அன்றெல்லாம் நான் பிரதான பத்திரிக்கைகளில் வேலைக்கு முயன்றுகொண்டிருந்தேன். Fine arts கல்லூரியில் என் பட்டயப்படிப்பை முடித்திருந்தேன். Graphical designer, illustrator என்று என் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள ஓப்பனிங்குகள் எல்லாவற்றுக்கும் அப்ளை செய்து வைத்து ஒரு வேலையை எதிர்நோக்கியிருந்த காலம். வைசாகில் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் trainee ஆக வந்து சேர்ந்து கொள்ளச் சொல்லி ஓர் அழைப்பு வந்திருந்தது. ஹவுரா டுரோண்டோ எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரு ஏசி கோச்சில் ஏறியிருந்தேன். இரவு நேரப் பயணம். நன்றாகவே தூங்க வேண்டும் என்றிருந்தது. சுற்றிலும் சரியான இருட்டு. ரயில் ஏசியில் நல்ல குளிரும் அடித்தது. எல்லாரும் போர்வைக்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். நடைபாதை வழியில் மட்டும் அங்கங்கு நீல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. நான் தட்டுத் தடுமாறி என் பெர்த்தை கண்டுபிடித்து ஏறிக்கொண்டேன். அது ஒரு மிடில் பெர்த். பக்கவாட்டில் இருந்த ஸ்டாண்டில் கடைசியாக இருந்த போர்வை கம்பளி வகையறாக்களை எடுத்துக்கொண்டேன். எதிர் பெர்த்தில் ஒரு பெண் படுத்திருந்தாள். அவளது முகம் அந்தப்பக்கமாக இருக்கலாம் அல்லது இருட்டில் தெரியவில்லை. உருவ அமைப்பில் இருந்து அவள் ஒரு பெண் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. பிறகு நானும் என் கம்பளிக்குள் புகுந்துகொண்டேன். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். அடிவயிற்றில் முட்டியது. விழித்துக்கொண்டேன். படுக்கையை விட்டு எழுந்து தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கிப் போனேன். ரயிலின் தள்ளாட்டத்திலேயே கழிவறைக்குச் சென்று வந்தேன். மீண்டும் என் பெர்த்தில் ஏறி அமரப் போனேன். என் பெர்த்தில் யாரோ படுத்திருந்தார்கள். என்னைத் தள்ளிவிடாமல் சட்டென என் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தார்கள். அது அந்தப் பெண் தான். ஏன் இவள் என் பெர்த்தில் வந்து படுத்துக்கொண்டாள்? என்னை அவள் யோசிக்கவேவிடவில்லை. என்னை அள்ளி தன் மேல் போட்டுகொண்டாள்.
நான் அவன் அங்கங்களின் மேல் ஊர்ந்தேன். சில இடங்களில் கைவைத்த போது தான் அது அவள் முலை மேடுகள் இடை வளைவுகள் தொடை வழிகள் என்று தெரிந்தது. அவ்வளவு தான். அதிலேயே அப்படியே கிடந்து அவளுடன் முயங்கினேன். அவள் சற்று தளர்ந்த போது அவள் பிடி என்னை விட்டு அகன்றது. நான் மீண்டும் கீழே இறங்கினேன். பிறகு தான் உரைத்தது. நான் தூக்க கலக்கத்தில் பெர்த் மாறி எறியிருந்திருக்கிறேன். நான் அவளைப் பார்த்தேன். என்னால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. என்னை விட்டவுடன் மீண்டும் போர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டுவிட்டாள் எதுவுமே நடக்காத மாதிரி. நான் மீண்டும் கழிவறை சென்று என் ஆடைகளை சரி செய்து கொண்டு வந்து என் பெர்த்தில் ஏறிக்கொண்டேன். அந்தப் பெண் ஏன் இப்படிச் செய்தாள்? இந்த எண்ணத்தையே அசைபோட முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். இமை ரப்பைகள் கண்களை அழுத்தின. கண்கள் சொருகி தூக்கம் வந்தது. ஒருமுறை போர்வையை விலக்கி அவளைப் பார்க்க முயன்றேன். ம்ம்.ஹூம். ஒன்றும் பிரயோஜனமில்லை. காலையில் எழுந்து அவளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு ஆழ்ந்து உறங்கிப் போனேன். மறுநாள் காலை நாம் விழித்த போது எதிர் பெர்த்தில் அவள் இல்லை.
எனக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது. நான் மீண்டும் திரும்பி வந்து அறை நண்பர்களிடம் ரயிலில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றி சொன்னேன். அவர்கள் இது போன்று ஆயிரம் கதைகளை நாங்களும் சொல்வோம் என்று பழித்தார்கள். உண்மையில் என்னாலேயே நம்ப முடியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததா? இல்லை நான் தான் அப்படி கற்பனை செய்து கொள்கிறேனா? அந்த சம்பவத்துக்கு அத்தாட்சி என்று எதை காண்பிக்க முடியும்? ஒன்று நான் மட்டுமே. இன்னொன்று அவள். இல்லை வெறும் நான் மட்டும் தானா? என் தொடைகளில் நான் அன்றுணர்ந்த அந்தப் பிசுபிசுப்பு. அது சொல்லுமா? நான் அதன் பிறகு பலமுறை சுயமைதுனம் செய்து கொள்ள அந்த நினைப்பே போதுமாக இருந்தது. அந்த முகம் அறியா பெண்ணின் முகத்துக்கு பதிலாக நானே எனக்கு பிடித்த, எனக்கு உவத்த பெண்களின் முகங்களைப் போட்டு பார்த்துக்கொண்டேன். அது இன்னும் போதைத் தருவதாக இருந்தது. அந்தச் சம்பவம் முழுதும் பகற்கனவு தான் என்று நானே நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஒரு கட்டத்தில் அத்தனை முகமும் கலைந்து கல்லெறிபட்ட குளம் அலையெழுந்து அடங்கி தெளிந்து வருவது போல ஒரே ஒரு முகம் மட்டும் தோன்றுவதாகத் தெரிந்தது. இல்லை அப்படியெல்லாம் நான் கற்பனை செய்துகொள்கிறேன் அவ்வளவு தான்.
நான் இரண்டு ஆண்டுகள் வைசாகில் வேலைப் பார்த்தேன். ஒரு வருடத்திலேயேயே பணி நிரந்தரமாகியிருந்தது. பிறகு நான் சென்னையில் வேலைக்கு முயற்சிக்க ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேலையும் கிடைத்தது. முதலில் நகைச்சுவை துணுக்குகளுக்கு கார்ட்டூன்களும் தகவல் துணுக்குகளுக்கும் illustrationகளும் போட வாய்ப்பு கொடுத்தார்கள். சில சமயங்களில் Supplementary இதழ்களுக்கு படம் போட்டு கொடுப்பேன். அப்படியே ஐந்தாண்டு ஓடிவிட்டன. இப்போது எங்கள் பத்திரிக்கையின் பிரதான இதழில் வெளிவரும் தொடர் கதைகளுக்கு illustration போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எழுதியிருக்கிற எழுத்தையை தாண்டிவிடும் இல்லஸ்ட்ரேஷன்களை தந்துவிடுகிறேன் என்று அந்த தொடர் கதையின் எழுத்தாளர்களிடமே பெயர் வாங்கியிருக்கிறேன். அதனாலே எனக்கு என் பத்திரிக்கை அலுவலகத்தில் நல்ல பெயரும் இருந்தது. என் படங்கள் வாசகர்களை ஈர்க்கவும் செய்தன. என் மேலதிகாரி அவ்வப்போது கூப்பிட்டு என்னை பாராட்டுவார். ஒருமுறை பாராட்டையெல்லாம் பாராட்டிவிட்டு இப்படிச் சொன்னார். “என்னய்யா நானும் கவனிச்சிட்டு வாரேன். இந்த தொடருல வர கதாநாயகி இந்துவுக்கும் சரி, போன தொடர்கதையில் வந்த மஞ்சுவுக்கும் சரி, அதுக்கு முன்னாடி நீ முதல் முதலா வரைய ஆரம்பிச்ச போது வந்த நித்யாவுக்கும் சரி ஒரே முகமாட்டு இருக்கே. யாராவது உன்னோட லவ்வரா? பழைய காதலி எவளவாவதா?” என்று கேட்டு சிரித்தார். எனக்கே கேட்டு தூக்கி வாரிப் போட்டது. நான் எப்படியோ அவரை சமாளித்துவிட்டு வெளியே வந்தேன். என் அந்தரங்கம் அடிப்பட்டது போல இருந்தது. இல்லை அவர் மிகவும் சாதாரணமாகத் தான் கேட்டிருக்கிறார். போகும் போது கூட, “அடுத்த தடவைலேந்து கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுய்யா. ஒரே முகம் போரடிச்சிட போவுது மக்களுக்கு. சினிமா இல்ல பத்திரிக்கை தொடர்கதைதான்னாலும் முகம் என்னிக்கும் எதிலும் நின்னு பேசும் பாத்துக்க” என்று சொல்லித் தான் அனுப்பினார்.
நான் எப்படி ஒரே சாயல் கொண்ட பெண்களின் முகத்தையே வரைகிறேன். அந்த எல்லாப் பெண்களும் ஒருவர் தானா? யார் அந்தப் பெண்? நான் அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேனா? ரயிலில் நடந்த சம்பவம் என்று நாம் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தோமே ஒரு வேளை அந்தப் பெண்ணா? அந்தப் பெண்ணின் முகத்தை தான் நான் பார்த்ததே இல்லையே?
ஒருமுறை நான் என் அலுவலக அறையில் இருந்த போது அலுவலக வரவேற்பறையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. “சார் உங்களைத் தேடி ஒரு இளம்பெண் வந்திருக்கிறாள்” என்றாள் வரவேற்பறை பெண். “சார் அவங்க உங்களுக்கு வேண்டப்பட்டவங்களோ? நீங்க வரைஞ்சு தர ஹீரோயின்கள் மாதிரியே இருக்காங்க” என்று நமுட்டு சிரிப்புடன் போனைத் துண்டித்தாள்.
நான் என்ன ஏது என்று பார்க்க என் அறையை விட்டு வெளியே வந்தேன். அதற்குள் அலுவலகமே கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டது. நான் வரவேற்பறையின் சோபாவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதில் ஷர்டை டக் இன் செய்திருந்து கைகட்டி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை பார்த்தேன். நானும் அந்தக் கணத்தில் வெலவெலத்து தான் போனேன். அவள் முகமும் அகமும் பொருமிக்கொண்டிருப்பதை தூரத்தில் இருந்தபடியே கவனித்துக்கொண்டு வந்தேன். நிச்சயம் என்னை அவள் இரண்டில் ஒன்று பார்த்துவிடப் போகிறாள் என்று புரிந்தது. குறைந்த பட்சம் ஓர் அறையாவது வாங்குவேன் என்று எண்ணியபடியே தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். எனக்கு சட்டென போன தொடர்கதையின் இறுதி திருப்பம் நினைவு வந்தது. அது சம்பந்தமாக அந்த தொடர்கதையின் எழுத்தாளருடன் பேசியதெல்லாம் நினைவு வந்தது. அவர் இளையவர். என் வயதொத்தவர் தான். அதனால் எங்களுக்குள் அணுக்கமான நட்புறவு ஏற்பட்டுவிட்டது.
அவர் சொன்னார், “புனைவுன்னு சொல்லிக்கிட்டு கற்பனை பண்ணி எதை எதையெல்லாமோ சேர்த்து இட்டு கட்டி எழுதி கடைசியா ட்விஸ்ட்ன்னு ஒன்னு வைக்கிறோம். அதுல வாசகர்கள் திருப்தி அடையறாங்க. அந்தப் புனைவு அவங்களோட போயிடுது. ஆனா அதுல எழுதறவனுக்கு ஒன்னும் இல்ல இல்லையா?”
“நம்ம புனைவு அப்போ நமக்கு எதுவும் தர்றது இல்லன்னு சொல்றீங்களா?”
“ஆமா. காசு. பணம் பேர் புகழ் இதல்லாம் உண்டு தான். மறுக்கல. எல்லாவித productகளும் அதை தரும். ஆனா அது அதுவாவே நமக்கு என்ன தருது? என்னயிருந்தாலும் அது பொய்யின்னே தான நமக்கிருக்கும்.”
“அப்போ புனைவு உங்களுக்கு என்ன தரணும்ன்னு நீங்க எதிர் பாக்குறீங்க?”
அதற்கு அவர் சொன்னார். இன்னும் என்ன அவர்? அவன்.
“ஒரு நிரூபணம். கண்கூடான நிரூபணம். இப்படியும் இருக்கலாம்ன்னு நெனச்சு தான் அவன் எழுதியிருப்பான். அவனுக்கே அது தெரியாது. ஒருவேளை அப்படி இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஒருவேளை அப்படி இருந்துட்டா? அதை அவன் தன் வாழ்நாள்ல பாத்துட்டா? அது போதும் இல்லையா? அதான் அவனுக்கான ட்விஸ்ட். அப்படி ஒன்னு நடந்தா அவன் உத்தேசிச்ச எடத்துல, அவன் நிறுத்தின எடத்துல கதை முடியல. அங்க தான் கதை அவனை விழுங்குது. அவனையும் சேர்த்து விழுங்குதுன்னு கூட சொல்லலாம்” என்றான்.
எனக்கும் அது போல ஒன்று தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறதோ? நான் புனைந்த என் பகற்கனவுகளுக்கு கிடைத்த நிரூபணம் தான் இப்பெண்ணா? ஒரு கணத்தில் நான் வருவதை அவள் திரும்பிப் பார்த்துவிட்டாள். அவள் முகத்தில் இருந்த காட்டம் குறைந்து அவள் குழம்ப ஆரம்பித்திருந்ததைக் கவனித்தேன்.
“என்ன பாக்கணுமுன்னு வந்தீங்களாமே.”
“ஆமா… பட்…”
“இஃப் யூ டோன்ட் நாம தனியா அந்த காபின் குள்ள போய் பேசலாமா?”
“சரி”
நான் அவளை அந்தக் கண்ணாடி அறைக்குள் அழைத்துச் சென்றேன். அங்கே டேபிளில் மூடி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டம்ப்ளரை அவள் பக்கம் நகர்த்தி,
“குடிங்க” என்றேன்.
அவள் இன்னும் குழம்பிக்கொண்டிருக்கிறாள். எனக்கும் அந்தக் குழப்பம் இருக்கிறது தான். ஆனால் நான் வெளிக்காட்டிக்க வில்லை.
பிறகு அவள் பொறுமையாக,
“என்னோட படத்தை நீங்க ஏன் வரையறீங்க? என்னை பின் தொடர்ந்து வேவு பாக்கிறீங்களா? ஆர் யூ ஸ்டாக்கிங் மீ?” என்று கேட்டாள். என்னைப் பார்த்திடாத போது கேட்க நினைத்த அவ்வார்த்தைகளின் வேகம் இப்போது இல்லை என்று எனக்கு புரிந்தது. அவளும் அதை உணர்ந்திருந்த மாதிரி தான் தெரிந்தது. இருந்தாலும் கேட்டுவிட வேண்டும் என்று இருக்கிறது அவளுக்கு. கேட்கிறாள்.
நான் பொறுமையாக “இல்லை” என்றேன்.
பிறகு, “நான் உங்கள இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லை. இதெல்லாம் brutal conicidenceன்னு சொல்லலாம். ஆனால் அதை நீங்க நம்புவீங்களா தெரியல. சீ உங்க ஷூல நான் நின்னுட்டு இருந்தா நானும் நம்பியிருக்க மாட்டேன் தான். ஆனால் நம்பாமலும் இருக்க முடியல இல்லையா? யூ ஆர் கன்ஃபியூஸ்ட் நவ். சீ எனக்கும் உங்களுக்கு இருக்குற அதே குழப்பம் இருக்கு. வீ வில் சார்ட் இட் அவுட் டுகெதர்”
பிறகு அவளிடம் கேட்டேன். “எப்படி என்னை கண்டுபிடிச்சி வந்தீங்க?”
அவள் பேச ஆரம்பித்தாள். அவள் ஒரு தெலுங்குப் பெண் என்று அவள் பேச்சில் தெரிந்தது. அவளுக்கு தமிழும் நன்கு தெரிந்திருந்தது.
“நான் லாஸ்ட் இயர் தான் ஐதராபாத் லேந்து இங்க ஷிஃப்ட் ஆனேன். தினமும் எம்.ஆர்.டி.எஸ் ட்ரெயின்ல தான் மயிலாப்பூரில் இருந்து பெருங்குடிக்கு போயிட்டு வருவேன். ட்ரெயின்ல அப்பப்ப சில பொறுக்கி பசங்க என்ன பாத்து பாத்து ஏதோ சைகை காட்டி சொல்லி சிரிச்சிட்டு இருந்தாங்க. எனக்கு முதல்ல புரியல. ஒரு தடவை அவங்க கையில் உங்க பத்திரிக்கை வச்சுருந்தாங்க. அதுல இருக்கற படத்தை பாத்து பாத்து தான் என்ன பாத்து ஏதோ காமிச்சு சிரிச்சிட்டு இருந்தாங்க. ஐ ஃபெல்ட் வெரி எம்பெரேஸிங். டக்குன்னு ஒருநாள் அவனுங்க முன்னாடி போய் நின்னு பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்ச்சிட்டேன். அவங்க அப்படியே புக்க போட்டுட்டு போயிட்டாங்க. அப்புறம் எடுத்து பார்த்ததுல தான் விஷயம் புரிஞ்சுது. அதான் உங்கள கண்டுபுடிச்சு வந்தேன்.”
“ஸோ என்னையும் அறையலாம்ன்னு தான் வந்தீங்க இல்லையா?”
“எஸ்… பட்…”
“பரவாயில்லை. வேணும்னா ஒரு தடவ என்னை அறைஞ்சுடுங்க”
நான் அவள் முன் என் கன்னத்தைக் காண்பித்தேன்.
“நோ, ஐ குட் நாட்”
“சம்திங் இஸ் ஸ்டாப்பிங் யூ இல்லையா?”
“எஸ்”
“எனக்கும் அதே தான். ஒன்னும் புரியல”
“பட் ஐ வில் கிவ் யூ ய வர்ட். இனிமே உங்க படத்தை வரைய மாட்டேன். இந்த சீரிஸ் இன்னும் பத்து இஸ்யூஸ் போகும். அதுவரை ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ”
அதில் அவள் கொஞ்சம் சமாதானம் அடைந்தாள். பிறகு, “தாங்ஸ் ஃபார் யுவர் அண்டர்ஸ்டாண்டிங்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள். நான் வழியனுப்பி வைத்தேன். ஆனால் இன்னும் ஏதோ எங்களுக்குள் மிச்சம் இருந்தது. அது அவளுக்கும் தெரிந்திருக்கும்.
அடுத்த மூன்று மாதங்களில் அந்த தொடர்கதை நிறைவுற்று, அடுத்த தொடர்கதை ஆரம்பமானது. அந்த தொடர்கதையின் கதாநாயகிக்கு நான் வலிந்து வேறொரு முகத்தை கொடுத்திருந்தேன். நான் முதலில் கையால் வரைந்து விடுவேன். பிறகு தான் அதனைக் கணினியில் பிரதியேற்றி மேம்படுத்துவேன். ஒவ்வொரு முறையும் கையால் வரைந்து முடிக்கும் போது அந்த முகமே – அவளது முகமே வந்து கொண்டிருந்தது. அதை கணினியில் ஏற்றி தான் மாற்ற வேண்டியிருந்தது. உங்களால் உங்கள் கையெழுத்தை எளிதாக போட்டுவிட முடியும் இல்லையா? அது போல தான் எனக்கு ஒவ்வொரு முறையும் இருந்தது. வேறொரு முகத்தை வலிந்து என் கையால் வரையவே முடியவில்லை. கணினியில் போட்டு மாற்றினாலும் எனக்கு அவளது சாயல் எங்கோ தட்டுப்பட்டுக்கொண்டிருந்தது. முற்றிலுமாக அதை அகற்றவே முடியவில்லை. ஒருவேளை என்னால் முடியவே முடியாதோ? ஆனால் மற்றவர்களுக்கு அப்படியில்லை என்று தெரிந்தது. வேறொரு ஆளாகவே அவர்களுக்கெல்லாம் அவை தெரிந்தது. மற்றவர்களின் பார்வைக்கும் என் பார்வைக்கும் இடையில் உள்ள ஒரு சமரசப் புள்ளியில் அந்த முகத்தை நகர்த்தி நிறுத்தியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இது அவளுக்கு எப்படித் தோன்றும் என்கிற கேள்வியும் கூடவே எழுந்தது. ஏன் இப்போலாம் பழைய மாதிரி அந்த பொண்ணு முகத்தை வரையறது இல்ல என்று வேண்டுமென்றே சில சமயம் அலுவலகத்தில் கேட்பார்கள். ப்ரேக் அப் ஆகிடுச்சு என்று நானும் அவர்களிடம் சொல்லி பேச்சை கட் பண்ணிவிடுவேன்.
சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அந்தப் பெண்ணிடம் இருந்து தான். போனமுறை நேரில் சந்தித்த போது அவளது பெயரை கூட கேட்க விட்டுவிட்டேன். மின்னஞ்சல் முகவரியில் ராதிகா என்று இருந்தது. அவள் இப்படி எழுதியிருந்தாள். என்னை பார்த்துவிட்டு சென்ற பிறகு குழப்பம் இன்னும் அதிகரித்ததாம். மேலும் என்னுடன் நிறைய பேசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதாம். அதனால் அவளுடைய தொலைபேசி எண்ணையும் இணைத்திருந்தாள். தங்களுக்கு விருப்பம் இருப்பின் அழையுங்கள். இல்லையென்றால் தவறாக எண்ண வேண்டாம் என்று அதில் சொல்லியிருந்தாள். நான் அவளது எண்ணை பதிந்து கொண்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது அவளுடனான பழக்கம். சனி ஞாயிறுகளில் என்னுடனேயே சுற்றினாள். படம் பார்க்கச் செல்வோம். ஈசியாரில் பைக் ரைட் செல்வோம். ஒன்றாகவே சேர்ந்து ஓர் கடற்கரை ஓர ரிசார்டில் அறை எடுத்து மூன் லைட் டின்னர் சாப்பிட்டு இரவு முழுக்க குடித்துக்கொண்டும் கதை பேசிக்கொண்டும் இருப்போம். நன்றாகவே நெருங்கிவிட்டிருந்தோம்.. அப்படியான ஒரு இரவில் படுக்கையில் அத்துமீறி நான் அவளை தழுவிக்கொண்டேன். அவளும் அதற்கு இசைந்து கொடுத்தாள். அப்போது அவளை நான் கேட்டேன்.
“அன்னிக்கி உன்னை தடுத்தது எதுன்னு கண்டுபுடிச்சிட்டியா?”
“இல்லை அது பத்தி யோசிக்கவே இல்ல. உன்கிட்ட பேச ஆரம்பிச்சப்றம் சுத்தமா மறந்து போச்சு”
“இப்படி நெருங்கிட்டோமே?”
“அதுக்கென்ன?”
“இப்படி ஆகும்ன்னு நீ நினைச்சிருக்க மாட்டல்ல”
“எஸ். ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட்”
“ம்ம்ம்”
“பட் ஐ ஃபெல்ட் சம் கைன்ட் ஆஃப் ஈஸ் பீயிங் வித் யூ”
“ம்ம்ம்”
“நான் ஒன்னு சொல்லவா?”
நான் அந்த சம்பவத்தை சொன்னேன்.
அதை கேட்டுவிட்டு, “சும்மா கதை விடற. கட்டில் வரை வந்துட்டோம்ன்னு இனி என்ன சொன்னா என்ன? அதானே கரெக்ட்டா? பட் ஹவ் சிக் ஆர் யூ? என்னை போய் அந்த பொண்ணா கற்பனை பண்ணிருக்க? டூ ட்ரமாட்டிக். ஐயா என்ன மன்மதக் குஞ்சா? அப்படியே எல்லா பொண்ணுங்களும் வந்து இவர் மேல விழுவாங்களா? நல்லா டே ட்ரீம் பண்ணியிருக்க”
எனக்கு அவள் நம்பாதது எரிச்சலைத் தந்தது.
“சரி. இப்போ இந்த மாதிரி கதையை நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைக்கிற?”
“…”
நான் அந்தச் சம்பவ தேதியை குறிப்பிட்டு சொன்னேன்.
“26-2-2014. இரவு நேரப் பயணம்”
முன்னர் இவ்வளவு ஸ்பெசிஃபிக்காக அவளிடம் சொல்லியிருக்கவில்லை என்று பிறகு தான் புரிந்தது.
“ஹவுரா டூரண்டோ எக்ஸ்ப்ரஸ். கோச் பி3. என்னோட பெர்த் 75.” என்றேன். பிறகு என் மொபைலை எடுத்து அந்த டிக்கட்டை காண்பித்தேன். பிறகு அவள் மொபைல் போனைப் பிடிங்கினேன். அவளது ஜிமெயிலைத் திறந்து அவளது ரயில் டிக்கெட்களை தேடப் போனேன்.
“சரி நானே பாக்கறேன்”
அவளே தேடிப் பார்த்தாள். நான் சொன்னது சரியாக இருந்தது. அதே ரயில். அதே கோச். ஆனால் பெர்த் நம்பர் 78.
சட்டென அவளுக்கு வியர்த்து வழிந்து விட்டது. நான் அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு என் கைக்குட்டையால் அவள் வியர்வையின் வழிவை ஒற்றி எடுத்துவிட்டேன்.
“சத்தியமா எனக்கு ஒன்னுமே ஞாபகம் இல்லை. நானா அப்படி பண்ணினேன்?”
“நீதான் அப்படி பண்ணியிருக்க. இப்போ நிரூபணம் ஆகியிருச்சுல்ல”
“ரொம்ப அசிங்கமா இருக்கு”
“…..”
“…..”
“ஸீ இதுக்காக நீ எதுவும் கில்டா ஃபீல் பண்ணாத. இட் ஹாப்பென்ஸ். பீ ஆல்ரைட். சம்டைமஸ் வீ பீப்பில் ஆர் வல்நரபில். ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் சரி. ஐ கேன் அன்டெர்ஸ்டான்ட். எல்லாமே நம்ம கண்ட்ரோல்ல இல்லை”
“…..”
“தூக்கத்துல நடக்குறது பேசுறது மாதிரி இதுவும் நடந்துருக்கலாம். டீப் ஸ்லீப்ல நாம வேற உலகத்துல, வேற ஸ்டேட்ல இருக்கோம்”
“ம்ம்ம்”
“அஃப்கோர்ஸ். இதெல்லாம் உனக்கு தெரியாமயே நடந்துருந்தா தான்”
“ஸ்டில் யூ ஆர் டவுட்டிங் மீ?”
“இல்லை ஜஸ்ட் சொன்னேன்”
“…..”
நான் அணைத்துக்கொண்டபடியே அவளை சமாதானப்படுத்தினேன். அவள் கொஞ்சம் தேறி வந்தாள். கட்டில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“அப்படி ஒரு இன்சிடெண்ட் தான் இப்போ நம்மள சேத்துருக்கா?”
“எஸ்”
“அது தான் என்னை தடுத்துருக்கா அன்னிக்கு?”
“எஸ்”
“நாம தான் அப்போ பாத்துக்கவே இல்லையே?”
“பார்வைங்கிறது கண்ணோட மட்டும் தான் இருக்க முடியுமா என்ன? நினைப்புங்கறது மூளையில மட்டும் தான் தேங்க முடியுமா என்ன? நம்ம உடம்பும் சிலதை பார்த்துவைக்குது. தேக்கிவைக்குது. ஈவன் அவர் பாடீஸ் ஹாவ் அ சைட் அண்ட் மெமரி யூ னோ”
“விடு பாத்துக்கலாம். சரி ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ க்ரீன் டீ சாப்பிடலாமா? நான் போட்டு எடுத்துட்டு வரேன்”.
நான் போட்டுக்கொண்டு எடுத்து வந்து அவளிடம் கோப்பையை நீட்டினேன்.