கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நேற்று (ஜூலை 19) மாலை தமிழகத்துக்கு விநாடிக்கு 2453கனஅடி நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகா.

சில தினங்களுக்கு முன்னர் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும் கிருஷ்ணராஜ சாகரிலிருந்து விநாடிக்கு 355 கனஅடி நீரும் திறக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரித்திருக்கிறது கர்நாடக அரசு. நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகரிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2453 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு 34,000 கனஅடி நீர் (34டி.எம்.சி) திறக்க வேண்டும். கடந்த 7ஆம் தேதி இரு மாநில பாசனத்திற்காக அணைகளிலிருந்து நீர் திறந்துவிட பொதுப் பணித்துறைக்கு அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். இதனிடையே கர்நாடக மாநில குடகு பகுதியில் தொடர் மழை நீடித்துவருவதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டவிருப்பதாலும் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.