லண்டன் உளவுத்துறையான என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் பரிந்துரையின்பேரில் தற்போது நிரவ்மோடி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு லண்டன் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் அவர் இன்று (20.03.2019) கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகள் வெளியானபின், நிரவ் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
நிரவ் மோடி மீதான முதல் சார்ஜ் ஷீட்டை லண்டன் உளவுத்துறையான என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் முதன்முறை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. விரைவில் அவர் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.