குருவியின் கண் மட்டுமே தெரிந்த
அர்ச்சுனனுக்குத் தெரியவில்லை
அதன் உயிர்
*

நான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்
அய்க்கூ!
*

தீக்குச்சியை உரசிய
அதே கணத்தில்
வானத்தில் மின்னல்!
*

மாதுளையை உதிர்த்தபோது
பார்த்தே பார்த்துவிட்டேன்
ஒரு கணம்… கடவுளை!
*

ஊருக்குப் போகிறேன்
வானம்
பார்க்க வேண்டும்
*
தவளை கத்துகிறது
தண்ணீர்…
ண்ணீர்…
ணீர்…
*
கசியுமா கண்ணீர்
நெற்றிக் கண்ணில்…
*
யாருமற்ற குளத்தின் படிக்கட்டு
மெல்ல இறங்கிக்கொண்டிருக்கிறது
வெளிச்சம்
*
கடந்து செல்லும்
ஒவ்வொரு தெருவிலும்
ஒவ்வொரு சூரியன்
*