சென்ற ஆண்டு இதே மாதம் தமிழ்நாட்டில் எடப்பாடியின் ஆட்சி இருந்தது. கொரோனா இருந்தது. கொரோனாவினால் எங்கும் மத ஊர்வலம் நடத்தக்கூடாது என்ற அவசரச் சட்ட ஆணையும் பாஜக-மோடி அரசினால் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக பாஜகவுக்கு வேண்டப்பட்ட கட்சி. அதனால் சென்ற ஆண்டு இதே செப்டம்பர் மாதம் விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடத்தப் போகிறோம் என்று எடப்பாடியிடம் கேட்கச் சென்ற பாஜக தலைவர்கள் நடத்த முடியாது என்று நொந்து திரும்பி வந்தார்கள்.
இப்போதும் கொரோனா இருக்கிறது. சென்ற ஆண்டு மத ஊர்வலம் நடத்தக்கூடாது என்று வெளியிட்ட ஆணையும் இருக்கிறது. அதை மோடி அரசு திரும்பப் பெறவில்லை. ஆனால் இப்போது ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. ஆகவே ஆட்டுமந்தை அண்ணாமலையார் மிரட்டிப் பார்க்கிறார், சாபம் விடுகிறார். இந்த மிரட்டலையும் சாபத்தையும் போன வருஷமே உங்கள் கட்சி விட்டிருக்க வேண்டியதுதானே மிஸ்டர் அண்ணாமலை? இந்த ஆண்டு மட்டும்தான், அதுவும் தமிழ்நாட்டில் மட்டும்தான் உங்கள் விநாயகர் வந்து ஸ்டாலின் ஆட்சிக்கு தண்டனை கொடுப்பாரா?
உங்களுக்கே உண்மையில் பிள்ளையார்மீது ஒன்றும் பற்று கிடையாதென்று எல்லாருக்கும் தெரியுமே மிஸ்டர் அண்ணாமலை? 1980கள் வரை தமிழகத்தில் வீடுகளில் மட்டும்தானே விநாயகசதுர்த்தி கொண்டாடப்பட்டு வந்தது? பிறகு உங்கள் ராம. கோபாலனின் இந்து முன்னணிக் கட்சியினர் தங்கள் ஆதாயத்துக்காக இங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஊர்வலங்களைப் புகுத்தி மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதை வாடிக்கையாக்கினார்கள்.
இப்போதும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இருக்கும் தெருக்கள் வழியாகப் புகுந்து, செருப்பையும் கல்லையும் அடித்து, கலவரம் உண்டாக்கி, அதனால் உங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் கண்டபடி உளறுகிறீர்கள். உண்மையில் பிள்ளையார் இருந்தால் உங்களைத்தான் முதலில் தண்டிப்பார்.
அண்ணாமலை வேண்டுமென்றே இந்த முற்றிய இரண்டாம் அலை நோய்க் காலத்தில் ஊர்வலத்தை நடத்தி, அரசாங்கம் அதைப் போலீசினால் தடுத்தால், அதைக் கலவரமாக்க மாற்ற முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பதை உண்மை தெரிந்தோர் எல்லாரும் அறிவார்கள்.
அதனால் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
- ஒன்றிய அரசு சென்ற ஆண்டு கொண்டுவந்த இடர்க்கால அவசரச் சட்டம் இன்னும் தொடர்கிறது, அது நீக்கப்படவில்லை என்பதை திரு.ஆட்டுக்குட்டிக்கு நினைவூட்ட வேண்டும்.
- மேலும் இந்த ஆண்டும் எந்த மாநிலத்திலும் மத ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று ஒன்றிய பாஜக அரசே உத்தரவிட்டிருப்பதையும் திரு. ஆட்டுக்குட்டிக்கும், அவரது மந்தைக்கும் எடுத்துக் காட்டவேண்டும்.
- காவல்துறையுடன் கலவரம் ஏற்படலாம் என்ற நிலைமை இருப்பதால் நீதிமன்றத்திலிருந்து ஒரு தடுப்பாணை வாங்கி அதைத் திரு. ஆட்டுக்குட்டியின் மூஞ்சியில் ஒட்ட வேண்டும்.
இவற்றை எல்லாம் மீறி ஊர்வலம் நடத்தினால் “பாஜக ஆளும் ஒன்றிய அரசின் சார்பாகத்தான்” நடவடிக்கை எடுக்கிறோம் என்று கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆ(மா)ட்டு மந்தை புகுந்து எந்த நாசத்தையும் ஏற்படுத்த விடக்கூடாது.
உங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவு என்றுமே உண்டு!