ஜோசியம், டைம் டிராவல், முன்கூட்டியே கணித்தல் உள்ளிட்ட விஷயங்களை உலக மக்கள் முழுமையாக நம்பியதுமில்லை, நம்பாமல் இருந்ததுமில்லை. ஏதோ வகையில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவத்தை நிகழ்காலத்தில் அதாவது முன்கூட்டியே கண்டுபிடிப்பது சில அசாத்திய மனிதர்களால் முடிகிறது. இந்த வகையில் வரலாற்றில் சில மனிதர்களை நாம் கண்டுள்ளோம்.
தற்போது உலகம் முழுவதும் பரவி தீவிர பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து 2013ஆம் ஆண்டிலேயே ஒருவர் டிவீட் போட்டுள்ளதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இவர் பதிவிட்ட ட்விட் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகின் மூலைமுடுக்குகளெல்லாம் பரவியவரும் கொரோனாவினால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு, உலகின் மிகப் பெரிய கொடிய நோயாக கொரோனாவை வகைப்படுத்தி அறிவித்துள்ளது. கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் 2013ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி மார்கோ அகோர்டஸ் என்பவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் “Corona virus…. its coming” என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரை பீதியடைய வைத்திருக்கிறது. தற்போது உலகை அச்சுறுத்தும் நோய் குறித்து எப்படி 2013ஆம் ஆண்டே அவர் கணித்திருப்பார். அல்லது இவருக்கும் சீனா பயோ வார் கும்பலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சீன ராணுவனத்தின் பங்களிப்பு இதில் ஏதேனும் இருக்கிறதா? என்றும் பலர் சர்ச்சையை கிளப்பிவருகின்றனர். மேலும் இந்த நபர் 2016ஆம் ஆண்டுடன் டிவீட் போடுவதை நிறுத்தி விட்டார். சிலருக்கு இவர் போட்ட டிவீட் நிஜம்தானா என்ற சந்தேகமும் உள்ளது. டிவிட்டரை ஹேக் பண்ணிட்டீங்களா டிவிட்டரை ஹேக் செய்து தேதியை மாத்திட்டீங்களா என்றும் சிலர் கேள்வி கேட்டுள்ளனர். இவர் ஏதேனும் ஒரு வகையில் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்தவர் இவர் பல உண்மைகளை வெளியில் சொல்லி விடுவார் என பயந்து 2016லேயே ட்விட் செய்வதை நிறுத்தியிருக்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இந்த டிவீட் எந்த வகையில் உண்மையானது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.