என் பெயர் பெல்லா. என் பெயரை நீங்கள் படித்ததுமே எனக்குத் தொடையழகு என்ற பழமொழியும் ஞாபகத்தில் வந்திருக்கும். வராதவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. பனையோலையில மண்டாப்புல என்றும் பழமொழி இருக்கிறது என் பெயருக்கு. ஆனால் அதெல்லாம் சுடிதாரு, ஜட்டி, நைட்டி மற்றும் பாத்ரூம் உபயோகத்தில் இல்லாத காலத்தில் ஆடுமேய்த்து ஜீவனம் நடத்திய கெழட்டு மனுசனுங்களால் சொல்லப்பட்டவைகள். அந்தக்காலத்திய கெழட்டுப்பயல்கள் தங்கள் வாயில் வந்தனவற்றையெல்லாம் சொலவடைகள் என்று பச்சைப்பனையோலையில் கிறுக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

பெல்லா என்று எங்கப்பன் எட்வின் எனக்கு சிம்பிளாக பெயரிட்டதால் அவரை எனக்கு நிரம்பப்பிடிக்கும். ஆனால் கடவுள் சீக்கிரமாக பூமிக்கி வரப்போகிறார்.. என்கிற அதீத நம்பிக்கையில் வாழ்பவர். நாங்கள் சிறுவயதில் கிராமத்தில் இருந்தோம். எனக்கு அண்ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ஜான்சன். அவனும் கிராமப்பள்ளிக்கூடத்தில் தான் படித்தான். அவனுக்கு சில உடல்நலபிரச்சனைகள் இருந்துகொண்டேதான் இருந்தது அப்போது.

அப்போது என் அம்மா டெய்ஸி அந்தப்பள்ளியில் டீச்சராக இருந்தாள். பிள்ளைங்களை குச்சி வைத்து அடித்துப் பாடம் சொல்லிக்கொடுப்பதே அவள் வேலை. ஒருமுறை என் வகுப்பில் படித்த பழனிச்சாமி என்பவனின் அப்பன் வந்து எங்கம்மாளைக் கண்டபடி திட்டினான். பழனிச்சாமிக்கு கணக்குப்பாடம் வரலையென்று முந்தின தினம் இவள் குச்சிவைத்து நொட்டிவிட்டாள். அவன் அப்பனிடம் போய் சொல்லப்போக, அவன் பள்ளிக்கே வந்துவிட்டான். எங்கே அவன் என் அம்மாளை நொட்டிவிட்டுப் போய்விடுவானோ என்று பயமாயிருந்தது.

‘’பையனை இனிமே அடிச்சீன்னா தூக்கிப்போட்டு இவத்திக்கே ராடு சாத்தீருவேன் பாத்துக்க.. கிழிச்சிப்போட்டுப் போயிருவேன் பாத்துக்க!” என்றெல்லாம் அவன் பேசிவிட்டுப் போன நாளிலிருந்து எங்கம்மா டெய்ஸி கையில் குச்சியே எடுப்பதை விட்டொழித்தாள். அன்று என்  அம்மாளிடம் ‘ராடு’ன்னா என்னம்மா?ன்னு கேட்டு உச்சி மண்டையில் கொட்டுக்கா வாங்கினேன். ’பழனிச்சாமியோட அப்பனை ஊட்டுக்கே வரச்சொல்லி ராடு கிளப்பச்சொல்றேன் பாரு.. அப்பத்தான் இந்த நொட்டுறதை உடுவே நீயி!’ அப்படின்னேன்.

இதையெல்லாம் நான் உங்ககிட்ட ஏனோ சொல்லிட்டே இருக்கேன் பாருங்க! அடிக்கடி மறதி வேற இப்பெல்லாம் வந்துருது எனக்கு. தொடையழகுன்ற பழமொழியப்பத்தி பேச வந்து எங்கியோ போயிட்டேன். அதெல்லாம் அழகே கிடையாதுங்க! எனக்கு என்னோட மார்பகங்கள்தான் அழகு. பெரியவளாகி நான் காலேஜ் போயிட்டிருக்கப்ப என்னதான் சுடிதாரு போட்டு சால் போர்த்திக்கிட்டாலும் எதுக்க வர்றவன் நெஞ்சை துளைச்சிடறாப்ல ஈட்டி கணக்கா நிக்கிம். ‘அழகா இருக்குடி’ன்னு என் பக்கத்து டெஸ்க் காவ்யா அப்பப்ப புடிச்சு அழுத்திப்பார்ப்பா. நான் புடிச்சுப்பார்க்க அவ நெஞ்சுல ஒன்னுமிருக்காது. ஐயரூட்டு திண்ணையாட்டம்னு அதுக்கும் இந்த கெழட்டு மனுசனுங்க ஒலறி வச்சிருக்கானுங்க ஓலையில.

காலேஜ் படிப்பையெல்லாம் முடிச்சிட்டு ஒரு கம்பெனில போயி சேர்ந்துட்டேன். கம்பெனியிலயும் என்னோட மாருங்களை அழுத்திப்பார்க்க ஒருத்தி இருந்தா. அவ திவ்யா. அவளுக்குவேணா நான் திருப்பி அழுத்திப்பார்க்க கொய்யாக்காய் சைசுல வச்சிட்டிருந்தா நெஞ்சுல ரெண்டு. இந்த சமயத்துல எங்கண்ணனுக்கு பாப்பாவெல்லாம் பொறந்து அப்பாவாயிட்டான். என்னை பொண்ணு பாக்க வந்தவன் பேரு போர்ஹே! நான் நெட்டுல நொட்டிப்பார்த்ததுல போர்ஹேன்னு ஒரு லைப்ரேரியன் ஒருத்தன் கதைங்க எழுதின தகவல் கிடைச்சுது. பேரு நல்லா இருக்குன்னு அவனைக் கட்டிக்கிட்டேன். நல்லவேள இவன் லைப்ரேரியன் இல்ல. இவன் இஞ்ஜினியரு. மொத ராத்திரியில என்கிட்ட என்ன புடிச்சுதுன்னான்? பேரு நல்லா இருந்ததால புடிச்சுதுன்னேன். எனக்கு உன்னை ஏன் புடிச்சுதுன்னா ’இந்த மார்பகங்கள்’ அப்படின்னான். ’பொண்ணுப்பார்க்க வர்றப்ப நானுன் மூஞ்சியவே பாக்க இதுக உடுல’ என்றான். எனக்கு ரொம்ப சந்தோசமாப்போச்சு. எனக்குப்புடிச்சதுங்களையே அவனும் சொல்றானே! அப்புறம் என்னேரமும் அதுங்களையே புடிச்சு தூறியாடீட்டு இருப்பான் போர்ஹே. அவன் ராடும் நல்லகண்டிசன்ல இருந்ததால சீக்கிரமா நான் ஒரு பாப்பாவைப் பெத்துட்டேன்.

இப்பவும் பாருங்க நானு என்னமோ சொல்ல வர்றேன் உங்ககிட்ட ஆனா மாத்தி மாத்தி எதையோ சொல்றேன். மொத பத்தியை ஆரம்பிக்கிறப்பவே என் பேரு பெல்லான்னேன். அப்பவே எனக்கு வயசு நாப்பத்தஞ்சுன்னு சொல்லாம உட்டடிச்சிட்டேன் பாருங்க! இப்ப போர்ஹேவுக்கு தலையெல்லாம் நரைச்சி வயசு அம்பத்தியொன்னு ஆயிப்போச்சு. அவனோட ராடும் அப்பப்ப மக்கர் பண்ணுது. ’என்னாச்சி?’ன்னு கேட்டா, ’தெர்ல வயசாயிட்டு இருக்கறதாலயோ என்னுமோ’ அப்படின்னான் மூஞ்சியைத் தொங்க வச்சுட்டு. இதுக்கும் நான் நெட்டுல நொட்டிப்பார்க்கணும்.

என்னோட ஒரே பொண்ணு மேரியைக் கட்டிக்குடுத்து அவளும் பொண்ணுப்பிள்ளையை பெத்து என்னைய பாட்டியாக்கிட்டா. என்னோட கதை பாருங்க எவ்ளோ ஸ்பீடுன்னு! எங்கேயும் வேலைக்கெல்லாம் நான் போறதில்ல இந்த ரெண்டு வருசமா. ஊட்டுக்குள்ளயேதான் டிவி பார்த்துட்டும், அமேசான் பிரைம்ல படம் பார்த்துட்டும், ஹாட் ஸ்டார்ல லைவ் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டும், சில சமயம் மூடிருந்தா சீன் படம் பார்த்து எப்பிடி எப்பிடி ராடு கிளப்புறானுங்கன்னும் பார்த்துட்டும் இருப்பேன்.

அப்பத்தான் முகநூல்ல அக்கெளண்ட் ஒன்னு ஆரம்பிச்சு ‘ஏஞ்சல்’ அப்படின்னு பேரும் வச்சிக்கிட்டேன். என்னோட புரபைல் படமா ரோசாப்பூவை வைக்கலாம்னு நினைச்சேன். ஏன்னா எனக்கு ரோசாப்பூவை ரொம்ப புடிக்கும். ஆனா முகநூல்ல நெறையப்பேரு அதையே வச்சிருந்தாங்கன்னு நடிகை மூஞ்சியை வெச்சிக்கலாம்னும் நினைச்சேன். தமிழ்ல எந்த நடிகையோட மூஞ்சியும் பார்க்க மூஞ்சி மாதிரியே இல்லியேன்னு கவலைப்பட்டேன். போர்ஹே கிட்ட அந்தன்னைக்கி ‘ஏனுங்க.. இந்த மாதிரி முகநூல்ல கணக்கு ஓப்பன் பண்ணி புரபைல் பிச்சர் வச்சிக்கலாம்னு இருக்கேன். நடிகர்கள்ல யாருங்க உங்களுக்கு அழகா இருக்காப்ல தெரியுது?’ அப்பிடின்னேன். உடனே ‘ஷாருக்கான்! அவனை வச்சிக்க பேபி!’ என்றான். ‘ஏனுங்க நீங்க.. அவன் மூஞ்சியும் வாயும் ராடு சப்புரவனாட்டமே இருக்குது.. நீங்க சொல்லவே வேண்டாம்’ அப்பிடின்னுட்டேன்.

அப்புறமா ஒருவழியா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் மூஞ்சியை புரபைல்ல வச்சிக்கிட்டேன். ‘நெசமாலுமா?, மேடம் உங்களுக்குத் தமிழ் தெரியுமா?, கிரிக்கெட்டை எப்பயிருந்து விளையாட ஆரம்பிச்சீங்க?’ கேட்டுட்டே இருந்தாங்க! அப்புறம் ரெண்டுமூனு பெண்கள் குழுவுல நானாப்போயி சேர்ந்துக்கிட்டேன். வாட்சப்பும் ஹர்மன்ப்ரீத் கவுர் மூஞ்சியைப் போட்டு ஆரம்பிச்சுட்டேன். மெதுவா மெதுவா எனக்கு பைத்தியம் புடிக்க ஆரம்பிச்சிருக்குன்னு போர்ஹே எச்சரிச்சாரு. அப்படி எனக்குத் தெரியலன்னாலும் பொழுது நல்லா போச்சு.

வடை சுட்டும், போண்டா சுட்டும், லட்டு புடிச்சும் போர்ஹேவுக்கு குடுக்க ஆசைப்பட்டு செய்யுறதையெல்லாம், ‘பிரண்ட்ஸ் இன்னிக்கு ஈவனிங் எங்க வீட்டுல வடை!’ என்று வடைகளையும், லட்டு உருண்டைங்களையும் அப்பப்போ போட்டொ எடுத்துப்போட்டேன். ‘எனக்கு குடுக்காம தின்னா வயித்துவலி வந்துரும் மேடம்!’ என்று கிறுக்கன் ஒருத்தன் கேட்டிருந்தான். ‘வட சுட்ட கைகளுக்கு தங்க வளையல் போடணும்!’ என்று இன்னொரு அரைவேக்காடு போட்டிருந்தது. இதெல்லாம் எனக்கு ஜாலியாக இருந்தது. மேடம் உங்க வயசென்ன? உங்களைக் காதலிக்கிறேன்! உங்களுக்காக உசுரைக்குடுப்பேன்! நீங்க கோவையா? பொள்ளாச்சியா? இப்படி உள்டப்பியில் பல கேள்விகள்.

டிவி பார்ப்பதை விட்டுவிட்டேன். இன்னமும் டிவியில் புருசனுக்கு ஆக்கிப்போட்டு, கோவிலுக்குப் போற கதைகளில் தான் பெண்கள் நடிக்கிறார்கள். மாமனாரும் மாமியாரும் சேர்ந்து மருமகள் மூஞ்சியில் கரியைப்பூசி ரோட்டுக்கு அனுப்புகிறார்கள். பார்க்க பாவம் வரவேண்டுமென பேக்ரவுண்டில் வயலினை மெதுவாய் இழுக்கிறார்கள். இங்கே எனக்கோ சிரிப்பாய் இருக்கிறதென டிவியை விட்டு விட்டு செல்போனிலேயே குடியிருக்க ஆரம்பித்தேன்.

முகநூலில் எல்லோரு கவிதை எழுதுகிறார்கள் என்று நானும் எழுதிப்பார்க்க முயற்சித்தேன். ‘மயிலைப்பார்த்து மயங்கி நின்ன மானே! குயிலைப்பார்த்து குலுங்கி நின்ன தேனே!’ என்று எழுதி மயில் புகைப்படத்தை நெட்டிலிருந்து சுட்டுப் பதிவேற்றினேன். ‘மேடம் நீங்க சினிமாக்கு பாட்டெழுதப்போனீங்கன்னு வெச்சிக்கங்க.. வைரமுத்து காலி!’ என்று கமெண்ட் எழுதவும் தலைகால் புரியாமல் ஹாலில் ஆட ஆரம்பித்தேன். அப்புறம் பெண்கள் எல்லோரும் முகநூலில் பிஸ்னஸ் பண்ணுகிறார்கள் என்பதையும் பார்த்தேன். பாலியலைத் தூண்டும் பெட்ஷீட்டு, சூத்துலமுட்டும் சவுரி முடி, தேவந்திரகுல நெத்திப்பொட்டு, பட்டிக்காட்டு கடலை முட்டாயி, பனைமரக்குடி பாமாயில், மாந்திரீக ராடு ரப்பர்னு விக்கிறாங்க!

கெழவாடிங்க ஓலைச்சுவடில கிறுக்கி வச்சாப்புல, புதுசுக்கு கடுசா வெளுத்தேன் நானு முகநூல்ல. அப்பிடியே ஹர்மன்ப்ரீத் கவுர் போட்டாவ தூக்கீட்டு புரபைல்ல என்னோட முகத்தை போர்ஹேவினோட கூலிங்கிளாசை போட்டிருக்கறாப்ல எடுத்து வச்சேன். ஆயிரத்துக்கும் மேல லைக்கி, லவ்வு சிம்பள்களை குத்தினாங்க! கமெண்ட் செக்சன் நிரம்பி வழிஞ்சுது. அதுல ஒருத்தன் போட்டிருந்தான்.. ‘கர்த்தர் உங்களை ரட்சிப்பாராக!’ அப்படின்னு. இவன் எதுக்காக எல்லாரு போலவும் பாராட்டி நாலு வார்த்தை எழுதிட்டு போகாம இப்பிடி எழுதியிருக்கான்? அப்படின்னு யோசனை பண்டுனேன். அப்புறம் சில தொந்தரவுகள் வரவும்தான் ஏன் அந்தாளு அப்பிடி போட்டான்னு தெரிஞ்சுது.

மார்பகங்களின் ரசிகன்னு ஒரு ஐடி எனக்கு நட்புல இருந்தான். ‘உங்க முழுப்போட்டாவை மரத்துல சாய்ஞ்சமானிக்கி நிக்குறாப்ல ஏத்தியுடுங்க ஆண்ட்டி! நான் வீச்சு போட்டுக்கறேன்!’ அப்படின்னு எழுதியிருந்தான். போர்ஹே கிட்ட ‘வீச்சு!’ அப்படின்னா என்னாங்க” என்றேன். இஞ்சினியருக்கும் அது தெரியல.

அப்புறம் பெண்கள் வச்சிருக்கிற ‘அள்ளித்திம்போம்’ குழுவுல போயி பதிவுபோட்டுக் கேட்டேன். எல்லாரும் சிரிப்பு ஸ்மைலியையே போட்டுட்டு போறாளுங்க! எவளும் சொல்ல மாட்டேங்கறாளுங்க! அப்புறமா ஒருத்தி என்னோட உள் டப்பிக்கி வந்து விளக்கம் சொன்னா! வந்துது பாருங்க எனக்கு கடுப்பு.

‘’என்னோட பக்கத்துல ஆபாசமான கமெண்டுகள் போடுவதைத் தவிருங்கள். என் பதிவுகள் பிடிக்கலன்னா ப்ளாக் பண்ணிட்டோ, நட்பு நீக்கம் பண்னிட்டோ போயிருங்கள். ஒரு சில ஈத்தரை நாய்கள் இருக்கின்றன. எனக்கு மனச்சங்கடத்தைக் கொடுக்காமல் அந்த ஈத்தரைகள் போயிட்டா நல்லது. எனக்கு புதிய ராடு வேண்டுமென்று நான் இங்கே வரவில்லை. நான் இங்கே எதையும் வித்து காசு பண்ணவும் வரவில்லை. உங்கள் மனதை நோகடித்து இன்பமடையவும் வரவில்லை.” என்று எழுதிப் பதிவிட்டேன்.

‘எந்தெந்த நாய்கள்னு சொல்லுங்க மேடம். நாங்க பாத்துக்கறோம்’ என்று களத்தில் பலர் குதித்தார்கள். ‘அவனாத்தான் இருக்கும்.. அவனுக்கு இதே வேலைதான். அவன் நாலஞ்சி ஐடில இருக்கான். இப்ப தூக்குறேன் பாருங்க அவனை!’ என்றெல்லாம் ஓடியது. எனக்கு ஒரு பிரி கழன்று போனது. அதில் ஒருவன் வந்து ‘முழுப்போட்டாவை இந்த இழுபறியில போட மறந்துடாதீங்க.. அப்புறம் இங்க பத்துப்பொணம் விழுந்துரும்!’ என்று போட, அவனுக்கும் கீழே சிலர் வந்து பேசினார்கள். ‘அவசரப்படாதடா மச்சான்.. அவிங்க போடுவாங்க!’ ‘மாப்பிள்ளைக்கி அவ்ளோ வெறி!’ ‘அவங்க மார்பகங்க பப்பாளிங்க அப்படிங்கறதால போட மாட்டீங்கறாங்க!’ ’பாபிலோன்ல நெகபுத் நெசாரு தொங்கும் தோட்டத்தை அமைச்சாரு.. அடுத்து அமைச்சது இவங்க தான்!’

என்ன இழவுடாயிது? என்று அன்றே என் முகநூல் கணக்கை முடித்துக்கொண்டேன். மேலும் வந்த இரண்டு நாட்களில் எனக்கு இன்னொரு பிரியும் கழன்றுவிட்டது. போர்ஹே என் முகவாட்டத்தைக்கண்டு சங்கடப்பட்டான். ‘என்னாச்சு பேபி? எப்பவும் மகிழ்ச்சியா இருப்பியே? எதாச்சிம் பிரச்சனையா?’ என்றான். என்னான்னு நான் அவனுக்கு சொல்லுவேன். அவன் செல்போனைத் தன் பணி நிமித்தமாக பேசுவதற்கும், பணப்பரிமாற்றங்களுக்குமே வைத்திருக்கிறான். ‘ஒன்னுமில்ல.. சீக்கிரம் சரியாயிடுவேன் போர்ஹே!’ என்று மட்டும் சொன்னேன்.

அன்று படுக்கையறையில் நான் தூங்கிக்கொண்டிருக்கையில்தான் முதலாக என் மார்பகங்களை யாரோ நாம்பிப்பிடித்து கசக்குவதாய் உணர்ந்தேன். விழித்துக்கொண்ட நான் இது போர்ஹேவின் வேலையாகக்கூட இருக்கலாமென சும்மாயிருந்தேன். ஆனால் போர்ஹே இப்படிக் கசக்கமாட்டான். இந்தப்புடியும் அழுத்தமும் வேறு என்பதை உணர்ந்து கண்விழித்துப்பார்த்தேன்.

இரவு விளக்கு நீலவர்ணத்தில் அறைக்குள் ஒளியை பரப்பி வைத்திருந்தது. போர்ஹே சற்றுத்தள்ளி அந்தப்புறமாய் முகம் வைத்து தூங்கிக்கொண்டிருந்தான். ’அப்ப யாரிது?’ அதிர்வாய் எழுந்தேன். என்னருகில் யாருமே இல்லை. ஆனால் என் மார்பகங்கள் கசக்கப்படுவதும் நிற்கவேயில்லை. அடக்கடவுளே! என்று தலையணையை எடுத்து என்னைச்சுற்றிலும் சுழற்றினேன். தலையணை யாரையுமே தாக்கவில்லை. சும்மாவுக்குத்தான் சுழன்று வந்தது.

மளாரென படுக்கையிலிருந்து இறங்கி பாத்ரூமுக்குச்சென்றேன். உச்சா போவதற்கு அமர்ந்த போதும் என் மார்பகங்கள் கசக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. எனக்கு என்னவாயிற்று? யார் இப்படிச்செய்வது? குழம்பிப்போய் மீண்டும் படுக்கையில் வந்து விழுந்தேன். பாத்ரூமிலிருந்து படுக்கைக்கு நடந்து வருகையிலும் என் மார்பகங்கள் கசக்கப்படுவதை நன்றாகவும், தெளிவாகவும் உணர்ந்தேன். யாராவது பில்லி சூனியம் ஏவி விட்டார்களா? செல்போன் மூலமாக இது நடக்க சாத்தியமிருக்கிறதா? படுக்கைக்கு வந்ததுமே கம்பளிப்போர்வையை உடல் முழுக்கவும் போர்த்திக்கொண்டேன்.

அப்படியும் என் கம்பளிக்குள் இரு மார்பகங்களுமே குறிப்பிட்ட அளவில் அழுத்தி அழுத்தி பிசையப்படுவதை உணர்ந்தேன். அடக்கடவுளே! இதை இப்போது போர்ஹேவுக்கு எழுப்பிச்சொன்னால் என்ன செய்வான்? காற்றோடு போராடுவானா? இது பேயாக இருக்கலாமோ! சேச்சே! பேயாவது பூதமாவது? ஞாபகம் வந்தவள் போல என் கழுத்தை தொட்டுப்பார்த்தேன்.

இதோ.. இப்பச்சரியாகிடும் என்று மீண்டும் கம்பளியை விளக்கிவிட்டு எழுந்து ஹாலுக்கு வந்தேன். மேஜையின் இழுப்பானை இழுத்து உள்ளே கையை விட்டுத் தேடி சிலுவைச்செயினை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன். இப்ப மார்பகங்களை பேய் கசக்கியிருந்தால் தலைதெறிக்க ஓடிவிடுமென நம்பினேன். அப்படி எதுவும் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மணியை என்னவென்று பார்த்தேன் ஹால் சுவற்றில். இரவு மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.

இனிப்போய் படுக்கையில் விழ முடியாது, விழுந்தாலும் இந்த மார்பகங்கள் கசக்கப்படுவது நிற்காது என்று தெரிந்து விட்டது. நேராய் ஹாலில் கிடந்த சோபாவில் போய் அமர்ந்தேன். ‘என் மார்புகளை இப்படி கசக்காதே.. விட்டுடு!’ என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டேன். யாரேனும் எனக்கு பதில் சொல்வார்களென காதுகளை தீட்டிக்கொண்டு கேட்டேன். யாரும் பதில் அளிக்கவில்லை. என் காதுக்கருகாமையில் காமத்துடன் கூடிய மூச்சுக்காற்று புஸ் புஸ்சென வீசுவதை அப்போது உணர்ந்தேன்.

தொடர்ந்து கசக்கப்படும் மார்பகங்கள் என்ன கதியாகும்? என்று தெரியவில்லை எனக்கு. இப்படி மார்பகங்கள் கசக்கப்பட்டுக்கொண்டே இருந்தால் ராடு சாத்தும் எண்ணமும் கூடவே வந்துவிடுமே! அதற்குத்தனியாக ராடு வருமோ என்னவோ? ஐயோ! அதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் உச்சாவுக்குப் போக முடியாது.. டூ பாத்ரூமுக்குப் போக முடியாது. வெளியில் கிளம்ப முடியாது.. சர்ச்சுக்குp போக முடியாது.. எல்லாமே முடியாது முடியாதுதான்!

“என் மார்பகங்களை விட்டுவிடு! இப்படி கசக்கிக்கொண்டே இருந்தால் அவைகள் பெரிதாகித்தொங்கிவிடும்! அப்போது நான் வெளியுலகை காணச்செல்ல முடியாமல் போய்விடும். நான் இந்த வீட்டினுள் கிடப்பதை நீ விரும்புகிறாயா? தயவுசெய்து விடு அவைகளை! ஒருமணி நேரமாக தொடர்ந்து அவற்றை நீ கசக்கிக்கொண்டே இருக்கிறாய். போதும் போய்விடு! எனக்குச்சலிப்பாய் இருக்கிறது!” என்று மெலிதான சப்தமுடன் சொன்னேன். யாரும் கேட்டது போலவே இல்லை. என் பேச்சுக்கு மரியாதை தர அங்கே யாரும் இருக்கவில்லை.

ஒருவேளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் மனிதர்களோடு ஏலியன்கள் வாழ்வதாகச் சொன்னார்களே! அதில் ஒன்றா இது? அடக்கடவுளே! அது அப்படித்தானாக இருக்கவேண்டும். அதுதான் இந்தப்புடியும் கசக்கலும் ஒரே விதமாய் மிஷினின் அழுத்தம் போலவே இருக்கிறது. நான் அந்தக்கைகள் கசக்காவண்ணம் என் இரு கைகளையும் மார்பில் வைத்து நானே அழுத்திப் பிடித்துக்கொண்டேன். எதுவும் அங்கே சற்று நிமிடம் வரை நடைபெறவில்லை. எல்லாம் இரண்டு நிமிடங்கள்தான். என் இரு கைகளையும் யாரோ பிடுங்கித்தள்ளுவதை உணர்ந்தேன். என் கைகள் என் மார்பகங்களை விட்டு விட்டுத் தனித்து வந்துவிட்டன. மீண்டும் என் மார்பகங்கள் பிசையப்பட்டன.

இதற்கு இன்னுமொரு வழி இருக்கிறதே! சோபாவில் நான் மேல்நோக்கிப்பார்த்தபடி கால்நீட்டிப்படுத்தேன். மறுகணம் மளாரென குப்புறப்படுத்துக்கொண்டு என் மார்பகங்களை சோபாவில் புதைந்து போய்விடுமளவு அழுத்திப்படுத்துக்கொண்டேன். இனி என்ன நடக்குமென சற்றுநிமிடம் பொறுத்திருந்தேன். இப்போது என் மார்பகங்களிடம் எந்தக்கைகளும் வரவில்லை.

அவ்வளவுதான். கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் வரை எதுவும் நடக்கவில்லை. நிம்மதியாய் இருந்தது எனக்கு. இனி அந்த ஏலியன் ஏமாந்து அடுத்த வீட்டுக்காரி அல்போன்ஸா மார்புகளைத்தேடி ஓடியே போய்விடுமென நம்பினேன். நான் தான் மார்பகங்களை என் சோபாவில் புதைத்துக்கொண்டேனே! அப்படியே நிம்மதியாய் அரைமணி நேரத்தில் தூங்கிப்போய்விட்டேன்.

போர்ஹே விடிந்த பிறகு மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தவன் நான் சோபாவில் உறங்குவது கண்டு வந்து என்னை எழுப்பினான். ’ஏன் இங்கே வந்து படுத்திருக்கிறாய் பெல்லா?’ என்றான். ‘இங்கே நன்றாக இருக்கிறது போர்ஹே!’ என்றேன். ‘உனக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் அப்படியே படுத்திரு.. இன்று சமையல் வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்றான்.

நான் அந்த ஏலியனை மறந்துவிட்டிருந்தேன். இதுநாள்வரை குப்புறப்படுத்து தூங்கியிராத நான் இன்று தூங்கியிருக்கிறேன். எழுந்துகொள்ள நான் முயற்சித்தபோது என் மார்பகங்கள் சோபாவிலிருந்து விடுபட்டதும் அந்தக்கைகள் கப்பென அவற்றைப்பிடித்துக் கசக்க ஆரம்பித்துவிட்டன. அடக்கடவுளே!

மீண்டும் நான் குப்புற அழுத்திக்கொண்டே படுத்தேன். அப்போ பக்கத்துவீட்டுக்காரியின் மார்பகங்களை கசக்க ஏலியன் போகவே இல்லையா? என் மார்பகங்கள்தான் அதற்கு கனகச்சிதமாய் பிடித்திருக்கிறதா? நான் என் மார்பகங்கள்மீது காதலாய் இருந்தவள்தான். என் மார்பகங்களைப்பார்த்து பெண்கள் ரசிப்பதை ஓரக்கண்ணால் பார்த்து மகிழ்ந்தவள்தான். இப்போது அவைகளை நான் இந்த கணத்திலிருந்து வெறுக்க ஆரம்பித்தேன். மார்பகங்கள் என்பன எந்தநேரமும் கசக்கப்படுவதற்கானவைகள் அல்லவே!

ஏதோ ராடு சாத்த ஆயத்தமாகும் நேரத்தில் சித்தங்கூரியம் பிசையப்பட்டால்தானே மார்பகங்களே மகிழ்ச்சியடையும். மார்பகங்களை கசக்குவதில் பிரியம் வைத்திருக்கும் ஏலியன் ஒன்று நம் வீட்டினுள் நுழைந்துவிட்டது என்று போர்ஹேவிடம் இப்போது சொன்னால் பயந்துவிடுவான். பார்ப்போம். அந்தக்கைகளோடு இன்று முழுதும் போராடுவோம். ஒருவேளை பகல் வெளிச்சத்தில் ஓடிப்போய்விடும் ஏலியனாக்கூட அது இருக்கலாம். எதற்கும் அதை இப்போதே செக் செய்துவிடலாமென மளாரென்று எழுந்தவள் நேராக ஹாலைவிட்டு வெளியேறி வீட்டின் வாசலுக்கு வந்து நின்றேன்.

கிழக்கில் வானத்தில் கிளம்பியிருந்த சூரியன் என் வீட்டு வாசலில் சுள்ளென வெளிச்சத்தை வாரிவழங்கியிருந்தான். ஆனால் இந்த ஏலியன் வெளிச்சத்துக்கு பயப்படவேயில்லை. என் மார்பகங்களை இடைவெளி விடாமல் கசக்கிக்கொண்டே இருந்தது. சரி, அதுபாட்டுக்கு அதன் காரியத்தை செய்துகொண்டிருக்கட்டும், இப்போதைக்கு சமையலில் போர்ஹேவுக்கு உதவி செய்து அவனை சாப்பிட வைத்து டூட்டிக்கு அனுப்பிவிடுவோம். பிறகு யோசிப்போமென நான் சமையல் அறைக்குள் நுழைந்தேன்.

என் முகத்தைக் கொஞ்சமேனும் அவன் கவனிக்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாய் காட்டிக்கொண்டேன். ஒருவழியாய் ஒன்பது மணியளவில் அவனைத்தாட்டி அனுப்பிவிட்டுக் கதவை உள்புறமாய் தாழ்ப்பாளிட்டு வந்து சோபாவிலேயே குப்புறப் படுத்துக்கொண்டேன். இப்போது தான் இட்லி ஐந்து சாப்பிட்டிருந்ததால் கொஞ்சம் சிரமமாய் இருந்தது.

முன்பு லைட்டாய் தொந்தி போடுகிறதென நெட்டில் நொட்டியபோது தூங்குகையில் குப்புறடித்து படுக்கச்சொன்னாள் ஒருத்தி யூடியூப் வீடியோவில். அவளுக்கே கொந்தி மத்தாளம் போல வயிறு இருந்ததைk கவனித்தேன். படுத்துப்பார்த்து மூச்சு முட்டுகிறதென விட்டேன். பின்பாக இஞ்சி டீ குடிக்கச்சொன்னாள் ஒருத்தி. அவள் வயிறு தப்பட்டை போலிருந்தது. ஒருமாத அளவு இஞ்சி டீ குடித்தபிறகு வயிற்றுமேடு குறைந்துவிட்டதை உணர்ந்து இஞ்சி டீ குடிப்பதை விட்டொழித்தேன்.

இதையெல்லாம் எனக்காக மட்டுமே செய்தேன். நாலுபேர் பார்த்தால் ’சிறப்பா இருக்குதுடா இந்த ஆண்டியோட வயிறு!’ என்று சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டு செய்யவில்லை. ஆனால் இப்படி அநியாயத்துக்கு கண்ணுக்குத்தெரியாத வேற்றுக்கிரக உயிரியால் என் ஆசை மார்பகங்கள் கசக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

நீங்கள் நினைத்துப்பாருங்கள்.. உங்கள் மார்பகங்கள் எந்தநேரமும் கசக்கப்பட்டுக்கொண்டே இருந்தால் மார்பகங்கள் இரண்டையும் அறுத்து ரோட்டோரத்திலிருக்கும் குப்பைத்தொட்டியில் வீசிவிட ஆசை கொள்வீர்களல்லவா! அட, அப்படியே அவை கசக்கப்படுவதை ரசிக்கிறோமென்றால் எந்த நேரமுமா? சரி, இனி இந்த மார்பை வைத்துப் பிழைக்க முடியாது என்று தெரிந்து, அறுத்தெரிய பயமாய் இருக்கிறதென்றால் டாக்டரிடம் சென்று ஆபரேசன் செய்தாவது அகற்றிக்கொள்ளலாம்.

இப்போ சக்கரைவியாதி வந்தவர்கள் ஓடிப்போய் கால்களை எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் படுத்துக்கொள்கிறார்களே! போனவாரம் இதே வீதியில் ஜோசப் சார் சக்கரை காரணமாய் தன் ஒரு காலை எடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார். அப்புறம் ஆளும் வாரக்கடைசியில் போய்ச்சேர்ந்துவிட்டார்.

இனி என் மார்பகங்கள் ஒரு பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தேவையில்லை. முகநூலில் இருந்த ’முலைகளின் காதலனு’க்கும் கொண்டு போய் சித்தநேரம் பிசைந்துகொள்ள கொடுக்க முடியாது. போர்ஹேவுக்கும் இப்போது மார்கள்மீது முன்புபோல நாட்டமில்லை. போதுமென முடிவெடுத்துவிட்டால் ஆபரேசன் தியேட்டருக்குப் போய்விடலாம். ஆனால் மகளிடமும், மருமகனிடமும், போர்ஹேவிடமும் இதுபற்றி ஆலோசித்து முடிவெடுத்த பின்னர்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏற்கனவே புராணத்தில் மார்புகள் அறுக்கப்பட்ட பெண் இருக்கிறாளே!

அப்புறமென்ன, அன்றைய நாளில் பலமணி நேரத்தைக் குப்புறடித்து படுத்துக்கிடந்தே ஓட்டினேன். இரவு விழும் நேரத்தில் வீடு வந்த போர்ஹேவிடம் என் பிரச்சனையை நான் சொன்னபோது அவனே ஒரு ஏலியன் மாதிரி மாறிப்போய் என் மார்பகங்களை வெறித்துப்பார்த்தான். ‘யாரும் கசக்குறாப்ல தெரியலயே பேபி.. அதுக பாட்டுக்கு கம்முன்னுதான் இருக்குதுக! நீயா கற்பனை பண்ணிக்கறீன்னு நினைக்கிறேன். முகநூல்ல போயி ஸ்டேட்டஸ் போட்டுட்டு ஆடாதேன்னு நாசுக்கா சொன்னேன். நீ கேட்கல! எதுக்கும் நாம நாளைக்கி மனநல மருத்துவர் ஏசப்பன்கிட்ட போவோமா? அப்பாய்ண்ட்மெண்ட் இப்ப வாங்கிடறேன்!’ என்றான்.

எனக்கும் அது சரியாகவே பட்டது. இவர் என்னடாவென்றால் மார்புகள் அதுகபாட்டுக்கு சும்மாதான் இருக்குதுக அப்படிங்கறாரே! எனக்கு இப்ப வலியா வேற இருக்கு! கணுக்கனுன்னு வலிக்குது. புதுசா இன்னிக்கி மத்தியானத்துக்கும் மேல இன்னம் ரெண்டு கைகள் வந்துட்டாப்ல இருக்கு. மார்பகங்களோட காம்புகளை அந்தக்கைகள் போட்டு கண்டமானிக்கி திருகிட்டே இருக்குதுகள்.

அப்ப ரெண்டு ஏலியன்கள் வந்து சேர்ந்துட்டுதுக! அப்படித்தான் உறுதியா நம்புறேன். இனி இந்த ஏலியன்களுக்கு என்னை மட்டும் பிடித்துப்போனதென்றல் கூட்டமாய் வந்து பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பது போல மொய்த்துவிட்டால் என்பாடு திண்டாட்டமாகிவிடும்.

ஆனால் போர்ஹே சொல்லும் மருத்துவன் ஏசப்பன் நகரில் பெரிய வைத்தியனாயிற்றே! பேசுறதுக்கே பைசா கேட்பான். அண்ணன் ஜான்சன் வைத்தியனுங்களைப்பற்றி பெரிய குற்றப்பத்திரிகையை என்னிடம் தாக்கல் செய்தானே! அன்றிலிருந்து வைத்தியர்களிடம் செல்வதற்கே பயமாய் இருக்கிறது. கண் டாக்டரிடம் கண்ணில் குறைபாடென போய் அமர்ந்தால் காதினுள் பிரச்சனை இருப்பதால் கண்ணுக்குப் பிரச்சனை என்றும், மண்டையைப்போய் முதலாக முழுசாய் ஸ்கேன் செய்து வாருங்கள்! என்றல்லவா சொல்கிறான்கள். சரி, என் ஏலியன் செல்லங்களே.. சீக்கிரமாய் நீங்கள் என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றே ஆகணும் பார்த்துக்கங்க!

அடுத்தநாள் ஏசப்பனின் பிரமாண்டமான மருத்துவமனைக்குள் நானும் போர்ஹேவும் சென்றபோது என்னோட பொண்ணு மேரியும் அங்கே எங்களை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ‘அம்மா! உங்களுக்கு இப்படின்னு அப்பா ராத்திரி எனக்கு கூப்பிட்டு சொன்னதுல இருந்து எனக்கு தூக்கமே வரலைம்மா! ஏலியன்கள் கொரனா சமயத்துலதான் பூமியில வந்து இறங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்மா! உனக்கு ஒன்னும் ஆகாதும்மா! ஏசப்பன் அவிங்களை முடுக்கி உட்டுருவாரு!’ அப்பிடின்னா!

’பாப்பா எங்கடி? பெத்தவ இப்பிடி உட்டுட்டு வரலாமா? மாமியா பாத்துக்குவாளா?’ அப்பிடின்னேன். ‘போயிருவன்மா, இன்னும் ஒரு மணிநேரம் இருப்பேன்! அதுக்குள்ள ஏலியன்களை ஏசப்பன் முடிக்கி உட்டுட்ட நல்ல தகவலைக் கேட்டுட்டு, நிம்மதியா வீட்டுக்குப் போயிடறேன்!’ என்றாள்.

பிள்ளை பயந்துட்டாளாட்டமிருக்கு. ஆனால் அவள் என் அருகில் அமராமல் தள்ளிப்போய் அமர்ந்திருந்தாள். போர்ஹே தான் என்னை ஏசப்பன் அழைக்கும்வரை அருகில் அமர்ந்திருந்தான். நிச்சயம் என் பக்கத்தில் அமர்ந்தால் உடனே மேரியின் மார்புகளுக்கு தாவிவிடும்கள் இந்த ஏலியன்கள் என்று பயந்திருப்பாள். ஏனென்றால் அவள் மார்பகங்களும் என்னுதுக மாதிரி எடுப்பானவைகள்.

இந்த போர்ஹே முட்டாள் பிள்ளைக்கி கூப்பிட்டு சொல்லியிருக்கான் பாருங்கள்! ’அம்மாவின் மார்பகங்கள் கசக்கப்படுகின்றன!’ என்று! அவள் என் மருமகனுக்கு உடனே சொல்லியிருப்பாளே.. ‘அம்மாவின் மார்களுக்கு ஆபத்து!’ என்று! இனி மருமகப்பிள்ளை ஒரு நோயாளியை பார்க்க வருவது போல பறந்தடித்து வீட்டுக்கு வந்ததுமே அவன் பார்வை என் மார்புகள் மீதே இருக்குமே! ‘அத்தே பயப்படாதீங்க.. உங்க மார்பகங்களை அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து சீக்கிரமா காப்பாத்திடலாம்! என்பானே. எல்லாம் இந்த முட்டாள் போர்ஹேவால் வந்தது. இப்படியான நினைப்புகளால் என் மார்புகள் கசக்கப்பட்டுக்கொண்டிருப்பதையே மறந்திருந்தேன் என்றே சொல்லலாம்.

டாக்டர் ஏசப்பன் இருளான அறையில் அமர்ந்திருந்தார். அவரே பார்க்க ஒரு ஏலியன்தான். அவரது கண்கள் குழிக்குள் இருந்தது. போர்ஹேவும் என்னுடன் மற்றொரு சேரில் அவர் முன்பாக அமர்ந்தான். விசயத்தை நான் சொல்ல முழுதாக கேட்ட ஏசப்பன் புன்னகைத்தார். அப்படித்தான் தெரிந்தது எனக்கு. அதனால் கொஞ்சம் கோபப்பட்டேன் நான். ’நான் டாக்டர்களை பெருசா நம்புறதில்லே!’ அப்பிடின்னேன். ‘ஏன்?’ என்று என்னையே பார்த்தார் ஏசப்பன்.

“என் அண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே சிலபல பிரச்சனைகள். எந்த டாக்டரும் உண்மையான காரணத்தை சொல்லாம பல வைத்தியங்கள் பார்த்துட்டு இருந்தாங்க! ஒரு கட்டத்துல எல்லா வைத்தியங்களையும் உட்டுட்டான். பார்த்தா சிறப்பா இருந்தான். கல்யாணப்பேச்சு வீட்டுல வந்தபோது மறுக்காவும் பிரச்சனைன்னான். அவனோட விரைகள்ல ஒன்னு நீலக்கலர்ல மாறிடுச்சாம்! டாக்டர்ட்ட போனான். நீலக்கலர்ல இருக்குற விரையை எடுத்துடலாம்! உயிருக்கே அதனால ஆபத்து வரலாம். ஒத்தை விரையில பலபேரு வாழுறாங்கன்னு சொல்லி அந்த புண்ணியவான் அறுத்து வீசிட்டாரு. அப்புறம் மேரேஜ் பண்ணிட்டான். பிள்ளையெல்லாம் பிறந்துடுச்சு. மறுக்காவும் இன்னொரு விரை நீலக்கலர்ல ஆயிடுச்சு! மறுக்காவும் இருக்குற ஒன்னையும் அறுத்து அந்தாளு காக்காயிக்கி வீசீருவான்னு வேற டாக்டர்கிட்ட போனான். அந்தாளு பார்த்துட்டு.. இனிமே நீயி நீலக்கலர் ஜீன்ஸ் போடுறதையே உடு! வேட்டி கட்டிக்க! ஜீன்ஸ் போட்டதுக்கெல்லாம் ஒரு விரையை தொலைச்சிட்டு வந்திருக்கே பாருன்னு சொன்னாராம். இப்ப அண்ணன் சேப்பா இருக்கான்! அதனால பெருசா டாக்டர்களை நான் நம்புறதில்லெ!’ அப்பிடின்னேன்.

‘உன்னை நான் மெஸ்மரிசம் பண்ணனும். எழுந்து வா!’ என்று அவர் சொல்லி எழுந்து பக்கத்தில் கதவு இருக்கிறதா? என்று சந்தேகப்படும்படியான இடத்தில் தள்ளிக்கொண்டு சென்றார். பின்னாலேயே நானும் எழுந்து சென்றேன்.

பத்து நிமிடத்தில் அந்த அறைக்குள்ளிருந்து ஏசப்பனும் நானும் வெளிவந்தோம். போர்ஹே கைகளை முன்புறமாய் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். கண்டிப்பாய் ஏசப்பன் தனியறைக்குள் கூட்டிப்போய் என் மார்புகளை கசக்கியிருப்பாரென நினைக்க மாட்டான். அவனுக்கு அவன் பணிகளின் அழுத்தம் பற்றி யோசித்தபடி இருந்திருப்பான். இப்போது எனக்கும்வேறு இப்படி பிரச்சனை. போர்ஹே பாவம்.

“டாக்டர், என் பேபியை ஏலியன்கள் தான் போட்டு இந்தப்பாடு படுத்துகின்றனவா?” என்று போர்ஹே கேட்டதற்கு, அவர் மீண்டும் புன்னகையைப் பதிலாய் தந்தார். மனநோயாளிகளோடு பழகிப்பழகி இந்த ஏசப்பனுக்கும் மனநோய் இருக்கும் போலிருக்கே!

‘’உங்க பேபிக்கு இது ஆரம்ப ஸ்டேஜ்தான்! பதினைஞ்சு நாளைக்கி மாத்திரை எழுதித்தர்றேன். நல்லா தூங்குனாங்கன்னா இது சரியாயிடும். பெல்லா, வீடு போனதீம் நீ முகநூல் கணக்கை ஆரம்பிச்சுக்க! திடீருன்னு ஒட்டுமொத்த மனநோயாளிங்களை ஒரே இடத்துல பார்த்ததுனால வந்த சின்னக்கோளாறுதான் இது. அங்க நீ இயங்கணும்னா நீயும் அவங்களாவே மாறணும். பனி அதிகம் பெய்யுற நாடுகள்ல வாழுற மக்கள் ஸ்வட்டர் போட்டிருப்பாங்க! நீ புதுசா அந்த நாட்டுக்குள்ள போறப்ப குளிரு வாட்டும். நீயும் மொதல்ல ஸ்வட்டர் போட்டுக்கணும். முடியாது.. என்னோட ஒடம்பு இதை தாங்கும்னு பிடிவாதம் புடிச்சா இப்பிடித்தான் ஆயிடும். அப்புறம் உன் மார்பகங்கள் மேல நீ காதலாய் இருந்திருக்கே! அதுங்களை கசக்க எதிராளிங்க வந்துட்டாங்கன்னு நீயா பண்ணிக்கிட்ட கற்பனை. நாற்பது நாற்பத்தஞ்சு வயசுக்கும் மேல உன்னைப்போல எல்லாரும் மார்புகள் மேல இப்பிடி அதீத காதலை வச்சு நான் பார்த்ததேயில்ல. அதுக்காக வாழ்த்துக்கள்! போயி முகநூல்ல உன் முழு போட்டோவையும் அப்டேட் பண்ணு! அருமைன்னு சொல்லுவாங்க! நன்றின்னு சொல்லிட்டு போயிட்டே இரு! யாரும் தேடிவந்து உன் மார்பகங்களைக் கசக்கப்போறதேயில்ல! அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலையே பெருசு! மெடிக்கல்ல போய் மாத்திரைங்களை வாங்கிட்டு போங்க! கர்த்தர் யாரையும் கைவிடுறதில்லே!” என்று எழுதியச் சீட்டை கிழித்து போர்ஹேவிடம் டாக்டர் கொடுத்தார்.

நாங்கள் வெளிவந்து மருந்துக்கடையில் மருந்து வாங்குகையில்தான் கவனித்தேன் மேரி அங்கில்லை! இந்த ஏலியன் கருமங்கள் இரண்டும் மம்மானியாய் கசக்கிக்கொண்டே இருந்தன என் மார்பகங்களை!

000