மசூதிகளில் எந்தவித தடையுமின்றி பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மத்திய வக்பூ வாரியம் மற்றும் அனைத்து இந்தியா முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியத்திடம் “சபரிமலை தீர்ப்பின் காரணமாக நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28, 2018 உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பான ‘கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கியது.
புனேவைச் சேர்ந்த முஸ்லீம் தம்பதியினர் கொடுத்த மனுவினை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரித்தபோது, “மசூதியில் நீங்கள் வணங்க முயன்றபோது தடுத்து விட்டார்களா” என்று கேட்டது.
மேலும் “மற்றவர்களை அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென்று நீங்கள் கேட்க முடியுமா? தனிநபர்களுக்கு இது பொருந்துமா? நீங்கள் மற்றொரு குடிமக்களிடமிருந்து சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்திய மாநிலத்தில் சர்ச் மற்றும் மசூதிகளில் பாலின சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒருசிலர் உங்களின் வீட்டிற்குள் நுழைய விரும்பவில்லையென்றால் நீங்கள் போலீஸ் தலையிடுமாறு காவல்துறையினரிடம் கேட்பீர்களா? என்று நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.
இந்த மனுவை யாஸ்மீ ஜூபேர் அஹமத் பெர்ஷிடே மற்றும் ஜுபெர் அஹமத் பெர்சடே என்ற தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பினால் ஈர்க்கப்பட்டு மசூதியில் உள்ள பாலின வேறுபாட்டை எதிர்த்து மனுபோட்டதாக தெரிவித்தனர்.
மசோதாவில் பெண்களுக்கு சட்ட விரோதமான அரசியலமைப்பற்ற விதிமுறைகள் மற்றும், “அரசியலமைப்பின் 14,15,21, 25, மற்றும் 29 வது பிரிவுகளை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குர் ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு காட்டவில்லை உண்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இஸ்லாமியம் பெண்களை ஒடுக்கும் மதமாக மாறியுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 2018ல் முஸ்லீம் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்கள் எங்களை மசூதியில் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.