கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மிதிராணியின் கல்வித் தகுதி குறித்து பல மாறுபட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றபோது அவரது கல்வித் தகுதி குறிப்பிடப்பட்டது. இருந்தும் கல்வித் தகுதி குறித்து போதிய ஆவணங்கள் அப்போது சமர்பிக்கப்படவில்லை.

2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்மிதி ராணி ‘1996ல் டில்லி யுனிவர்சிட்டியில் பி.ஏ முடித்துள்ளதாக கூறினார். ஆனால் இப்போது (2019) “3 வருட பி.ஏ டிகிரியைகூட முடிக்கவில்லை” என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்மிதி ராணி, “யேல் யுனிவர்சிட்டியில் தான் டிகிரி முடிந்துள்ளதாகவும்” கூறியுள்ளார். பின்பு அந்த டிகிரி பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆறு நாட்கள் அளிக்கப்படும் விரைவு பயிற்சி திட்டம் என்பது தெரியவந்தது.

இது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதங்களில் ஸ்மிதி ராணியை வறுத்தெடுத்து வருகின்றனர். “சர்டிபிகேட் கோர்ஸுக்கும், மூன்று வருட டிகிரி கோர்ஸூக்கு வித்தியாசம் தெரியாமல் மனித வள மேம்பாட்டு அமைச்சராக எப்படி இருக்க முடிகிறது, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே இது சாத்தியம்” என்று செய்திகள் பகிரப்படுகின்றனர்.