தேர்தல் பிரச்சாரத்தில் ‘மோடிஜி கி சேனா’ (மோடியின் ராணுவம்) என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு அவர்மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கு மாறாக, ராணுவத்தை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும்  உயர்ந்த பதவியில் மிகுந்த மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரான யோகி ஆதித்யநாத்தின் இந்தக் கருத்து அவரது அரசியல் வாழ்வில் களங்கம் விளைவிக்கலாம் என்று கூறியுள்ளது. இனி எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்குக் காங்கிரஸ் கட்சி பிரியாணி ஊட்டிக் கொண்டிருப்பதாகவும், மோடியின் ராணுவப் படை தீவிரவாதிகளுக்குத் துப்பாக்கி குண்டுகளை ஊட்டிக் கொண்டிருக்கிறது என்றும் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.