பிரதமர் மோடி தனக்கு முந்தைய அரசுகள் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏ‌டி‌எம் களை போலப் பயன்படுத்தின என்றும் அந்த ஒப்பந்தங்களில் எந்த வித வெளிப்படைத்தன்மையும் இருக்காது என்று ரிபப்ளிக் டி‌விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

‘மிஷன் சக்தி’ பற்றி மோடி, “இந்தியா தற்போது விண்ணில் சௌக்கிதார்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் விதிமுறைகளை நீங்கள் மீறினீர்களா என்ற கேள்விக்கு மோடி,  “ASAT போன்ற சோதனைகள் நடத்தும் முன் உலகளாவிய திட்டங்கள் பல தீட்ட வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் காரணத்திற்காக எல்லாம் ஒரு அரசு செயல்படாமல் இருக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

மோடி தொலைக்காட்சியில் அறிவித்த ‘மிஷன் சக்தி’ யின் வெற்றி, தேர்தல் விதிமுறைகளை மீறியதா என்று தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானிக்கும் என்று தெரிகிறது. இது சம்பந்தமாக விசாரிக்க அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை ஆணையம் அமைத்துள்ளது.