17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ஆம் தேதி தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 31ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், மக்களவையைக் கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

மக்களவை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். மக்களவை சபாநாயகர் ஜூன் 10ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.