திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அதிநவீன குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி நேற்று (05 நவம்பர்) தொடங்கி வைத்தார்.
இதற்கான துவக்கவிழா நிகழ்ச்சி நேற்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்தக் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 54 இருக்கைகள் கொண்டுள்ளது. காலை 4.30, பகல் 11.30, மாலை 6.30 மணிக்கு என ஒருநாளைக்கு மூன்று முறை திருநெல்வேலி – மதுரை இடையே செல்லும். நெல்லை – மதுரை இடையேயான இந்தப் பேருந்தில் பயணச்சீட்டுக் கட்டணம் ரூபாய் 190 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பைப் பொருத்து இந்தச் சேவை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று விழுப்புரம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்தின் புகைப்படம்: