ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சேர்ந்து பாஜகாவிற்கு ஓட்டுக்கேட்பதுபோல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ek Bihari 100 Pe Bhari என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 40000 பாளோயர்கள் கொண்ட இந்த வலைபக்கத்தில் 5000 பேர் இப்புகைபடத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் நாளுக்குநாள் மற்ற பக்கங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுவருகிறது.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி மும்பையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் சிலரால் இருவரும் சேர்ந்து நிற்பதுபோல் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அப்புகைப்படத்தில் காவி நிறத்திலான துண்டை இருவரும் தோள்களின் மேல் போட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படத்தை தற்போது பாஜகாவின் தீவிர போட்டோ ஷாப் ரசிகர்கள் மாற்றி எடிட் செய்து, அந்த காவி நிற துண்டில் ‘vote for BJP’ என்ற வாசகத்தை இடம்பெற செய்துள்ளன.

 

இந்த உண்மை அறியாத சிலர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே மோடியின் பிரச்சாரத்தில் சுனாமி அலைபோல் மக்கள் திரண்டுள்ளதாக போட்டோஷாப் செய்த இந்த காவி பாய்ஸ் மேலும் மேலும் கிரியேட்டிவாக பலபுகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.