எந்த நேரத்தில் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் காலடி எடுத்துவைத்தாரோ நாட்டின் தலை நகர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இந்துத்துவ குண்டர்கள் என சொல்லப்படுகிற இந்து பயங்கரவாதிகள் போலீஸார் மற்றும் பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒரு காவல் அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) எதிரான போராட்டங்களை ஏனோ எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் அமெரிக்க அதிபரை தாங்கு தாங்கு என்று தாங்க சென்றுவிட்டார்கள் நாட்டின் பிரதமரான மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு லாரி முழுவதும் கற்கள் ஏற்றிக்கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்துடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் நுழைகிறது ஒரு இந்துத்துவ குழு. இந்தக் குழுவின் செயல்கள் சமூக வலைதளம் எங்கும் பரவியது. இதனை டெல்லி போலீஸார் தன்னுடைய வழக்கமான அலட்சிய போக்கால் தவிர்க்கின்றனர்.
இந்தக் கும்பலின் அட்டகாசங்களை திங்கட்கிழமை இரவு ஜாபருல்-இஸ்லாம் கான் (சிறுபான்மை இனக்குழுவின் தலைவர்), என்பவர் டிவிட்டரில் பதிவிடுகிறார், “குறிப்பாக இவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களது கடைகளைச் சூறையாடுகிறார்கள், மேலும் மசூதிகளை ஆக்கிரமித்து பயமுறுத்துகிறார்கள்” என்று பதிவிடுகிறார். எதனையும் கண்டுகொள்ளாமல் டெல்லி போலீஸ் குறிப்பாக ஜாஃர்பாத் போலீஸார் வேடிக்கை பார்க்கிறார்கள். மேலும் பதட்டமான சூழல் டெல்லியின் வடப்பகுதிகளில் ஏற்படுகிறது,
ஒருவரை ஒருவர் கற்கள் கொண்டு தாக்கிக்கொள்வதும் வாகனங்களுக்கு தீவைப்பதும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டெ இருக்கிறது. போலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோமீது தடியடி தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. “எங்களால் என்ன செய்ய முடியும், முழுவதும் தாக்குதலில் ஈடுபட்ட மக்களால் நாங்கள் சூழந்துள்ளோம்” என்று ஒரு போலிஸார் கூறுகிறார். இதற்கடுத்து கூடுதல் போலீஸார் இப்பகுதிகளுக்கு குவிக்கப்படுகின்றனர்.
போராட்டங்கள் தனிந்தபாடில்லை. நகரமெங்கும் தீப்பற்றி எரிகிறது. ஆனால் மோடி அந்நேரத்தில் டிரம்பிற்கு சபர்மதி ஆசிர்மத்தில் நூல் நூற்க கற்று தந்துகொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் பல தலைவர்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா சொல்கிறார் “எங்களது கட்டுப்பாட்டில்தான் டெல்லி நகரம் உள்ளது” என்றார்.
இந்த இந்துத்துவ சக்திகளின் கட்டுபாட்டில்தான் ஒட்டுமொத்த நாடுமே இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதை காட்சிப்படுத்தவில்லை, எந்த செய்திகளும் பரவாத வண்ணம் இவர்கள் தங்களைப் பாதுக்காப்பாக கட்டமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கொதித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நெஞ்சங்களுக்குள் மேலும் மேலும் அனலை இறக்கிக்கொண்டிருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு.
நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தன்மையையும் சூறையாடி யாருக்காக இந்த அரசு இயங்கப்போகிறது என்ற கேள்விக்கு, ‘தீவிர இந்துத்துவ பயங்கரவாதிகள் மட்டும்தான்’ என்ற பதில் கிடைக்க வெகு நாள் இல்லை என்பதே கண்கூடாகத் தெரிகிறது.