நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது 2019, மே 22-ல் பிஎஸ்எல்வி-சி46(PSLV-C46),என்ற செயற்க்கைகோளை விண்ணில் ஏவ உள்ளது. இது பி.எஸ்.எல்.வி- யின் 48 வது செயற்கைக்கோளாகும். அதுமட்டுமல்லாமல் பி.எஸ்.எல்.வி- யின்திட ஸ்டிராப்-மோட்டார்கள் (solid strap) இல்லாமல் தனி கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 14 வது விமானம் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது ராடார் இமேஜிங் புவியியல் கண்காணிப்பிற்காக (RISAT-2B) ஸ்ரீஹரிகோட்டா, சத்ஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(SDSC) முதல் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு மே,22 ல்அதிகாலை 5.25 மணி நேரத்திற்குள் ஏவ திட்டமிட்டுள்ளது. பிஎஸ்எல்வி-சி46 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 72 வது ஏவுகணைத் திட்டமாகும். RISAT-2B, 555 கிமீ சுற்றுப்பாதையிலும், 37 டிகிரி சாய்வில் வைக்கப்படும்.

PSLV-C45 ஏவுதளத்தில் செய்ததைப் போல, நமது விண்வெளி ஆராய்ச்சி மையமானது ஸ்ரீஹரிகோட்டா சத்ஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்போது மக்கள் பார்வையிட புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்துள்ளது. இதை பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்வதற்குபிஎஸ்எல்வி-சி46 ஏவுவதற்கு, 5 நாட்களுக்கு முன்னதாகவே துவங்கும் என்றும் வின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.