நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திராயன்-2 என்ற ஒரு செயற்கைக்கோள் 2019 தொடக்கத்தில் நிலாவிற்கு அனுப்பப்படும் என்று சென்ற ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிமையம் தெரிவித்திருந்தது. இதன் நோக்கமாக தற்போதைய அறிவிப்பின்படி சந்திராயன்-2, ஜூலை 16, 2019 அன்று விண்வெளிக்கு அனுப்ப அனைத்தும் தயாராக உள்ளது என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த செயற்கைக்கோள் நிலாவில் செப்டம்பர் 06, 2019 அன்று சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளது

சந்திராயன்-2 எதற்காக விண்ணில் ஏவப்படுகிறது?

இதற்கு முன்னரே சந்திராயன்-1 என்ற ஒரு செயற்க்கைகோளை 2008இல் விண்ணில் ஏவப்பட்டு நிலாவில் உள்ள நீர் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்ததில் தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிபடுத்தியது.

இதனைத்தொடர்ந்து சந்திரனில் உள்ள நிலத்தினுடைய அமைப்பு (Topography), கனிப் பொருளியல் (Mineralogy), அடிப்படை வளங்கள் (Elementalabundance), சந்திர கிரகணம் (Lunar eclipse), ஹைட்ராக்சில் (Hydroxyl) மற்றும் நீர்-பனி (Water-ice) போன்றவைற்றின் தரவுகளை அறிந்து சேகரிக்க சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த சந்திராயன்-2, 3290 கிலோ எடை கொண்டதாகும். இதில் Orbiter,Lander,Rover என்ற மூன்று செயல்முறைகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் orbiter மற்றும் lander இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட ஒரு தொகுதியாக GSLV MK-III (Geosynchronous Satellite Launch Vehicle MK-III) என்ற வெளியீட்டு சாதனத்தின் உள்ளே வைக்கப்பட உள்ளது, இதில் rover என்பது lander-ன் உள்ளே அமைத்துள்ளது.

இது விண்ணில் ஏவப்பட்ட பிறகு சந்திரனின் மேற்பரப்பில் 100 கி.மீ தொலைவை நெருங்கி, பின்னர் தனது சுற்றுபதையிலிருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்கி(lander)ஆறு சக்கரங்களைகொண்ட ரோவரை (Rover) பயன்படுத்தி நிலாவில் சுற்றிவரும் எனக்கூறப்படுகிறது. இது சுற்றிவரும்போது எடுக்கப்படும் தரவுகளை நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் எனவும், இத்தரவானது நிலாவில் உள்ள மண்ணின் பகுப்பாய்விற்கு உதவும் எனவும் கூறபடுகிறது.