2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் நிலவுகிறது. இது பங்குச் சந்தையில் எதிரொலித்தது.

எஸ் & பி பி.எஸ்.இ சென்செக்ஸ் 791 புள்ளிகள் பெற்று 39,901 ஐத் தொட்டது.

என்.எஸ்.இ நிஃப்டி 231 புள்ளிகள் பெற்று 11,968 ஐத்  தொட்டது.