இந்த உலகில் இன்றும் பல்வேறுவிதமான ஆராய்சிகள்  நம்மை சூழ்ந்து வந்தாலும், விண்வெளி ஆராய்ச்சிக்கென்று ஒரு தனி வகையான புதுமை, வியப்பு இருந்துபடியே உள்ளது. இன்றைய நவீன உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. இதில் அமெரிக்காவைச் சார்ந்த ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) என்ற ஒரு தனியார் நிறுவனம் Cape Canaveral விமானப்படை நிலையத்தில் உள்ள விண்வெளி வெளியீடு காம்ப்ளக்ஸ் 40 (Space Launch Complex -40)-ல் இருந்து 60 ஸ்டார்லிங்க்(starlink) செயற்கைக்கோளை மே 23, 2019 அன்று 10:30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது உலகமுழுவதுமான இணையதள மேம்பாட்டிற்காகவும் மற்றும் கம்பியில்லா பிராட்பேண்ட் (wireless Broadand), (நம்பகமான, மலிவான) இணைப்பிற்க்காகவும் இது ஏவப்பட்டுள்ளது.

இதில் பால்கன் 9(Falcon 9) என்ற விண்கலன், 2018 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட டெல்ஸ்டார் 18 VANTAGE மற்றும் 2019 ம் ஆண்டில் ஏவப்பட்ட இரிடியம் 8 போன்ற பணிகளுக்கு இது ஆதரவாக இருந்துள்ளது. இதன் பயனாக தற்பொழுது பூமியின் சுற்றுப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களின் இணையத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் குறைந்த இடைவெளி மற்றும் உயர் அலைவரிசை பிராட்பேண்ட் சேவைகளுடன் இறுதி பயனர்கள் வரை பாதுகாப்பு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“Of Course I Still Love You” – “நிச்சயமாக நான் உன்னை இன்னும் நேசிக்குறேன்”  என்ற வாசகத்த்தில் பால்கன் 9 ஏவுகணையை அட்லாண்டிக் பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஸ்டார்லிங்க் 60 செயற்கைக்கோள்களும் விண்ணில் பாய்ந்துள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளும் ஏறத்தாழ 227 கி.கி எடையைக் கொண்டுள்ளது. இதனால் பால்கன் 9 தனது உந்து சக்தியை முதல் கட்டத்தில் முழு அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். இது சுமார் 440 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு மீண்டும் உந்து சக்தியைப் பயன்படுத்தி 550 கிமீ தொலைவில் நிலைநிறுத்த உள்ளார்கள்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தன்னியக்கமாக மோதலைத் தவிர்க்கும் திறனைக்கொண்டுள்ளது. இருந்தாலும் ஒருசில சிக்கல்கள் வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தனது வேலைபாடுகள் முடிந்துடன் விண்வெளியில் எறிந்துவிடும் அளவிற்கு இதை SpaceX வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவன தலைவர் எலோன் மஸ்க் கூறியுள்ளார்.