2019 மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியீட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை ரூ.1,500 வழங்கப்படும்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்மாதிரியாக கொண்டு இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்.

காவிரி-கோதவரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்

வேளாண் கடன் ரத்து செய்யப்படும்.

தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய குடியரசு தலைவரிடம் வலியுறுத்தப்படும்.

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்கபடும்.

கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கபடும்.