க்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் 98 சதவிகித புதிய வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 10ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தேர்தல் அறிக்கை, வாக்குறுதி அளிப்பது என வாக்காளர்களை கவர தீவிரம் காட்டிவருகின்றனர். இதில், தேர்தலில் புதிதாக வாக்களிக்கவுள்ள புதிய வாக்களார்களை கவரவும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளும் முயற்ச்சி செய்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போடவேண்டும் எனவும், வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து சில ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

8.98 லட்சம் புதிய வாக்காளர்கள்

நாடு முழுவதும் 8 கோடிக்கும் மேல் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், தமிழகத்தில் 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 8.98 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ.

தேர்தலில் யாருக்கு வெற்றி? என்பதை தீர்மானிக்கும் புதிய வாக்காளர்களான இளைஞர்களிடம் வரும் மக்களவை தேர்தலில் ஓட்டுபோடும் ஆர்வம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. ட்விட்டரில் “பவர் ஆப் 18” என்ற பெயரில் இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 98 சதவிகித இளைஞர்கள் ஓட்டுப் போடுவோம் என்று கூறியுள்ளனர்.

ராகுலின் செல்வாக்கு உயர்வு

நேற்று (மார்ச் 14) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடலில் ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விகளுக்குச் சரியான அனுகுமுறையில் பதில்கள் சொன்ன வீதமும், அவருடைய எளிமையும், மாணவ, மாணவிகள் உட்ப்ட பலர் பாராட்டுக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர். மேலும், இந்தக் கலந்துரையாடலில் மாணவிகளிடம் ராகுல் சார் வேண்டாம், ராகுல் என்றே கூப்பிடுங்கள் என்று ராகுல் காந்தி கூறியதும், ஒரு மாணவி ராகுல் என்று கூப்பிட்டதும் நாடுமுழுவதும் மாணவிகள் மத்தியில் ராகுலுக்கு ஒரு செல்வாக்கை பெற்றுதந்துள்ளது.