நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடந்த தேர்தலில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எப்போதுமே உத்தரப்பிரதேசம் இந்தியாவின் அதிக மக்களவை தொகுதிகளுடன்(80) தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 45 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
கடந்த 2014-இன் மக்களவை தேர்தலில் 71 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை பாஜகவை எதிர்கொள்ள பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனாலும், இந்த இணை தற்போது 11 தொகுதிகளில்தான் முன்னிலையில் இருக்கிறது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி முதலில் பின்னடைவை சந்தித்தாலும், தற்போது முன்னிலையில் இருக்கிறார். ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார். வாரணாசி தொகுதியில் எல்லோரின் கவனமும் இருக்கின்றது. எதிர்பார்த்ததைப் போலவே அங்கு நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.
2014-இன் தேர்தல் முடிவுகளை அப்படியே மறுஉருவாக்கம் செய்துவிடலாம் என பாஜக தரப்பினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.