அமெரிக்கவைச் சேர்ந்த எஸ்.டி.இ.எம் பள்ளிவளாகத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொலராடோ மகாணத்தில் எஸ்.டி.இ.எம் பள்ளியில் இந்தத் தாக்குதலானது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பினர் கைதுசெய்யப்பட்டதாக கூறியுள்ளனர். இப்பள்ளிக்கு அருகில் ஹைலாண்ட் ரான்ஞ் என்ற இடத்தில் அமைந்துள்ள கொலம்பியா ஹை ஸ்கூலில் இருபது வருடத்திற்கு முன்பு இதேபோல் தாக்குதலுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டின் இதுவரை 115 துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
என்ன நடந்தது
சுமார் 2மணி அளவில் பயங்கரவாதிகள் “எஸ்.டி.இ.எம் பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்தனர்.” என்று டௌகலஸ் மகாணத்தைச் சேர்ந்த டோனி ஸ்பார்லக் கூறியுள்ளார். சந்தேகப்படக்கூடிய நபர்கள இருவரும் பப்புள்ஸ் பள்ளியைச் சேர்ந்தவர்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு ஒருமணி நேரம் கழித்தே போலீஸார் வந்ததாக ஸ்பார்லக் கூறுகிறார்.
மேலும் அவர்கள் யாரை தாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை, அனைத்து செயல்களும் விரைவாக நடந்து முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
இதைப்பற்றி ஃபெர்னண்டோ மொண்டொயாவின் பெற்றோர் கூறுகையில் 17 வயதான எனது மகனை அவர்கள் மூன்றுமுறை சுட்டுள்ளனர். கித்தாரில் மறைத்துவைத்து அவர்கள் அந்த துப்பாக்கியை எடுத்துவந்துள்ளனர்.
சம்பவத்தைப் பற்றி கொலராடோ கவர்னர் ஜரெட் போலிஸ் மற்றும் வெள்ளை மாளிகையும் டிவிட்டர் பதிவில் தனது வருத்தங்களைத் தெரிவித்துள்ளனர்.