உலகில், வளர்ந்த நாடுகளில் பட்டியலில் சீனா முக்கியப் பங்குவகிக்கிறது. அமெரிக்க, சீனா, ரஷ்யா, உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கிடையே எப்போதுமே ஒரு பனிப்போர் நிலவிக்கொண்டே இருக்கிறது. இதனால் நாடுவிட்டு நாடு பரவும் நோய்களுக்கான காரணமாக பல வதந்திகள் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எங்கியிருந்து பரவி இருக்கலாம் என்ற கேள்வி உலக விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பலர் விலங்குகளின் மூலமாகவும் நீர்வாழ் உயிரினங்கள் மூலமாகவும் பரவியதாக தகவல் அளித்திருந்தாலும், கொரோனாவின் ஆணிவேராக ஏற்கனவே பரவிய எபோலா மற்றும் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட நோய்களை குறிப்பிடுகின்றன ஆய்வாளர்கள். இதன் ஒரு பகுதியாக சீன ஆய்வகங்களிலிருந்து இந்த வைரஸ் திட்டமிட்டு பரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பு உலகெங்கும் பரவியிருக்கும் இச்சூழலில் சீன ஆய்வகங்களில் விதிவிலக்காக சில முரண்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட கொடூரமான வைரஸ் வகைகளை கையகப்படுத்தும் திறமையும் ஆற்றலும் சீன அரசுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஸ், எபோலா, ஆந்தரக்ஸ் உள்ளிட்ட நோய்களைப்போலவே சீன அரசு திட்டமிட்டு இவ்வகை நோய்கிருமிகளை உலகமெங்கும் பரப்பும் வாய்ப்புள்ளதாக உயிரியல் போரில் (biological warfare) சிறந்த நிபுணர்கள் கூறுகின்றனர். “கடந்தகால வரலாற்றை எடுத்துப்பார்த்தாலே நாம் புரிந்துகொள்ள முடியும் இவ்வகை மனித நோய் தொற்றுக்கிருமிகள் எங்கியிருந்து பரவுகின்றன என்றால் முறையான அனுமதி இல்லாத சீன ஆய்வகங்களிலிருந்துதான்.” என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீன ஆய்வகங்கள்தான் பல விலங்குகளையும் நீர்வாழ் உயிரினங்களையும் தெரு வியாபாரிகளிடமிருந்து வாங்கி ஆய்வுக்குட்படுத்துவதாக கூறுகிறார்.
அதாவது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விலங்குகளையும் சில உயிரினங்களையும் சரியான முறையில் தகனம் செய்யாமல் மீண்டும் அவர்கள் வாங்கிய இடத்திலேயே குறைந்த விலைக்கு விற்பதனால் இந்நோய் பரவ வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றன.
மிக குறிப்பிட்டு இந்த நோய் பரப்பப்பட்டதா அல்லது தெரியாமல் இந்த தவறை சீன ஆய்வகங்கள் மேற்கொண்டதா என்று தெரியவில்லை ஆனால் பலியாகும் ஒவ்வொரு உயிருக்கு சீன அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும்.
நன்றி: https://bit.ly/2Vt0NOz