ஹிட்லரின் புகழ்பாடும் வீடியோக்களை தடைசெய்வதாக அறிவித்துள்ளது யூடூப்.

மிஸ்டர்ஸ்.ஆல்ஸோப்ஹிஸ்டரி என்ற யூடூப் சேனலுக்குச் சொந்தமான 100 மேற்பட்ட வரலாற்று வீடியோக்களையும் இரண்டாம் உலகப்போர் சம்பந்தமான வீடியோக்களையும் தடைசெய்துள்ளது யூடூப்.

இந்த சேனலில் பணிபுரியும் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்து ஹிட்லரின் வீடியோக்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அப்லோட் செய்துவருகின்றன. இந்த வீடியோக்களைத்தான் தற்போது நீக்கியுள்ளது யூடூப்.

இதுபற்றி ஆல்ஸோப் நிறுவனம் கூறுகையில், “யூடூப் வீடியோக்கள் மக்களிடம் சுலபமாக சென்றடைகிறது. பல்வேறு முரண்பட்ட பல வீடியோக்கள் இன்னும் யூடூப் உலாவுகின்றன, ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எங்களது வீடியோக்களுக்கு தடைவித்தது ஆச்சரியமாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யூடூப் அந்த வீடியோக்கள் எதற்காக தடைசெய்தது என்பதை கூறியுள்ளது. ‘இந்த வீடியோக்கள் ஒற்றை சார்புடையதாகவும் மக்களிடையே தீவிரவாதத்தை ஊக்குவித்து நாஜிக்களின் புகழ்பாட வழிவகை செய்வதாகவும் விளங்குகிறது. மேலும் இந்த வீடியோக்கள் ஹிட்லரின் பாசிச கொள்கையை ஊக்குவித்து வருங்கால சந்ததியினர் மாற்றுப்பதையில் செல்ல சுலபமாக வழிவகுக்கிறது என்றும் கூறியுள்ளது.