் ஒரு புதிய அலைக்கு இந்த சக்திவாய்ந்த திரைக்கதை வழிவகுத்துள்ளது. அடுத்தடுத்த தலைமுறை இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்களிடையே அதன் தாக்கம் எதிரொலித்ததால்,இத்திரைப்படம் இந்திய நியோ-நொயர் சினிமாவுக்கு ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியது.
இந்தப்படத்திற்கு சத்யா என்ற பெயர் வைத்ததன் காரணம் விசித்திரமானது. சத்யா திரைப்படப் படப்பிடிப்பின்போது தான் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணின் பெயர் சத்யா என்றும் அவளை சந்தோஷப்படுத்தவே தனது படத்திற்கு சத்யா என்று பெயர் வைத்ததாகத் தெரிவித்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
வர்மாவின் தொலைநோக்குப் பார்வையும்,வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தின் தேர்ச்சியும், மேக்கிங் (Making) என்றுசொன்னாலேராம் கோபால் வர்மாஎன்றுசொல்லும்அளவுக்கு ஒரு தேர்ந்த கலைஞனாகத் தனித்துக் காட்டியது. குறிப்பாக‘சிவா (1990)’திரைப்படத்தில் ஸ்டடி கேமராவை (Steadicam) பயன்படுத்த வர்மா எடுத்த முடிவுஎன்பது அந்தக்காலகட்டத்தில்இயங்கிவந்த திரைப்படத் தயாரிப்பு விதிமுறைகளிலிருந்து முற்றிலும் விலகியஅவரது தனித்துவமான முன்னெடுப்பு. ஸ்டடிகேமராவைப்பயன்படுத்துவதன்மூலம்சீராககாட்சிகளைஎந்தவிதஅசைவுகளுமின்றி (Shake)ஒளிப்பதிவுசெய்யமுடியும்என்பதை‘ஷிவா’ திரைப்படத்தின்காலேஜ்சண்டைக்காட்சியில்நாகர்ஜூனா, ஜே.டி.சக்கரவத்திஇருவரும்ஓடுவதைபிண்ணிருந்தபடியேபடம்பிடித்தவிதத்திலும், சந்துகளுக்கிடையில்குழந்தையைதூக்கிக்கொண்டுஓடும்நாகர்ஜூனாவின்பார்வையில் (Point of View)காட்சிகளைப்படம்பிடித்தவிதத்திலும்சாத்தியமாக்கிக்காட்டினார்.ஷிவாதிரைப்படம்சண்டைக்காட்சிகளை அணுகும் விதத்தைமுற்றிலுமாக மாற்றியது. இவரதுஆரம்பகாலப்படைப்புகள்பற்றிமணிரத்னம், ஷங்கர், ராஜமௌலிஉட்படபேசாதஇயக்குநர்களேஇல்லை.சினிமாபயிலும்மாணவர்களுக்கும், திரைஆர்வலர்களுக்கும்இன்னமும்அவரதுபடைப்புகள்சிம்மசொப்பனமாகவிளங்குகிறதுஎன்பதில்சந்தேகமில்லை. அப்படிப்பட்டகலைஉலகின்பிதாமகன்பழையபன்னீர்செல்வமாகமீண்டு(ம்)வரவேண்டும்என்பதேரசிகர்களின்விருப்பம்.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும், ‘சத்யா’ தொடர்ந்து பார்வையாளர்களைக் கவர்ந்து, இந்திய சினிமாவின் பிரகாசத்திற்குச் சான்றாக நிற்கிறது. அதன் கதையாடல் திறன், இயற்கையான உணர்ச்சிகள் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இதை ஒரு உண்மையான கிளாசிக் வரையில் சேர்ப்பதன் மூலம் சினிமா வரலாற்றில் அதன் இருப்பை உறுதி செய்கின்றது.எந்தச் சூழ்நிலையிலும், ’சத்யா’ இந்தியா தயாரித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று பெருமையுடன் கூறலாம்.
’சத்யா’சினிமா ரசிகர்களிடம் தொடர்ந்து எதிரொலிக்கும் ஒரு சினிமாவின் வெற்றி.