லக வெப்ப மயமாதல் எல்லாவற்றையும் மாற்றுகிறது. நாமும் இதைப் பயன்படுத்தி புதிய தாவரங்களைப் பயிரிடவேண்டும்.

தென் கொரியாவில் இருக்கும் ஜெஜூ தீவில் விவசாயிகள்  பருவநிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதற்கு அவர்கள் அஞ்சாமல் அதை ஒரு வாய்ப்பாக எண்ணுகிறார்கள். இதற்கு முன் சாத்தியமில்லாத புதிய பயிர்களை இப்போது அவர்கள் விளைவிக்கிறார்கள் இதுவரை உண்ணாத உணவுகள் கிடைக்கின்றன.

உதாரணமாக வெப்பநிலை அதிகமாகிக்கொண்டே இருப்பதால் இப்போது அவர்கள் காஃபி பயிரிடுகிறார்கள். சாதாரண வானிலையின் போது  பாக்டீரியாவும் தாவரங்களை அழிக்கும் நோய்களும் இருக்கும். அதனால் பூச்சிகொல்லிகள் இல்லாமல் பயிரிடுவது சாத்தியம் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது இந்த மாற்றத்தால் குறைவான பாக்டீரியாக்கள் இருப்பதால் பூச்சிகொல்லிகள் தேவைப்படவில்லை என்றும் மேலும் அவர்கள் பப்பாளி, தேங்காய், கரும்பு மற்றும் அவகாடோ என அந்த மண்ணில் விளையாத பயிர்களைப் பயிரிடுகிறார்கள்.

 

இருப்பினும் உயரும் தட்பவெப்பத்தால் அங்குள்ள காடுகளின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்பட்டு பல தாவர இனங்கள் அழியக்கூடிய ஆபத்திலிருக்கின்றன. ஆனாலும் அம்மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் அங்கு வழிவழியாக  சொல்லப்படும் கதைகளையும் புனைவுகளையும் இந்த மாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

அப்படி ஒரு சிட்டுக்குருவியின் கதை உள்ளது. அதில் அந்த குருவி தன் முதுகில் தண்ணீரைச் சுமந்துகொண்டு வந்து கொழுந்துவிட்டு எரியும் அந்தக் காட்டை அணைக்க முயல்கிறது. அந்த சிறு குருவியின் நம்பிக்கையைப் போலவே எல்லோரும் முயன்றால் நம்மால் இதிலிருந்து மீண்டு வரமுடியும் என்று சொல்கிறது.

நமக்கும் இந்த இயற்கைக்கும் பெரும் தொடர்புள்ளது. நாம் அதை அழிப்பதன்மூலம் நம்மை மட்டுமல்ல மொத்த உயிரினங்களையும்  சேர்த்தே அழிக்கிறோம்.

விரைவாக நடக்கும் இந்தப் பருவநிலை மாற்றத்தால் இன்னும் நிலைமை மோசமடையவே வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இவர்களின் இந்த புதிய பயிர்கள் எனும் நோக்கத்தால் இந்தப் பகுதி ஒரு மிதவெப்ப மண்டலமாக 2020-இல் மாறிவிடும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள்.

இன்று இந்த அபாயம் உலகம் முழுவதுமே உள்ளது. பூமியின் தன்மை மாறிவிட்டது. தொடர்ந்து இங்கு நாம் வாழ வேண்டுமெனில் நாமும் அதற்கேற்ப மாறியே ஆகவேண்டும். பல்வேறு நாடுகளில் இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டது. நாமும் இங்கு நிலவும் சூழ்நிலை மற்றும்  தட்பவெப்பத்தை கணித்து புதிய பயிர்களை விளையச் செய்வதே இதற்கான நீண்டகால தீர்வாக இருக்கமுடியும். நாம் இதில் தனியாக இல்லை நமக்கான ஒரு அற்புதமான ஆரம்பத்தை இந்த கொரியா விவசாயிகள் கொடுத்திருக்கிறார்கள்.

 

 

 

 

 

-ஹேமன்