பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக டெல்லியில் நேற்று (மே 30) பிரதமராக மோடி பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து, 57 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதில் கேபினட்டிற்கு 25 புதிய அமைச்சர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜக தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராகப் பதவி வகித்த பிரகாஷ் ஜவடேகர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம்.
கேபினட் அமைச்சர்கள்:
1. நிர்மலா சீதாராமன் – நிதித்துறை
2. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை
3. அமித்ஷா – உள்துறை
4. ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை
5. நிதின்கட்கரி – போக்குவரத்து
6. சதானந்த கவுடா – ரசாயனம், உரம்
7. ராம் விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர் நலன்
8. நரேந்திர சிங் தோமர் – விவசாயம்
9. ரவி சங்கர் பிரசாத் – சட்டம், தகவல் தொழில்நுட்பம்
10. ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல்
11. தாவர்த் சந்த் கெலாட் – சமூக நீதி
12. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் – மனிதவள மேம்பாடு
13. அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலன்
14. ஸ்மிருதி ரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
15. டாக்டர். ஹர்ஷவர்தன் – சுகாதாரம்
16. பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனம்
17. பியூஷ் கோயல் – ரயில்வே
18. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம்
19. முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலன்
20. பிரக்லத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம்
21. மகேந்திரநாத் பாண்டே – தொழில்முனைவோர்