கர்நாடக முதல்வர் குமராசாமி மற்றும் எடியூரப்பா ஆகியோரை கலாய்த்து பெங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த 8 ஆம் வகுப்பு இறுதி ஆண்டுத்தேர்வில் அரசியல் தலைவர்களை கேலி செய்து கேள்வி இடம்பெற்றுள்ளது.
கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இறுதி ஆண்டுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கன்னட மொழிப்பாடத் தேர்வுக்கான வினாத்தாளில் அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. ‘சரியான விடையைத் தேர்வு செய்க’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள அந்த கேள்வியில்,
விவசாயிகளின் நண்பன் யார்?
அ) மண்புழு ஆ) முதல்வர் குமாரசாமி இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா
என கேட்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வினாத்தாளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் விளையாட்டை தொடங்கிவிட்டனர்.
வினாத்தாள் தயாரித்த ஆசிரியரை பள்ளிநிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. எங்களுக்கு தெரியாமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இதுபோன்று அரசியல் தலைவர்கலை கேலிச்செய்து வித்தியாசமான முறையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.