மக்களவைக்கு தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல்கள் ஏழுகட்டங்களாக முறையே ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23 , ஏப்ரல் 29, மே 3, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்கு என்ணிக்கை மே 23 நடைபெற்று புதிய ஆட்சி அமைய விருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள அனைத்து சட்டசபைத் தொகுகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் அன்றைய நிலவரப்படி ஏப்ரல் 18 இடைத்தேர்தல் நடைபெறும் என்றார்.

 

2014ல் 89 கோடியாக இருந்த வாக்களர்கள் எண்ணிக்கை இப்போது 90 கோடியாக உயர்ந்துள்ளது. இளம் வாக்களர்கள் 5 கோடி. 18-19 வயதினரான  வாக்களர்கள்1.5 கோடி.இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வருகின்றன தேர்தலை சுமுகமாக நடத்த ஊடகங்கள் உதவவேண்டும்,   சமூக வலைத்தளங்கள் அரசியல் கட்சிகள் செய்யும் பிரச்சாரங்கள் தணிக்கை செய்யபடும் வேட்பாளர்கள் தங்கள் சமூக வலைத்தள  கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும், வாக்குப்பதிவின்போது யாருக்கு வாக்களித்தோம் என அறியும் இயந்திரங்கள் பொருத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெலியிட்டார்  தேர்தல் ஆணையர்