ராக்கோ சிஃப்ரெடி (Rocco Siffredi) என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த நீலப்பட நாயகன். 1984 முதல் இப்போதைய 2024 வரை ஆபாசப் பட உலகில் நாயகனாகவும், இயக்குநராகவும் வலம் வருகிறார். இவரை எல்லோரும் “Italian Stallion” என்றும் “Biggest dick in the world” என்றும் பாராட்டுவது வழக்கம். ஒரு நேர்காணலின்போது எல்லோர் முன்னிலையிலும் அவருடைய ஆண்குறியை வெளிப்படையாகக் காட்டுகிறார். அதன் நீளம் 26cm…! ஒரு அடிக்கு நான்கு சென்டிமீட்டர் குறைவு!.  அதனாலோ என்னவோ! நீலப்பட உலகின் தன்னிகரற்ற நாயகனாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சி வருகிறார். ஆபாசப் படத்தில் வன்மைப் புணர்வு (Rough Sex) என்பது இவரது தனித்துவம். ”ராக்கோவின் வன்மைப் புணர்ச்சியைத் தாங்கமுடியவில்லை” என்று ஆபாசப் பட நாயகிகளே புகார் அளித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

ராக்கோ இதுவரை எத்தனை பெண்களைக் கலவி கொண்டார் என்று கணக்கிட்டுச் சொல்வது கடினம். அவரே ஒரு பேட்டியில் சொன்னதன்படி பார்த்தால், இதுவரை 1700 ஆபாசப் படங்களில் நடித்திருக்கிறார்.  ஒவ்வொரு படத்திலும் மூன்று அல்லது நான்கு பெண்களோடு புணர்ச்சி வைத்துக்கொண்டுள்ளார். கணக்குப்போட்டுப் பார்த்தால், 5000 பேருக்கு மேல் தாண்டுகிறது! இவர்களில், மஞ்சள் பத்திரிகைப் படங்களுக்காக உறவுகொண்ட பெண்கள் கணக்கில் வரமாட்டார்கள். அவர் ஆபாசப் படங்களில் நடித்ததைவிட மஞ்சள் பத்திரிகைகளின் Photo shoot-க்காக உறவுகொண்டது மிக அதிகம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 10000 பெண்களுக்கு மேல்…! இதுகூட உத்தேசமான கணக்குத்தான்! இதிலும்கூட, அவர் தீவிரமாகக் காதல்கொண்ட பெண்கள் கணக்கில் வரமாட்டார்கள். அவர்களின் கணக்குத் தனி…! இவரைப் பற்றி சமீபத்தில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் Supersex.

2004-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ராக்கோவை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தும் காட்சியிலிருந்து வெப் சீரிஸ் தொடங்குகிறது. “ராக்கோ சிஃப்ரெடி ஆபாசப் படங்களுக்கு (Porn) ஒரு புதிய நிஜத்தைக் கொண்டுவந்தவர்; நீலப்படங்களுக்காகவே தன் வாழ்வைத் தந்தவர். ராக்கோவால் நம் வீடுகளுக்குள் எளிதாகப் புகுந்து நம் காமத்தைக் கிளர்ந்தெழச் செய்யமுடியும். ஒரே நேரத்தில் மன சஞ்சலத்தையும், அதற்கான தீர்வையும் அவரால் மட்டுமே கொடுக்கமுடியும்!” என்று ராக்கோவை அறிமுகப்படுத்திவிட்டு, “ராக்கோ, உங்கள் வாழ்க்கைக்கும் ஆபாசத்திற்கும் இடையே இருக்கும் சுவர் உண்மையிலேயே உடைந்துவிட்டதா?” என்று ஒரு பெண் கேட்கிறாள்.

இந்தக் கேள்விக்கு ராக்கோ என்ன பதில் சொல்லப் போகிறான் என எல்லோரும் ஆவலாகக் காத்திருக்கும்போது ராக்கோ சொல்கிறான், “My porn days are over now… I’m retiring…!” இவ்வளவு அற்புதமான வாழ்க்கையை விட்டு இந்த மகாராஜா ஏன் துறவுகொள்கிறான்? அவனுடைய மனக்கொந்தளிப்புகள்தான் என்ன?

கதை 1974-க்கு செல்கிறது. அப்போது ராக்கோ டானோவுக்குப் பத்து வயது. இத்தாலியில் உள்ள ஆர்டோனா (Ortona) என்ற அழகான கடற்கரை நகரத்தில் அவர்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறது. மூன்று அண்ணன்கள், அவர்களில் ஒருவனான கிளாடியாவை நாடோடி ஜிப்ஸி இளைஞர்கள் கடுமையாகத் தாக்கி விடுகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்ட அவன், நடைப்பிணமாகச் சில வருடங்கள் வாழ்ந்துவிட்டு இறந்துபோகிறான். அவனது இறப்பு ராக்கோவின் மனத்தை வெகுவாகப் பாதிக்கிறது. அம்மா கார்மெல்லாவை ராக்கோ உயிரைவிட மேலாக நேசிக்கிறான். இளமையில் ராக்கோவுக்கு அவன் அப்பாமேல் வெறுப்புதான் அதிகம்.

இவர்களைத் தவிர டொம்மாசோ (Tommaso) என்ற அரை அண்ணனும் (half-brother) ராக்கோவுக்கு உண்டு. டொம்மாசோவை ராக்கோ தன்னுடைய mentor என்கிறான்.  டொம்மாசோவின் காதலி லூசியா. ரோக்கோவை மயக்கிய முதல் அழகி. பத்து வயதிலேயே லூசியாவின்மேல் மோகித்து நிற்கிறான். ஆனால், ராக்கோவை ஒரு கிறித்தவ சாமியாராக்க வேண்டும் என்பது அவன் அம்மாவின் ஆசை. அதனால், “லூசியா நடத்தை கெட்டவள்” என மகனிடம் எச்சரித்து வைக்கிறாள்.

“நடத்தைக் கெட்டவள் (whore) என்றால் என்ன?” என்று அம்மாவிடம் கேட்கிறான் ராக்கோ. “அவள் தன்னந்தனியாக இரவில் உலாவுகிறாள்… நடத்தைக் கெட்டவள்தான் இப்படி இருப்பாள்” என்கிறாள் அம்மா. “நானும் இரவில் தனியாகப் போயிருக்கிறேனே…?” என்று கேட்கிறான் ராக்கோ. “நீ ஆண்…! இரவுகள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது!” என்கிறாள் அம்மா.

குடும்பம், வறுமை, அம்மா, லூசியா, டொம்மாசோ, கிறித்தவம், காமம் என்ற அல்லாட்டத்திற்கு நடுவில் அவனிடம் வந்து விழுகிறது ஒரு பத்திரிகை. அதன்பெயர்தான் Supersex. அது ஒரு Pornography Novel பத்திரிகை. ஆண் – பெண் நிர்வாண உடல்களையும், உடலுறவு காட்சிகளையும் பார்த்த பத்து வயது ராக்கோவுக்கு தான் செல்லவேண்டிய பாதை என்று மெல்லியதாகத் தெரிகிறது.

டொம்மாசோ ராக்கோவின் mentor போலாகிறான். ”ஒரு கத்தியைவிட வலிமையானது எது? துப்பாக்கியா? இல்லை! இந்த உலகத்தில் ஆண்களும் பெண்களும் தங்கள் தொடைகளுக்கு நடுவே மறைத்து வைத்துள்ளார்களே அந்த வெடிகுண்டுதான் இந்த உலகத்தின் வலிமையான ஆயுதம்! அதை எவன் கட்டுப்பாட்டில் வைக்கிறானோ அவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறான். இந்த உலகத்தில் இரண்டு விசயங்களை நீ செய்ய வேண்டும்; மிக அழகான பெண்களை எல்லாம் புணர்ந்துவிட வேண்டும். ஏழையாக இருப்பதை நிறுத்த வேண்டும்” என்பதுதான் அவன் ராக்கோவுக்குச் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடம்.

1984-இல் பாரிஸ் நகரத்திற்குச் செல்கிறான். அங்கு டொம்மாசோ லூசியாவோடு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.  அவர்கள் உறவு விசித்திரமாக இருக்கிறது. லூசியா இரவில் பிக்காலே (Pigalle) என்னும் இடத்தில் பாலியல் தொழில் செய்கிறாள். பகலில் டொம்மாசோவோடு அன்போடு வாழ்கிறாள். ஆட்டோனோ நகரத்தில் அவள் மிதிவண்டியில் செல்லும் அழகில் உருகி நின்றவன் ராக்கோ. இப்போது வீதியில் நின்று பாலியல் தொழில் செய்வதை அவனால் பொறுக்கமுடியவில்லை. லூசியாவை அந்தத் தொழில் செய்வதை நிறுத்தச் சொல்கிறான். அவள் நிறுத்த மறுக்கிறாள்.

அது ஒரு கையாலாகாத்தனம். கண்முன் இருக்கும் வறுமையை நொறுக்க முடியாத கையாலாகாத்தனம். ஓர் அற்புத ஆற்றல் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அப்போதுதான் பாரிஸின் sex club அவனுக்கு அறிமுகமாகிறது. அந்தக் கிளப்பில்தான் உடலுறவில் அவனுக்கு இருக்கும் ஆற்றலைக் கண்டுபிடிக்கிறான். “என்னுடைய சக்தி இதயங்களை நொறுக்கித் தள்ளும் ஓர் உலகத்திற்குள் அழைத்துச் சென்றது; மனம் மயங்கும் அனுபவங்களும், தீராத ஆசைகளும் நிறைந்திருக்கும் உலகத்திற்கு அழைத்துச் சென்றது. பாரிஸ் எனக்காகவே உருவாக்கப்பட்ட நகரம்; இதுதான் என்னுடைய ராஜ்யம்.  இந்த இடத்தில்தான் என் ஆற்றல் விரிவடைந்துகொண்டே போகிறது. இந்த இடத்தில்தான் என் சிறு வயது கனவுகள் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. supersex-இன் பார்வையில் ராக்கோ சிஃப்ரெடி பிறந்ததும் இந்த இடத்தில்தான்!” என இதைப் பற்றி ராக்கோ கூறுகிறான்.

ஆம், supersex பத்திரிகையின் பிரபல நீலப்பட நடிகனும், இயக்குநருமான Gabriel Pontello ராக்கோவை அந்தக் கிளப்பில்தான் சந்திக்கிறார்.  அவர் ராக்கோவை ஆபாசப் பட தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்துகிறார். என்னதான் பாலியல் கிளப்பில் ஆட்டம் போட்டாலும், நீலப்படத் தயாரிப்பு உலகம் ராக்கோவையும் மிரளச் செய்கிறது. கூச்சம் என்பது எல்லாத் தொழிலுக்கும் உள்ளதுதானே!  எல்லார் முன்னிலையில் ஆண்மையை முறுக்கிக் காண்பித்து, கேமரா முன்னால் உடலுறவு செய்வது அவ்வளவு எளிதானதா என்ன…?

படப்பிடிப்புத்தளத்தில் தயங்கித் தயங்கி நிற்கிறான். அப்போது ராக்கோவிடம் ஒருவன் வந்து சொல்கிறான், “தயக்கம் வேண்டாம்! இங்கு இருக்கும் எந்தப் பெண்ணிடம் வேண்டுமானாலும் பேசலாம்! உன்னைத் தயார்படுத்துவதற்கு அவர்கள் உதவியை நாடலாம்…!”  அடுத்த விநாடியே ஓர் பெண்ணை வாய்ப்புணர்ச்சி செய்ய அழைக்கிறான் ராக்கோ. இதுபோன்ற உதவியை மனைவியிடம்கூட கேட்கமுடியாது. ஆனால், அந்தப் பெண், எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக உதவி செய்கிறாள்! அதன் பக்கவிளைவு உடனடியாகத் தெரிகிறது. நீலப் படத்தின் காட்சியை எடுக்கத் தொடங்கிய சில விநாடிகளில் தன் சக்தியை வழியவிட்டு நிற்கிறான் ராக்கோ! மானம் பறிபோகிறது!

அப்போதுதான் கேப்ரியேல் நீலப்பட நாயகனுக்குத் தேவையான அதி உன்னதமான புத்திமதியைக் சொல்லிக்கொடுக்கிறார். “ராக்கோ…! நீ உன் தொடைகளுக்கு நடுவே இருக்கும் வெறிநாயை அடக்கியாளக் கற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பார்… ‘ஒரு மணி நேரத்திற்கு என் இந்திரியத்தை வெளியேற்றாதே’ என்று சொல். ஒரு மணி நேரத்திற்கு அது வெளியே வராது. ஐந்து விநாடிகளில் வெளியேற்று என்று சொல்… நான் உனக்குப் பந்தயம் கட்டுகிறேன்…! ஐந்து விநாடிகளில் வந்துவிடும்!”

நீலப்படத்தில் நடிப்பது அவ்வளவு எளிதானதில்லை. ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச்சில் ராகுல் ட்ராவிட் நின்று ஆடும் பொறுமையும், ஒரு ரிங்கில் ஏறி நின்ற மூன்று விநாடிகளில் எதிரியை நாக் அவுட் செய்யும் மைக் டைசனின் வேகமும் ஆபாசப் படத்திற்குத் தேவைப்படுகிறது. ஆண்குறியின் நீளம் நீலப்படத்திற்கு ஒரு பொருட்டே இல்லை.  மற்ற விளையாட்டில் எதிரியைத்தான் வீழ்த்துகிறார்கள். ஆபாசப் பட நாயகன் தன்னைத் தானே வெற்றிகொள்ள வேண்டும். ராக்கோ இதனை superpower என்கிறான்.

“என்னுடைய பேராற்றலை (superpower) நான் உடனடியாகக் கண்டறியவில்லை. எந்த ஒரு பேராற்றலையும் நீங்கள் கண்டடைவதற்குச் சரியான தருணம் வரவேண்டும். அந்த தருணத்திற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், அந்த சரியான தருணம் எது என்பது உங்களுக்குத் தெரியாது!” என்கிறான் ராக்கோ.

ஆண்மை என்பது யாதெனில் எதற்கும் அடங்காத உடலைச் சொன்னதைச் செய்ய வைப்பதுதான். அடுத்த படப்பிடிப்பில் ராக்கோ வன்மைப் புணர்வை ரசிக்கும்படி நிகழ்த்திக் காட்டுகிறான். நீலப்பட உலகில் தன்னிகரற்ற நாயகன் உருவாகிறான் என்பதை கேப்ரியேல் கண்டுபிடித்துவிடுகிறார். படக்குழுவினர் ராக்கோவுக்கு விருந்து கொடுக்கிறார்கள். அந்த விருந்தில் ராக்கோவுக்கு ஒரு போட்டி வைக்கிறார்கள். பத்தே விநாடிகளில்…! ஆம்! வெறும் பத்தே விநாடிகளில் சுய இன்பத்தின்மூலம் இந்திரியத்தை வெளியேற்ற வேண்டும்? அப்போதுதான் ஒரு நீலப்படத்தில் நடித்து முடித்தவனிடம் எப்படி ஒரு போட்டி பாருங்கள்…!

ராக்கோ போட்டிக்குத் தயாராகிறான். கேப்ரியேல், நீலப் பட நடிகை மோனா, தயாரிப்பாளர் என எல்லோர் முன்னிலையில் ஆடையைக் கழற்றுகிறான். ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் தெறித்து ஓடுகிறார்கள். பத்தே விநாடிகளில் போட்டியில் வென்று காட்டுகிறான். இந்தக் காட்சியைப் படமாக்கிய விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஒரு காட்சிக்காகவே நீங்கள் supersex வெப் சீரிஸைப் பார்த்தாக வேண்டும்!

“நம்முடைய ஒவ்வோர் ஆற்றலும் புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்றுதான். நீ அந்த ஆற்றலின் எல்லையைத் தெரிந்துகொள்ளும்போது; அந்த ஆற்றலை வீழ்த்தும் தைரியம் உன்னிடத்தில் இருக்கும்போது; அந்த ஆற்றலை அடிமைப்படுத்தும்போது… அந்த ஆற்றல் உன்னைப் போலவே ஒளிவீசும்; உன்னிலிருந்து ஒளிவீசும்…!” என்கிறான் ராக்கோ.

அதன்பிறகு ராக்கோவும் கேப்ரியேலும் இணைந்து பணியாற்றத் தொடங்குகிறார்கள். தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் ஆசையும் எல்லையற்று விரிந்துகொண்டிருகிறது. “ராக்கோ! இவர்களுக்கு செக்ஸைவிட இன்னும் அதிகமாகத் தரவேண்டும். இவர்களுக்கு அதியற்புதமான ஆசைகளைப் படையலாக்க வேண்டும்! சுதந்திரமான காம இச்சைகளைத் தரவேண்டும்…! அதைத்தான் அவர்களுக்கு விற்கப் போகிறோம். நாம் விற்பனை செய்யும் பொருள் அதீத ஆற்றல் கொண்டது. தேவாலயங்களும், அரசாங்கமும் நம்மை எதிர்த்து நிற்கும்! ஆனால் இது பூரணமான கனவு ராக்கோ! ஒரு திருப்திகரமான வாழ்வு! உறவின் உச்சகட்டம்! ஒரு புரட்சி! எதிர்காலத்தில் நீ நிச்சயம் நினைக்கப்படுவாய்!” என்கிறார் கேப்ரியேல்.

ராக்கோ ஆண்டோனியா டானோ என்பதுதான் உண்மையான பெயர். ஆபாசப் பட உலகிற்கு வந்தபிறகு தன் பெயரை ராக்கோ சிஃப்ரெடி என்று மாற்றிக்கொள்கிறான்.  ஆலன் திலோன் என்பவர் நடித்து 1970-இல் வெளிவந்த Borsalino என்ற படத்தில் கதாநாயகனின் பெயர் சிஃப்ரெடி. 35mm கேமராவாக இருந்தாலும் சரி! low-end American gonzo கேமராவாக இருந்தாலும் சரி! நவீன ரக டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும் சரி! தனித்துவமான ஆபாசப் படங்களை வழங்குகிறான் ராக்கோ. கூடவே நின்றுபோன Supersex பத்திரிகை ராக்கோவால் மீண்டும் உயிர் பெறுகிறது.

“நான் எனக்காக ஒரு விதியை சமைத்துக்கொண்டேன். ராக்கோ டானோ இனிமேல் இந்த உலகத்தில் இருக்கமாட்டான். இனிமேல் நான் எங்கேயும் எப்போதும் ராக்கோ சிஃப்ரெடிதான். நான் ஆபாசப் படங்களுக்காக (Porn) என்னை அர்ப்பணித்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு புது யுகம் பிறக்கிறது. என் மூலமாக நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். எந்த விதிகளும் இல்லாத வாழ்க்கைக்குப் பெயர்தான் Porn” என்கிறான் ராக்கோ.

அவன் எந்த அளவிற்கு ராக்கோ சிஃப்ரெடியாக வளர்கிறானோ அந்த அளவிற்கு அதற்கான விலையைக் கொடுக்கிறான். இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து தீரவேண்டும் என்றால் அதற்கான முழுவிலையையும் கொடுத்துத்தான் தீரவேண்டும்.  யார் தைரியமான முடிவுகளை எடுக்கிறார்களோ; எடுத்த முடிவுகளின்மேல் ஆளுமை செலுத்துகிறார்களோ அவர்களால் மட்டும்தான் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கமுடியும். ராக்கோ தொடங்கிய வாழ்க்கையில் வெற்றியும் பெறுகிறான். ஆபாச படவுலகின் ஆஸ்கார் விருது எனக் கருதப்படும், Hot d’Or Award –ஐ பெறுகிறான்.

ஆனால் இந்த வெப்சீரிஸின் கதை ஒருவன் வெற்றிகரமாக முன்னேறி உயர்ந்ததொரு விருது பெறுவதைக் கூறுவதில்லை. நீலப்பட நாயகன் ஒருவன் பத்தாயிரம் பெண்ணுடலைக் கடந்தபின்பும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாமல் மனக்கொந்தளிப்பு அடைந்த தருணங்களையும்; பெண்களின் துணையோடு மனக்கொந்தளிப்புக்கு மருந்திட்ட தருணங்களையும்தான் Supersex பேசுகிறது. ஒரு கட்டத்தில் உடலுறவு மறைந்து உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. இதுதான் இந்த சீரிஸின் வெற்றி. எல்லாப் பெண்களையும் பற்றிக் கூறுவது கடினம். சிலர் மட்டும்… முதலில் அம்மா கார்மெல்லா.

ராக்கோ நீலப்பட நாயகனாக வளரும்போது, Supersex பத்திரிகையில் அவன் உடலுறவு கொள்ளும் படங்கள் பிரபலமாகின்றன. அவனை எல்லோரும் அவமானமாகப் பார்க்கிறார்கள். இதனால் உயிராக நேசிக்கும் அம்மாவைச் சந்திக்கும் தைரியத்தை இழக்கிறான். “இனி என் ஊருக்குத் திரும்புவது கடினம். நாம் யார் என்று தெரிந்துகொள்வதைவிட, நாம் எங்கு போக வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிக முக்கியமானது” என்கிறான் ராக்கோ.

ஊரே அவமானமாகப் பார்த்தாலும், அவன் அம்மாவுக்கு Supersex பத்திரிகையின் வழியாக மட்டுமே மகனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சாகப் போகும் கடைசி தருணத்தில் அவள் அதிலொரு புத்தகத்தைப் பத்திரமாக வைத்திருப்பதைப் பார்க்கிறான். அப்போது மகனிடம் அம்மா கேட்கிறாள், “ராக்கோ, நீ உண்மையிலேயே இந்தப் பெண்களை எல்லாம் புணர்ந்துவிட்டாயா?” “இல்லம்மா…!” எனச் சொல்லிச் சிரிக்கிறான் ராக்கோ.

சிறுவயதிலிருந்தே அம்மாவின் வலியை உணர்ந்தவன் ராக்கோ. அம்மாவின் வழியாகப் பெண்களின் வலியையும் உணர்கிறான். அதனால் தன்னை ஒரு பெண்ணியவாதி என்றுகூட கூறுவதுண்டு! அம்மாவின் வலியைத் தானும் உணரவேண்டும் என்று நினைத்து, அம்மா இறந்தபிறகு ஆண்குறியில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறான். எப்போதெல்லாம் பெண்ணைப் புணர்கிறானோ அப்போதெல்லாம் கடுமையான வலியை ராக்கோவும் அனுபவிக்கிறான்.

அடுத்தது லூசியா… பத்து வயது ராக்கோவின் கனவுக் கன்னியாக இருந்தவள் லூசியா. அண்ணன் டொம்மாசோ அவளைத் திருமணம் செய்துகொண்டு பாரிஸ் போய்விடுகிறான். பாரிஸில் அவன் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறான். அவள் பிக்காலே என்ற இடத்தில் பாலியல் தொழில் செய்கிறாள். ஆனால் இருவருக்குமான காதல் சிறிதும் குறையாமல் இருக்கிறது. ஒரு நாள் பிக்காலேவில் லூசியாவைப் பார்த்துவிடுகிறான் ராக்கோ. அவனுக்கு அது மனவேதனையைத் தருகிறது. அவளை அந்த தொழிலைவிட்டு வந்துவிடும்படி சொல்கிறான். அவள் வாழ்வியல் தேவை கருதி மறுக்கிறாள்.

ராக்கோவும் லூசியாவும் நினைத்திருந்தால் உறவு வைத்துக்கொள்ள எந்த தடையும் இருந்திருக்காது. ஆனால் இருவருக்குமே அந்த எண்ணம் தோன்றவில்லை. இந்தச் சூழலில் லூசியா கர்ப்பமாகிறாள். அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ராக்கோதான் காரணம் என டொம்மாசோ நினைக்கிறான். மனைவி விபச்சாரியாக இருப்பதைகூடப் பொறுத்துக்கொண்ட அவன், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ராக்கோதான் காரணம் என நினைத்து அதீதமாக மனவேதனை அடைகிறான். அந்த எண்ணம் அவனை நாளுக்கு நாள் மிருகமாக மாற்றுகிறது. ஒரு நாள் குழந்தையை மாடியிலிருந்து தூக்கிப் போட்டுவிடவும் நினைக்கிறான்.

ஒரு கட்டத்தில் லூசியாவும் டொம்மாசோவும் பிரிந்துவிடுகிறார்கள். அவள் வேறொருவரைத் திருமணம் முடித்துச் சென்றுவிடுகிறாள். லூசியாவை அண்ணனோடு திரும்பச் சேர்த்துவைக்க முயற்சி செய்கிறான் ராக்கோ. “உங்களைப் போன்ற ஆண்கள் என்னிடமிருந்த காதலை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிட்டீர்கள்” எனச் சொல்லி மீண்டும் டொம்மாசோவோடு வாழ மறுத்துவிடுகிறாள். “ராக்கோ சிஃப்ரெடி உன் காதலிகளில் உன்னோடு உறவுகொள்ளாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஏன்?” என்று கேட்கிறாள் லூசியா. “ஏனென்றால் உன்னைப் பொறுத்தவரை நான் ராக்கோ டானோதான்” நீலப்பட நாயகனிடம் உறவுகொள்ளாமலேயே அவன் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவள் லூசியா மட்டும்தான்.

எனக்கு இந்த வெப் சீரிஸில் மிகவும் பிடித்த பெண் பாத்திரம் மோனா. நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத அழகியை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ராக்கோவின் நீளமான ஆண்மையை எல்லோரும் புகழ்ந்து பேசும்போது “I’m not looking for hard dicks in my holes, I’m looking for the revolutionary strength of Eras” என்கிறாள். இதில் Eras என்பது காதல் தழும்பும் ஆற்றல்மிகுந்த உடலுறவைக் குறிக்கிறது. ராக்கோவுக்குக் காதலுக்கும் உடலுறவுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து மோனாதான் விளக்குகிறாள்.

மோனா வரும் காட்சிகள் எல்லாமே அழகாக இருக்கும். அவளது எல்லாப் பேச்சுகளும் தத்துவமாக இருக்கும். “நாளைக்கே சாகப் போவதுபோல் வாழ்! ஒருபோதும் சாகப் போவதில்லை என்பதுபோல் சிந்தனை செய்! நாமெல்லாம் இந்த உலகத்தின் சுமைதாங்கிக் கற்கள். கடவுள் எப்போதும் சில விலங்குகளின் தோற்றத்தில்தான் இருப்பார்” என்ற மோனாவின் சொற்கள் அர்த்தம் பொதிந்தவை. எங்கோ யாரோ நிர்வாணமாக உடலுறவு கொண்ட படங்களைப் பார்த்துத்தான் நாம் எல்லோரும் பாலியல் இச்சைகளை ஆற்றுப்படுத்திக் கொள்கிறோம். நீலப்பட நடிகர்கள் தங்களைச் சுமைதாங்கிக் கற்கள் எனச் சொல்வதில் எவ்வளவு அர்த்தம் நிறைந்திருக்கிறது  பாருங்கள்!

Supersex வெப் சீரிஸின் வசனங்களுக்காக மட்டுமே தனியாக ஒரு முறை பார்க்க வேண்டிவரும்.

நாமெல்லாம் நம்மைக்கூட விட்டுவைக்காதவர்கள்; நம் சதைகளின் துணைகொண்டு இந்த உலகத்தின் வலிகளோடு சண்டை செய்பவர்கள். நம்மிடம் இருக்கும் அந்த சதை மட்டும்தான் நிரந்தரமானது!

ஆடைகள் எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மைவிட யாராலும் அறிந்துகொள்ள முடியாது!

உண்மை என்னவென்றால், நீங்கள் எவ்வளவு அருமையாகப் புணரக் கற்றுக்கொண்டாலும், வாழ்க்கை எப்போதும் உங்களைவிட சிறப்பாகப் புணர்ந்துவிடும்!

வலி என்ற ஒன்றுமட்டும்தான் உங்களைக் காப்பாற்றுகிறது. நீங்கள் அந்த வலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; வலியை உணருங்கள்; வலியை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள்!

வாழ்வில் உச்சகட்டமான வலிமிகுந்த காலம் வரும். அப்போது உங்களுக்கு வேறு வழியே இருக்காது. ஒன்று, அந்த வலியிடம் நீங்கள் அடிமையாக வேண்டும் அல்லது வலியைத் தாங்கிக்கொண்டு மீண்டும் பிறக்க வேண்டும். ஒருவேளை அந்த சாம்பலில் இருந்து நீங்கள் மீண்டும் பிறந்துவிட்டால், உங்கள் உடலுக்குப் புத்துயிர்ப்பு கிடைத்துவிடும்.

இப்படிப் படம் முழுவதும் வரும் வசனங்கள் நம்மைக் கிறங்கடிக்கும். நீலப்பட நாயகன் ராக்கோ சிஃப்ரெடி இப்போதும் தீவிரமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். அவரைப் பற்றி ஏற்கனவே ஒரு டாக்குமெண்டரி வந்திருந்தாலும் supersex அவருடைய வாழ்க்கையை 98% சரியாகச் சொல்கிறது என்கிறார். இந்த வெப் சீரிஸ் வந்த பிறகு இன்னும் அதிகமான நேர்காணல் செய்யப்படுகிறார். அதில் ஒரு பேட்டியில்…

கேள்வி: “நீங்கள் வன்மைப் புணர்வு (Rough sex) செய்வது குறித்துப் பெண்ணியவாதிகள் நிறைய குற்றம் சாட்டுகிறார்களே?

ராக்கோ சிஃப்ரெடி: “இங்க பாருங்க… ஒரு நாள் காலையில் எழுந்து வந்து இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் எடுக்கணும்’னு நினைத்து எதையும் செய்யறதில்லை. இது ஒரு கூட்டு உழைப்பு. என்னுடைய சக நடிகர்களோடு ஆலோசிக்காமல் எந்தக் காட்சியையும் உருவாக்குவதில்லை. ஆபாசப் படங்களில் வன்மைப் புணர்ச்சி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. நான் வன்மைப் புணர்ச்சி செய்வதைப் பெண்களிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறேன்!”

இதுபற்றி ஒரு ஸ்பானிய நீலப்பட நடிகையிடம் மேல்விளக்கம் கேட்கும்போது, “ஆம் எனக்குத் தெரிந்து ஏராளமான பெண்கள் வன்மைப் புணர்ச்சியை விரும்புகிறார்கள். எனக்கும்கூட அது மிகவும் பிடிக்கும்!” என்று கூறுகிறார்.

கேள்வி: ஆபாசப்பட உலகில் பெண்களின் செயல்பாடுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

ராக்கோ சிஃப்ரெடி: “மிக நீண்டகாலமாக என்னுடைய உலகத்தில் ஆண்களின் ராஜ்ஜியம்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் பெண் பார்வையாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். 50-50 வரவில்லை என்றாலும் வளர்ந்து வருகிறார்கள். இப்போதெல்லாம் பெண்களின் பார்வையில் காட்சிகளை அணுகத் தொடங்கியுள்ளனர்.”

கேள்வி: ஒரு வேளை உங்கள் வாழ்கை வறுமையாக இல்லாவிட்டால்; ஒருவேளை உங்கள் அண்ணன் ஜிப்ஸிகள் தாக்குதலில் இறக்காவிட்டால்; ஒரு வேளை உங்கள் அம்மா உடல்நலத்தோடு இருந்திருந்தால் நீங்கள் ஆபாச படங்களில் நடித்திருக்க மாட்டீர்களா?

ராக்கோ சிஃப்ரெடி: I would have done it even for free, because I was born to do porn. There is deep passion in me.

என்னா தலைவா எந்த ball-ஐப் போட்டாலும் உங்க bat-லர்ந்து சிக்ஸரா பறக்குது. சரி, மீண்டும் தொடக்கத்திற்கு வருவோம். “ராக்கோ, உங்கள் வாழ்க்கைக்கும் ஆபாசத்திற்கும் இடையே இருக்கும் சுவர் உண்மையிலேயே உடைந்துவிட்டதா?” என்று ஒருத்தி தொடக்கத்தில் கேட்கிறாள் இல்லையா? அதற்கு ராக்கோ சொல்லும் பதில் என்னதெரியுமா?

ராக்கோ நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கும்படி பொது இடத்தில் அவளைப் புணர்கிறான். புணரும்போது, “எல்லோரும் உன்னைப் பார்க்கிறார்கள். நீ யார் என்று இப்போது தெரிந்துகொள்! நீ என்பது ஒரு சதை…! வாழ்க்கைக்கும் ஆபாசத்திற்குமிடையில் இதைவிடப் பெரியது எதுவுமில்லை” என்கிறான். இதன் அர்த்தம்தான் என்ன என்று கேட்கிறீர்களா? அதனைச் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் இந்த வெப் சீரிஸைத்தான் பார்க்க வேண்டும்!

drsankardass@gmail.com