தாய்லாந்து :  பிரதமர் வேட்பாளர் பட்டியலிலிருந்து தாய்லாந்து இளவரசி உபோல்ரதனா பெயர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து அதிர்ச்சியில் உள்ளார் இளவரசி.

தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை  எதிர்த்து மக்கள் போராடிய நிலையில், ஜனநாயக ஆட்சியை கொண்டு வரும் முனைப்பில் கடந்த ஜனவரி மாதம் தாய்லாந்து நாட்டு மன்னர் மகா வாஜிராலோங்கோர்ன் ( Maha Vajiralongkorn  )  தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் வரும் மார்ச்  24 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், தாய் ரக்ச சர்ட் ( Thai Raksa Chart ) கட்சி சார்பில் பிரதமர் வேட்பளராக தாய்லாந்து இளவரசி உபோல்ரதன  அறிவிக்கப்பட்டார். அனால் அரச குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட கூடாது எனவும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும்  மன்னரும், உபோல் சகோதரருமான மகா வாஜிராலோங்கோர்ன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உபோல் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உபோல் பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.