நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற காலம் முதல் ஜனவரி 2019வரை கிட்டத்தட்ட 240 அதிகாரபூர்வமற்ற பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணங்களுக்கான செலவு மட்டும் இந்திய விமானப்படைக்கு பாஜக அரசு 1.4கோடி அளித்துள்ளது.
மேலும் இந்திய விமானப்படை எந்தவித குறிப்பிட்ட வரையறையின் அடிப்படையில் இந்த பயணச் செலவை பட்டியிலிடவில்லை.
உதாரணத்திற்கு பலங்கீரிலிருந்து பத்தாரெராவிற்கு என்ற இடத்திற்கு மோடியின் பயணச் செலவாக ரூ.744 அளித்துள்ளது. பலங்கிர் மாவட்டத்திற்கு வணிகரீதியாக எந்த வழியும் இணைக்கப்படவில்லை. இருப்பினும், தில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்கீட்டுத்துறையால் நிர்வகிக்கப்பட்ட பொருத்தமற்ற இந்தப் பயணத்தின் செலவு எப்படி கணக்கிடப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
விளக்கபடாத கணக்கீடுகள்
இதேபோல் சண்டிகர்-சிம்லா-அன்டலேல்-சண்டிகருக்கு ஏப்ரல் 27, 2017 அன்று பயணம் செய்ததற்கு ரூ 845 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழியில் பயணம் செய்வதற்கு அதாவது மற்ற வணிகரீதியான விமான சேவை செலவு கிட்டத்தட்ட 2500லிருந்து 5000வரை ஆகும். இருந்தும் இது என்ன கணக்கென்று புரியவில்லை.
இதுகுறித்து இந்திய விமானப்படை கூறுவதாவது, “அனைத்து அதிகாரபூர்வமற்ற பயணத்திற்கும் இந்திய பாதுகாப்புத்துறையே பொறுப்பாகும்.” என்று கூறியுள்ளது மேலும் பாதுகாப்புத்துறையின் குறிப்பாணைப்படி மார்ச் 1999ஆம் ஆண்டு பழைய ஆணை புதுபிக்கப்பட்டது. இவ்வாணை கடைசியாக மார்ச் 7 2018 அன்று புதுபிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு புதுபிக்கப்பட்ட குறிப்பாணைபடி, “இந்திய பிரதம மந்திரி அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்குக்கூட இந்திய விமானப்படையை உபயோகப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் அனைத்து அதிகாரபூர்வமற்ற பயணச் செலவுகளும் கணக்கெடுக்கப்படும். அந்தப் பயணங்கள் வணிகரீதியான வழிதடங்களாக இருந்தால் வழக்கமான பயணச் செலவே கணக்கிடப்படும் என்றும் வணிகரீதியாக இல்லையென்றால் பயணிகள் மற்றும் கிலோமீட்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அவ்வப்போது விமான தலைமையகத்திற்கு தகவல் அளிக்கப்படும் என்றும் குறிப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறும் இந்திய விமானப்படை, ஐந்தாண்டு காலத்தில் மோடி பயன்படுத்திய “BBJ [போயிங் வர்த்தக ஜெட்] மற்றும் MI-17 (VVIP) [ஒரு ஹெலிகாப்டரின் பயணச் செலவை மட்டுமே கணக்கிட்டுள்ளது. பயணிகள் மற்றும் கிலோமீட்டர் அடிப்படையில் எந்தவித செலவு கணக்கையும் இந்திய விமானப்படை அளிக்கவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையில் மோடி 128 அதிகாரபூர்வமற்ற பயணங்களுக்கு 89 லட்சம் செலவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது
பிரதமரை பொறுத்தவரையில் இந்திய விமான படை, ஏர் இந்தியா மற்றும் ஹெலிகாப்டர்கள் அல்லது சிறிய விமானங்கள் என அனைத்துச் சேவைகளும் தொலைதூர இடங்களுக்குச் எந்தவித கணக்கும் இல்லாமல் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
scroll.in இணைதளம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 240 அதிகாரப்பூர்வமற்ற பயணங்களும் மோடியின் முறையான திட்டமிடலோடு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மாநிலம் என்ற விதத்தில் இப்பயணங்கள் நடந்துள்ளது. மேலும் இந்தப் பயணங்கள் அனைத்திற்கு பாஜக அரசு பணம் செலுத்தியுள்ளது. பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து டிடி மற்றும் செக் மூலமாக இந்த பணம் பெறப்பட்டதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.
இந்த பயணங்களின் நோக்கம்
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக திரிபுரா, மேகலாயா, நாகலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் கர்நாடாகவிற்கு மே மாதத்திலும் சட்டிஸ்கர் மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்திலும் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு டிசம்பர் மாதத்திலும் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு மட்டும் மோடியின் பயணங்கள் கணக்கின்றி உயர்ந்துள்ளது. 37 நாட்களில் 69 பயணங்கள் சென்றுள்ளார். இந்த 69 பயணங்களுக்கு 40லட்சம் வரை செலவாகியுள்ளது அதையும் பாஜக அரசு இந்திய விமானப்படைக்கு கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற பயணங்கள் அனைத்தும் நவம்பர் மாதத்தில்தான் நடந்துள்ளது 13 நாட்களில் கிட்டத்தட்ட 25 பயணங்கள் செய்துள்ளார் மோடி.
பதிலளிக்கப்படாத கேள்விகள்
அத்தனை அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கும் இந்தியவிமானப்படை மோடியின் செலவு பட்டியலை சரியாக குறிப்பிடவில்லை. உதாரணமாக இந்தூர்-ஜாபூவா- இந்தூர்-மண்ட்சோர்-உதய்பூர் இடங்களுக்கு சென்ற அதிகாரப்பூர்வமற்ற பயணங்களுக்கு வெவ்வேறு தொகையை பட்டியலிட்டுள்ளது.
(ஏப்ரல் 2 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு Scroll.in, மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய வானூர்திக்கு மின்னஞ்சல் அனுப்பிய கேள்விகளுக்கு இந்தப் பயணங்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டன என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் ஏப்ரல் 15 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு கேள்விகள் அனுப்பப்பட்டன. இதுவரை மின்னஞ்சல்கள் பதில் கிடைக்கவில்லை.)