காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்போர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருக்கும் பகுதியில் இந்திய ராணுவத்தினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார். பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினர் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் பிடிபடலாம் என்றும் தகவல்.

சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி அந்தப்பகுதியைச் சேர்ந்த நபர்தான் என்று அப்பகுதி காவல்துறையினர் மூலம் தெரியவந்துள்ளது. பாரமுல்லா சோப்போர் பகுதி தீவிரவாதிகள் அதிகமுள்ள பகுதியாகும். அங்கு அடிக்கடி இதுப்போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அப்பகுதில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிலுள்ள அரசு கல்லூரியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.