மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது.

2019 மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன.

திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும்  மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும் என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்று ஆலோசனை நடத்திவந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

திமுக போட்டியிடும் தொகுதிகள்:

1.தூத்துக்குடி
2.தென்காசி
3.நெல்லை
4.திண்டுக்கல்
5.தர்மபுரி
6.பொள்ளாச்சி
7.ஆரணி
8.அரக்கோணம்
9.மயிலாடுதுறை
10.தஞ்சாவூர்
11.கடலூர்
12.ஸ்ரீபெரும்புதூர்
13.திருவண்ணாமலை
14.கள்ளக்குறிச்சி
15.காஞ்சிபுரம்,
16.நீலகிரி
17.வேலூர்
18.தென்சென்னை
19.மத்தியசென்னை
20.வடசென்னை.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

1.கன்னியாகுமரி
2.விருதுநகர்
3.சிவகங்கை,
4.தேனி,
5.திருச்சி,
6.கரூர்,
7.கிருஷ்ணகிரி,
8.சேலம்,
9.திருவள்ளுர்
10.புதுவை.

மதிமுக

1.ஈரோடு

விடுதலை சிறுத்தைகள்

1.சிதம்பரம்
2.விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.மதுரை
2.கோவை

இந்திய கம்யூனிஸ்ட்

1.நாகப்பட்டினம்
2.திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

1.இராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

1.நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி

1.பெரம்பலூர்.

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.