ஜார்கண்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் மற்றும் சமூக ஆர்வலரான ஜீன் டிரீஸ் என்பவர் இன்று சட்டத்தை மீறி அதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியதாக சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பலதரப்பிலிருந்த் கண்டனக்குரல் எழுந்துள்ளன.
ஜீன் டிரீஸ், இந்திய வளர்ச்சி குறித்து ஆராயும் பொருளியலாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். பெல்ஜியத்தில் பிறந்த இவர் இந்தியாவில் நிலவும் பசி, பட்டினி, பஞ்சம், ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் குழந்தைகள் நலம், கல்வி ஆகியவை தொடர்பான சிக்கல்களை ஆராய்பவர். 1790 களில் இருந்து இந்தியாவில் முன்னணி வளர்ச்சிப் பொருளாதார வல்லுநராக இருந்து வருகிறார்.
இவர் தற்போது ஜார்கண்டில் உள்ள கர்வா மாவட்டதில் சட்டத்தை மீறி அதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். பின்னர், இரண்டு மணிநேரத்திற்கு பிறகு விடுதலையானார்.
இதுகுறித்து ஜீன் டிரீஸ் கூறுகையில், “நான் ஜார்கண்டில் உள்ள கார்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உணவு மற்றும் ஓய்வூதிய உரிமை வழங்கக்கோரி கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பிவிடுத்திருந்தனர். பத்து நாட்களுக்கு முன்னரே இக்கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வழங்குமாறு மனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்காததால் அனுமதியினறி கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது தேர்தலுக்கும் இக்கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் நேரத்தில் உணவுக்கான உரிமை போன்ற சிக்கல்கள் பற்றி அரசியல் சாயமில்லாமல் அமைதியானமுறையில் கூட்டம் நடத்த அனுமதி இல்லையென்றால், ஜனநாயகம் என்பதற்கு பொருள் இல்லை” என தெரிவித்தார்.
மேலும் ஜீனுடன் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஒருவர், “எங்களைக் காவல்துறையினர், ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். அதில் அரசாங்கத்திற்கு எதிராக எந்தவிதமான புகாரும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது” என தெரிவித்தார்.