2004ஆம் ஆண்டு முதல் முதலில் இந்தியாவில் செயல்பட தொடங்கிய அமேசான் ஹைதராபாத்தில் இருந்துதான் அதனை ஆரம்பித்தது. இந்தியாவில்தான் அதிக அளவு ஊழியர்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் 62 ஆயிரம் பேர் முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

15 ஆண்டுகளில் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது அமேசான்.அமேசான் நிறுவனம் தனது ஹைதராபாத் அலுலவகத்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.சர்வேதச அளவில் ஆன்லைன் வர்த்தகத்த முன்னிலையில் உள்ளது அமேசான். இந்நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஹைதராபாத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

9.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் கட்டிடம் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் முதல் சொந்தக் கட்டிடம். அத்துடன் உலக அளவில் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய கட்டிடம் ஆகும். இதில் பணியாற்றுவதற்காக சுமார் 15000 பேரை அந்நிறுவனம் வேலைக்கு சேர்க்க உள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.இப்போது அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 62 ஆயிரம் பேர் முழுநேர ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.அமேசான் இந்தியாவில்தான் அதிக அளவு ஊழியர்களை கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. துதவிர 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள்.

“கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் 13 மாநிலங்களில் அமேசான் அலுலவகங்கள், டெலிவரி நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்” என அமேசான் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் அமித் அகர்வால் தெரிவிக்கிறார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதைவிட மூன்று மடங்கு ஊழியர்கள் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.