இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சரிவு சகிப்பின்மை குறித்து அபிஜித் பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாகப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசிடம் சரியான பொருளாதார திட்டங்கள் இல்லை, என்று கூறி உள்ளார். முக்கியமாக ஏழைகளிடம் பணம் சென்று சேர்வதற்கான சரியான திட்டங்கள் அரசிடம் இல்லை என்று நிறையப் புகார்களை இவர் அடுக்கடுக்காக தெரிவித்தார்.

இவர் இடதுசாரி கொள்கை கொண்டவராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்று இவருக்கு எதிராக நிறைய பாஜக பிரமுகர்களிடமிருந்து புகார்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அபிஜித் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தற்போது அபிஜித் பானர்ஜி மொழிக்கொள்கை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் நாட்டில் இப்போது கலவரங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. வேற்றுமைகளைப் பொறுத்துக் கொள்ளாமல் மக்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தாக்குதல் உடல் ரீதியாக மட்டும் இந்த தாக்குதல்கள் நடக்கவில்லை. மனரீதியாகவும், பண ரீதியாகவும் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஆனால் அதையே தற்போது சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மொழி கிடையாது இந்தியா என்பது ஒரு மொழி கிடையாது, ஒரு மதம் கிடையாது, நமக்கு ஒரு எதிரி கிடையாது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் அதை மதிக்க வேண்டும். நம்முடைய சிறப்பே அதில்தான் இருக்கிறது. நாம் பெரிய ஆபத்தில் இருக்கிறோம். 1.3 பில்லியன் மக்கள் 122 மொழிகளுக்கும் அதிகமாகப் பேசுகிறார்கள். அதிலும் மக்கள் பேசும் முறை மாறுபடுகிறது . நம்முடைய கலாச்சாரம் மாறுபடுகிறது. திராவிடர்கள் தொடங்கி மங்கோலியர்கள் வரை நம்மிடையே பல இனக்குழு உள்ளது. இதை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும், என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் குறித்து அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ள கருத்துக்கள்:

தற்போது நாட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், அதற்கு நாம் கவலைப்பட வேண்டும்.
அதில் நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையையே பின்பற்றி வருகின்றோம்” என்றார்.

மேலும், “வங்கித்துறையில் ஒருநாள் முன்னேற்றம் ஏற்பட்டால்; அத்தநாள் திடீரென நெருக்கடி ஏற்படுகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே அது ஏற்படாமல் தடுக்க வேண்டும். வங்கி கொள்கையில் முக்கியமான மற்றும் தீவிரமான மாற்றங்கள் செய்வது அவசியம் என நான் கருதுகிறேன்.

பொதுத்துறை வங்கிகளில் அரசானது தனது பங்கை 50 சதவீதத்துக்கும் கீழாகக் குறைக்க வேண்டும். அப்போது தான் அவை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் எல்லைக்கு வெளியே வர முடியும்.” என்று அறிவுரை வழங்கினார்.