23 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் சாமல்ட்டியில் நடந்த குண்டுவெடிப்புக்காக  கைதி செய்யப்பட்ட 5 பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் நிரபராதிகள் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவர்களை விடுவித்துள்ளது.

சதிச்செயலை அரசு நிரூபிக்க தவறிவிட்டதால் முக்கிய குற்றவாளியான மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட டாக்டர் அப்துல் ஹமீதுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். வானத்தை மேகம் மறைக்கலாம் அதனால் 20 ஆண்டுகாலம் மறைத்துவிட்டது. வெகுகாலம் மறைத்து இருக்க போவதில்லை. அவர்கள் ஜெய்பூர் மத்திய சிறை சாலையில் இருந்து வெளியில் வந்தார்கள்.

1996ல் நடந்த சாமல்ட்டி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்தது. ஜூலை 16ம் தேதி செவ்வாய் மாலை லத்தீப் அகமது பஜா வயது 42, அலிபட் 48, மிர்ஸா நிசார் 39, அப்துல் கோணி 57, ரயீஸ் பேக் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் இதில் பேக் மட்டும் 1997 ஜூன் 8லிருந்து சிறையில் இருந்தார் மற்றவர்கள் ஜூன் 17 , 1996 ல் கைது செய்யப்பட்டு ஜூலை 27 அத ஆண்டு கிராக்கிரகத்தில் அடைக்கப்பட்டனர் டெல்லி, அஹமதாபாத் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பரோலிலோ பிணையிலோ அவர்கள் ஒருபோதும் வெளியே வந்ததில்லை. இவர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத்தவறியதோடு மரணதண்டனை உறுதி செய்யப்பட முக்கிய குற்றவாளி டாகடர் அப்துல் ஹமீது உடன் தொடர்பு உடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு சிறிதும் ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ இந்த 5 பேரையும் கைது செய்யும் வரை அவர்கள் யார் என்பதே தெரியாது என ஒவ்வொருவரும் தெரிவித்தனர். பேக் ஆக்ராவை சேர்ந்தவர். கோணி ஜம்மு காஷ்மீரின் போடா பகுதியை சேர்ந்தவர். மற்றவர்கள் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் சிறைக்கு வருவதற்கு முன்பு பட் கார்பெட் வியாபாரம் செய்து வந்தார். பஜா காஷ்மீர் கைவினை பொருட்களை டெல்லி காட்மாண்டு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருபவர் நிசார் 9ஆம் வகுப்பு மாணவர். கோணி பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.

“இந்த உலகில் நாங்கள் விடுக்கப்படுவோம் என் நினைத்ததே இல்லை எனது தாய் தந்தையர், இரண்டு மாமாக்கள் இந்த காலகட்டத்தில் இறந்துவிட்டனர். இப்போது விடுவிக்கப்பட்டுள்ளோம் அந்த ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?” என்கிறார் பேக்.  “எனது சகோதரிக்கு திருமணம் முடிந்த போது சென்றேன். இப்போது எனது மருமகளின் திருமண நேரம். சிறைவாசலில் இருவர் வந்து அவரை அணைக்கின்றனர். ஒருவர் அவரது மகன் ரிஸ்வான், மற்றவர் அவரது சகோதரர் சலீம், நாங்கள் இத்தனை ஒரு போதும் நம்பிக்கை இழக்கவில்லை என்கிறார் கண்ணீரை துடைத்தபடியே. முந்திய இரவு நன் உறங்கவும் இல்லை உண்ணவும் இல்லை எதிர்பார்ப்புடன் இருந்தேன்” என்கிறார் நிசார் 16 வயதில் குற்றம் சுமத்தப்பட்டேன். ஆனால் அதிகாரிகள் என்வயதை 19 என வழக்கில் குறிப்பிட்டனர் தற்போது 39 வயதாகும் தீர்மானம் செய்து புதுவாழ்வை துவக்க எண்ணுகிறேன் என்கிறார்

பஜா திருணம் செய்ய மாட்டேன் என்கிறார். தமது வழுக்கை தலைக்கு யார் பெண் தரப்போகிறார்கள் என்கிறார். அவருக்கு செல்பேசி கடை வைக்க ஆசை. ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் அவருக்கு பொருளாதார உதவி செய்து நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் என அதன் தலைமையகத்தில் வேண்டுகோள் வைக்கிறார்.

குற்றப்பத்திரிக்கை இவ்வாறு குறிப்பிட்டது, “ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் 1996ல் சவாய்மன் ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருந்ததாக குறிப்பிட்டது. எந்த அடிப்படையுமின்றி பல்வேறு வழக்குகளில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டது போன்று எவ்வித ஆதாரங்களும் இல்லையென்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 23 ஆண்டுகளுக்குப்பிறகு.

இதுகுறித்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஷாஹித் ஹசன் கூறுகிறார், “இந்த தாமதத்திற்கு காரணமே விசாரணை தொடங்க ஏற்பட்ட காலதாமதமே என்கிறார். 2011ல் தான் இந்த விசாரணை தொடங்கியுள்ளது சாமல்ட்டி குண்டு வெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் முதலில் 7பேர் விடுவிக்கப்பட்டனர். 2014ல் ஒருவா விடுவிக்கப்பட்டார். 6பேர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர் அன்ஹா 6பேரில் டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஜாவீத்கான் மட்டும் திஹார் சிறையில் இருக்கிறார் மற்றும் இருவரில் ஒருவர் இறந்துவிட்டார் நீதிபதிகள் சபீனா , கோவர்த்தன பர் தார் கொண்ட அமர்வு டாக்டர் அப்துல் ஹமீது என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்தும் சலீம் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறியுள்ளது.

பஜா தனது கடந்த கால சிறை வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார். “தானும் நிசாரும் வழக்கமாக உடல் பயிற்சி செய்பவர்களாக இருந்துள்ளனர். இவர் குர் ஆணை கையால் எழுதும் அளவுக்கு திறன் படைத்தவர்களாக இருந்துள்ளார். அவ்வாறு குர்ஆணை இரண்டு தடவை பிரதியெடுத்துள்ளர். ஒன்றை ஸ்ரீ நகரில் உள்ள தமது வீட்டுக்கு கொண்டு சென்றார். அவனது இளமை வாழ்க்கை முழுவதும் கடந்துவிட்டது. பெற்றோர்களும் இறந்துவிட்டனர். அவன் அழுதழுது அவனது கண்ணீரும் வற்றிவிட்டது.” என்கிறார்.

கோணியின் 62 வயது சகோதரி சுரையா. அவர் ஜம்முவில் இருந்து அலைபேசியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தவை சகோதரன் விடுதலை ஆவதற்கு முன்தினம் அவரது இதயம் வேகமாக அடிக்கத்தொடங்கியது. அவர் வீடு வந்து சேரட்டும் விரிவாக பேசுறே என்கிறார். இனி விரிவாக அவர் பேசக்கூடும். வழக்கு மே 22ஆம் 1996 ஜெய்பூர் ஆக்ரா நெடுஞ்சாலையில் தவுசா அருகிலுள்ள சமால்ட்டி கிராமத்தில் ஆக்ராவில் இருந்து பிகானீர் நோக்கி வந்த பேருந்தில் குண்டு வெடித்து 14 பேர் பலியானார்கள். 37 பேர் காயமடைந்தனர். 13பேர் கொல்லப்பட்ட லஜ்பத் நகர் குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள் இது நடந்தது.

குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ஒருவரையொருவர் பார்த்ததுகூட கிடையாது என்பது அதிரவைக்கும் உண்மையாகும்
19 வயதில் கராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட மிர்சா நிசார் உள்ளிட்ட அணைத்து நிரபராதிகளுக்கும் அவர்கள் இழந்த கால் நூற்றாண்டு கால வாழ்வை ஈடு செய்யும் விதமாக இந்திய அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என நிசார் சகோதரன் இபதிகார் மிர்சா குமுறுகிறார்.