விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும் என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 5) தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் 2019ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து இன்று பேசிய அவர், மகாத்மா காந்தியை பற்றி அனைவரும் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும். கல்வித் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். ரோபடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் ஸ்டார் அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனி நிகழ்ச்சி உருவாக்கப்படும்.” என்று அறிவித்தார்.
மேலும், “ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த 12 ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.” எனத் தெரிவித்தார் நிதியமைச்சர்.